Published:Updated:

`அம்பிகையின் சிறுவிரல் மோதிரம் ஆதிசேஷன்' என்றால் பிரபஞ்சத்தில் பெரியது எது? - தினம்தோறும் திருவருள்

தினம்தோறும் திருவருள்
தினம்தோறும் திருவருள்

'அம்பிகையின் சிறுவிரல் மோதிரம் ஆதிசேஷன்' என்றால் பிரபஞ்சத்தில் பெரியது எது ? | Sumathi Sri |தினம்தோறும் திருவருள்

முருகப்பெருமானுக்கும் ஔவைக் கிழவிக்கும் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடந்ததாகச் சொல்வார்கள். முருகப்பெருமான் ஔவையோ இதுபோல உரையாடிய தருணங்கள் அநேகம். அப்படி ஒரு நிகழ்வு இது. முருகப்பெருமான் கேள்விகேட்கிறார். ஔவை பதில் சொல்கிறார். முருகப்பெருமான் கேள்விகளுக்கான விடை தெரியாமல் கேட்கவில்லை. ஔவையின் தமிழ்ப் புலமையும் அறிவுத் திறமையும் இந்த உலகம் முழுக்கப் பரவ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். அதற்காகக் கேள்விகேட்கிறார்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

அரியது எது... இனியது எது... கொடியது எது ... பெரியது எது... எனப் பல கேள்விகளை முன்வைக்கிறார் வேலவன். அதற்கு ஔவை மிக அழகாக பதில்களைச் சொல்கிறார். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்கும் ஔவை பெரியது எது என்னும் கேள்விக்குத் தத்துவப்பூர்வமான விடையினைத் தருகிறார்.

''உலகில் இனியது எது?'' என்னும் கேள்விக்கு...

''இன்ப - துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால், புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும் கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்'' விடை தருகிறார்.

''உலகில் கொடியது எது?'' என்னும் கேள்விக்கு

''வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி, அவனிடத்தில் வறுமை வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால், அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக் கொடியது'' என்றார் தமிழ் மூதாட்டி.

"உலகில் பெரியது எது?'' என்னும் கேள்விக்கு ஔவை அளிக்கும் பதில் மிகவும் விரிவானதும் முக்கியமானதும் ஆகும். இன்றைய தினம் தோறும் திருவருள் நிகழ்ச்சியில் பெரியது எது என்பது குறித்துப் பேசியிருப்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு