Published:Updated:

தாய்லாந்து பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய திருப்பதி ஏழுமலையான்! #Tirupati

தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த ஹாரிசனும் அவரின் நண்பர்களும் பிரேக் தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக 60,000 கொடுத்துப் பதிவு செய்துவந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி
திருப்பதி

``திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசித்தபோது, நான் அடைந்த பரவசத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது. அந்த நிமிடம் நான் இந்த உலகிலேயே இல்லை'' என்கிறார், தாய்லாந்து நாட்டு பக்தர் ஹாரிசன்.

திருப்பதி
திருப்பதி

உலகம் முழுவதுமுள்ள இந்தியர்கள் பலருக்கும் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கவேண்டுமென்ற பேராவல் இருப்பது நாம் அறிந்ததே. அவர்கள் அமெரிக்காவிலிருந்தாலும் ஆஸ்திரேலியாவிலிருந்தாலும் தாயகம் வரும்போது திருப்பதிக்குப் போய் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால், தாய்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகுதான் இப்படிக் கூறியிருக்கிறார்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஶ்ரீவேங்கடேஸ்வரா ஆலய நிர்மாண டிரஸ்ட் என்னும் `ஸ்ரீவாணி' அமைப்புக்குப் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால், அவர்களுக்கு ஒரு வி.ஐ.பி தரிசன டிக்கெட்டை வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்து ஆன்லைன் வசதியையும் செய்திருந்தது.

தாய்லாந்து பக்தர்கள்
தாய்லாந்து பக்தர்கள்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த ஹாரிசனும் அவரின் நண்பர்களும் பிரேக் தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக 60,000 கொடுத்துப் பதிவு செய்துவந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று (வியாழக்கிழமை) மலையப்பசுவாமியின் நேத்ர தரிசனம் செய்துள்ளனர்.

``என்னுடன் பணிபுரியும் ஒரு நண்பரின் சொந்த வாழ்க்கையில் நீண்ட நாள்களாக அமைதியில்லாத நிலை இருந்துவந்தது. இதனால், அவரால் பணியிலும் சரியாக ஈடுபட முடியாமல் போய் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தார். இந்த நிலையில், திருப்பதி வேங்கடேசப்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து, தன் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, இன்று வெற்றியாளராகத் திகழ்கிறார். தாய்லாந்திலிருந்தாலும் நான் ஶ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சேனலின் (எஸ்.வி.பி.சி) நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பேன். எப்போது திருப்பதி ஏழுமலையனை தரிசிப்போமென்ற எண்ணம் மனத்தில் வேரூன்றியது. அந்த எண்ணம் இன்றுதான் நிறைவேறியது.

Vikatan
பத்மாவதி தாயார்
பத்மாவதி தாயார்

பக்தர்களின் பிரார்த்தனைகளைக் கனிவுடன் கேட்டு நிறைவேற்றும் பிரத்யட்சமான கலியுக தெய்வமாக திருப்பதி ஏழுமலையான் விளங்குகிறார்'' என்கிறார் ஹாரிசன்.