Published:Updated:

கொங்கு நாட்டின் அடையாளமே வாழ்க!

நொய்யல் ஆறு
பிரீமியம் ஸ்டோரி
நொய்யல் ஆறு

நொய்யலைப் போற்றிய விதம்!

கொங்கு நாட்டின் அடையாளமே வாழ்க!

நொய்யலைப் போற்றிய விதம்!

Published:Updated:
நொய்யல் ஆறு
பிரீமியம் ஸ்டோரி
நொய்யல் ஆறு

கொங்குநாட்டின் பெருமைமிக்க அடையாளமாகத் திகழ்வது நொய்யல் ஆறு. நொய்யல் பெண்ணிவள் பேரூர், கோவை, சூலூர், திருப்பூர், கொடுமணல் வழியே கரூர் மாவட்டம் சென்று நொய்யல் எனும் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறாள். இவள் ஓடும் தூரம் சுமார் 180 கி.மீ.

நொய்யல் ஆறு
நொய்யல் ஆறு


 மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவைக்கு மேற்கே, சிறுவாணி மலைப்பகுதியின் கிழக்குச் சரிவுகளில் 7 ஓடைகள் பிறக்கின்றன. அவை ஒன்றுசேர்ந்து `குஞ்சரான் முடி' எனப் பெயர் கொண்டு ஓடி, சிறுவாணி அடிவாரத்தில் பெரியாறு என்று பெயர் கொள்கிறது. இது வீழ்ந்தே கோவைக் குற்றாலம் அருவி உருவாகிறது. இதேவேளையில் வடக்கே வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் உருவாகும் 5 ஓடைகள், `மத்திமர கண்டியோடை' எனப் பெயர் கொண்டு பெரியாறுடன் செம்மேடு என்ற இடத்தில் கலக்கும்.

 இதனுடன் கொடுவாய்புடி ஓடை, தூத்துமலை ஓடைகள் ஒன்று சேர்ந்து சின்னாறு எனப் பெயர் கொண்டு ஓடிவரும். இந்த சின்னாறு பெரியாறுடன் சோலைப்படுகை என்ற இடத்தில் கலக்கும். இத்துடன் தொம்பிலிபாளையத்தில் 20 ஓடை களைச் சேர்த்து உருவான தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறு கலக்கும். இப்படி கலக்கும் இடத்திலேயே `நொய்யல்' எனப் பெயர் கொண்ட இந்த நதிப்பெண் உருவாகிறாள்.

பேரூர் படித்துறை
பேரூர் படித்துறை


 கொங்கு மண்டலத்தைச் செழிக்கச் செய்யும் இந்த நொய்யல் நதியில் தடுப்பு அணைகள் 32. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் காலத்திலும், பிறகு பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய இந்த நதி, தற்போது பெருமழைக் காலங்களில் மட்டுமே பல ஆக்கிரமிப்புகளைத் தாண்டி ஓடி வருகிறாள்.

நொய்யலைப் போற்றி
நொய்யலைப் போற்றி


கொங்கு நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரத் திற்கும், விவசாயப் பாசனத்திற்கும் காரணமாக விளங்கும் இவளை, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேரூர் படித்துறையில் கோவை மக்கள் உற்சாகமாய் வரவேற்றார்கள்.

 தாமரை, அல்லி, தும்பை, துளசி, தென்னம்பூ, வாழைப்பூ, பாக்கு, அனிச்சம், கிருஷ்ணக் கமலம், பனை, வெட்சி, கரந்தை, நொச்சி, வாகை, கோரை, மாம்பூ, மல்லி, முல்லை, செவ்வந்தி போன்ற 108 வகையான மலர்களைக் கொண்டு, தமிழில் வாழ்த்துப்பாடல்கள் பாடி, மங்கல வாத்தி யங்கள் இசைக்க, பொன்னியின் தங்கையாம் நொய்யலை அவர்கள் போற்றி வழிபட்டு வரவேற்ற விதம் அனைவரையும் நெகிழச் செய்தது.