Published:Updated:

எமவாதனை போக்கிடும் தட்சிண காளி வழிபாடு! சிறப்புகள் என்னென்ன?

ஸ்ரீ திருக்கோடீஸ்வர சுவாமிக்கு வலது பக்கத்தில் வடக்குதிசை நோக்கியவளாக அருள்புரியும் அன்னைதான் 'வள்ளி மாகாளி' என்ற திருநாமமுடைய தட்சிணகாளி.

நமது நாட்டின் தொன்மையான வழிபாடுகளுள் முதன்மையானது காளி வழிபாடு. தீயவற்றை அழித்திடவும், தர்மத்தினை நிலை நாட்டிடவும் ஆவேசமாக எழுந்தருளும் வீரசக்தியாக அன்னை காளி போற்றப் பெறுகிறாள். காளி ரூபத்தில் பல தெய்வங்கள் இருந்தாலும் அவற்றுள் அஷ்ட காளிகளுள் 'தட்சிண காளியே' முதன்மையானவள்.

திருக்கோடிக்காவல் தலத்திற்கென்றே தனிச் சிறப்பு உண்டு. யமன் செயலற்று ஈஸ்வர பிரக்ஞையிலேயே ஒடுங்கி இருந்த தலமிது. அதனாலேயே இங்கு சிவபெருமானுக்கு மட்டுமே அனுக்கிரக சக்தி உண்டு. ஏனைய தேவதைகள் உக்கிரமானவைகளாக இருந்தாலும்கூட இம்மண்ணில் அவை சாத்வீக குணத்துடனே ஊர் மையத்திலேயே உறைந்தருளுகின்றன.‌

தட்சிண காளி வழிபாடு
தட்சிண காளி வழிபாடு

ஐயனார், முனியப்பர், வீரன் போன்ற எல்லைத் தெய்வங்களும்கூட, இத்தலத்தில் மூலவரைச் சுற்றி ஊருக்குள்ளேயே அமைந்துள்ளன.‌ அவற்றிற்கு எலுமிச்சைப் பழம் பலி மட்டுமே அளிக்கப்படுகிறது. இவ்வூரின் நாற்புறச் சந்திகளிலும் விநாயகர் திருமேனிகளே எல்லையில் உறைந்தருள்வது மற்றுமொரு சிறப்பு.

ஐப்பசி அன்னாபிஷேக மகிமைகள்: சோற்றுக்குள்ளே மறைந்திருக்கும் சொக்கநாதரை தரிசிக்கும் நாள்!

ஸ்ரீ திருக்கோடீஸ்வர சுவாமிக்கு வலது பக்கத்தில் வடக்குதிசை நோக்கியவளாக அருள்புரியும் அன்னைதான் 'வள்ளி மாகாளி' என்ற திருநாமமுடைய தட்சிணகாளி. 

தட்சிண காளி வழிபாடு
தட்சிண காளி வழிபாடு

தன் திருக்கரங்களில் வாள், மணி, கேடயம், சூலம் முதலான‌ ஆயுதங்கள் தரித்தவளாய், உத்குடிகாசனத்தில்  போர்க்கோலத்தில் விளங்கினாலும் மிகச் சாந்தமான‌ திருமுகம் கொண்டவளாக, மங்களரூபிணியாக விளங்குகி்றாள் இவ்வன்னை. காலடியில் அசுரனின் உடல் வீழ்ந்து கிடக்கிறது.  இந்த சம்ஹாரம் நடைபெற்ற இடம் ஒரு தடாகக்கரை. அது இன்றளவும் 'பூதக்குளம்' என்றே வழங்கப் பெறுகிறது. 

'தட்சிணம்' என்றால் தெற்கு. தெற்கு காலனுக்கு (யமன்) உரிய திசை. காளி என்று சொல்லக் கேட்டாலே பயந்து ஓடிவிடுவான் யமன். இப்படி யமதர்மனை அவருக்குரிய திசையை விட்டே ஓடும்படி செய்பவள் என்பதால் காளியானவள் 'தட்சிண காளி' எனப் போற்றப் பெறுகிறாள். சம்ஹார காளியாக இருந்தாலும்கூட சாந்த மயமாக, ஆனந்த ரூபிணியாகக் காட்சித் தருகின்றாள் இந்த 'வள்ளி மாகாளி'.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு