Published:Updated:

தெய்வப் பெண்ணே! - 10 - மன்னனையும் மக்களையும் மீட்டவள்... - மங்கையர்க்கரசி

தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே

ஓவியம்: ஜீவா

தெய்வப் பெண்ணே! - 10 - மன்னனையும் மக்களையும் மீட்டவள்... - மங்கையர்க்கரசி

ஓவியம்: ஜீவா

Published:Updated:
தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே

சோழ நாட்டின் இளவரசியாய் பிறந்து, பாண்டிய மன்னனின் பட்ட மகிஷியாய் வாழ்ந்து, பாண்டிய நாட்டில் சமண சமயத்தை ஒழித்து சைவத்தை தழைத்தோங்கச் செய்த தெய்வப்பெண்... பாண்டிய நாடு நன்றி சொல்லக் கடமைப்பட்ட மங்கையர்க்கரசி.

மணிமுடிச் சோழனின் மகளாக சோழ தேசத்தில் பிறந்த மங்கையர்க்கரசி, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாள். சைவத்திலும், சிவனிடத்திலும், சிவனடியார்களிடத் திலும், சிவனடியார்களுக்குத் தொண்டு செய் வதிலும் பற்றுக்கொண்டவளாக இருந்தாள்.

மாறியது சைவத்தின் திசை!

மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், நின்றசீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன். மங்கையர்க்கரசி போலவே சைவத்திலும், சிவனடியார்களிடத்திலும் பற்று உடைய வனாக இருந்தான். அவனது பக்தி மற்றும் பராக்கிரமங்களை கண்ட மணிமுடிச் சோழன், மங்கையர்க்கரசியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். சீதனங்களுடன், குலச்சிறையார் என்ற மந்திரியையும் அவளுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். குலச்சிறையார், 63 நாயன்மார் களில் ஒருவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர். பாண்டிய மன்னன், அவரை தனது முதல் மந்திரியாக்கிக் கொண்டான். இந்நிலையில், பாண்டிய நாட்டில் சமண சமயம் தலை யெடுக்கத் தொடங்கியது. சமணர்களின் அட்டூழியங்கள் கூடியது. ஊழ்வினைப் பயனோ என்னவோ, நின்றசீர் நெடுமாறனும் ஒருகட்டத்தில் தன்வசமிழந்து சைவத்தைத் துறந்து சமண சமயத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதுபோல பாண்டிய நாட்டில் இருந்த பெரும்பான்மையான மக்களும் சைவத்தை துறந்து சமணத்தைத் தழுவ, சைவம் மட்கிப் போகத் தொடங்கியது.

அரசியின் முயற்சிகள்!

குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியும் சைவ நெறியை ஆழமாகப் பற்றியிருந்தனர். மன்னனின் மனதை மாற்ற இவ்விருவரும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. நாளுக்கு நாள் மன்னனின் சமண சமயப் பற்று அதிகரித்தது. சைவ சித்தாந்த கருத்துகள் வழக் கொழிந்து போயின. அரசியையும் குலச்சிறை யாரையும் மன்னன் தவிர்த்தான். கோயில்களில் ஒரு கால பூஜை நடப்பதுகூட அரிதாகிப் போனது. இதைக் கண்ட அரசி மனம் வெதும் பினாலும், தன்னம்பிக்கையிலும் முயற்சியிலும் தளராமல் முக்கண்ணனின் மீது பாரத்தைப் போட்டபடி மன்னனின் மனதை மாற்றும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டாள். ஆனால், அவளுக்குத் தோல்விகளே கிடைத்தன.

இந்நிலையில், திருஞானசம்பந்தர் பாண் டிய நாட்டுக்கு பக்கத்திலுள்ள திருமறைக்காடு என்ற ஊருக்கு வந்திருப்பதை மங்கையர்க்கரசி அறிந்துகொண்டாள். ஞானசம்பந்தரை பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளப் பண்ண மங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் கடுமை யாக முயல, பாண்டிய நாட்டை நோக்கி தன் யாத்திரையைத் தொடங்கினார் அவர்.

தெய்வப் பெண்ணே! - 10 - மன்னனையும் மக்களையும் மீட்டவள்... - மங்கையர்க்கரசி

வந்தார் ஞானசம்பந்தர்!

திருஞானசம்பந்தரின் சிறப்புகளை அறிந்திருந்த சமணர்கள், அவர் பாண்டிய நாட்டுக்குள் பிரவேசித்ததை எண்ணி கலக்க முற்றனர். சைவத்தை மறந்து சிவனைத் துறந்து தங்கள் வசம் இருக்கும் மன்னன் அவரை சந்திக்கும்பட்சத்தில், எங்கே மீண்டும் சைவ நெறிக்கே திரும்பிவிடுவானோ என்ற அச்சத் தில், திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்க சதி வேலைகள் அனைத்தையும் செய்தனர். இருப்பினும் மங்கையர்க்கரசியின் பிரார்த்தனைகளையும், சைவத்தில், சைவநெறியில் அவருக்கு இருந்த திட விசுவாசத்தையும் கண்ட திருஞான சம்பந்தர், சமணர்களும், அரசனும், மக்களும் செய்த இடையூறுகளை எல்லாம் மறந்து, மதுரையை வந்தடைந்தார். கோயிலுக்கு அருகிலேயே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.

சமணர்கள், ஞானசம்பந்தரைப் பற்றி பல பொல்லாப்புக் கதைகளை மன்னனிடம் கூறி, அவர் தங்கியிருந்த மடத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் உத்தரவை மன்னனின் வாயி லாகப் பிறப்பிக்கச் செய்தனர். மடத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டபோதும் இம்மியும் கலங்காத சம்பந்தர், `அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே' என்று ஒவ்வொரு பாடலிலும் `பாண்டியற் காகவே' என்று வரும் படியான பதிகத்தைப் பாடினார். இதனால் அவர் தங்கியிருந்த மடத்தில் கொழுந்து விட்டெரிந்த தீ அணைந்தது. மடத்தில் அணைந்த தீ, பாண்டிய மன்னனை நோக்கி திசை திருப்பப்பட்டு அவனை வெப்பு நோயாகத் தொற்றியது

எது மெய் மதம்?!

ஆம்! நின்றசீர் நெடுமாறனை வெப்பு நோய் தாக்கியது. அப்போது மங்கையர்க்கரசி அரசனிடம் சென்று, சம்பந்தர் போன்ற ஒருவருக்குச் செய்த தீவினைப் பயனே இந்நோய் என்பதை எடுத்துச் சொல்லி, அவனுக்கு வந்திருக்கும் வியாதியைப் போக்க வல்லவர் திருஞானசம்பந்தரே என்று வாதிட்டாள். இத்தனை பட்ட பின்னும் புத்தி வராத மன்னனோ, `சரி என் உடலின் வலப்பக்க ரோகத்தை திருஞானசம்பந்தரும், இடப்பக்க ரோகத்தை சமணர்களும் அவர வர்கள் நம்பும் தெய்வத்தின் துணைகொண்டு சரிசெய்து காட்டட்டும். எம்மதம் வெப்பு நோயால் உண்டான என் காயத்தை ஆற்று கிறதோ, அம்மதமே மெய் மதம் என்று ஏற்றுக் கொள்கிறேன்' என்று அறிவித்தான்.

சமண மதத்தினரால் எவ்வளவோ முயன் றும் இடப்பக்க ரோகத்தைக் குணப்படுத்த முடியவில்லை. ஆனால் திருஞான சம்பந்தரோ கைநிறைய விபூதியை அள்ளி, `மந்திரமாவது நீறு' என்ற தேவாரப் பதிகத்தை இயற்றி, பத்தாவது பதிகத்தின் முடிவில் மன்னனது உடலின் வலது பக்கத்தில் அந்தத் திருநீற்றைப் பூச, மன்னனைப் பிடித்திருந்த வெப்பு நோய் அக்கணமே அவனை விட்டு அகன்றது. அத் துடன் சமண மாயை விலகி சைவ நெறியின் மகத்துவத்தை உணர்ந்த கூன்பாண்டியன், மனம் திருந்தி மீண்டும் சைவத்தைத் தழுவினான்.

சைவம் இருக்கும் காலம்வரை..!

இவை அனைத்துக்கும் காரணமானவள், மங்கையர்க்கரசியே. தன் கணவனான நாட்டை ஆண்ட மன்னனும், பிற குடிகளும் சமணத்தைத் தழுவினாலும், தான் நம்பிய சைவ நெறியிலிருந்து இம்மியும் பிறழாமல், மனம் தளராமல் பல முயற்சிகளுக்குப் பிறகு, திருஞானசம்பந்தரை பாண்டிய நாட்டுக்கு அழைத்து வந்த பெருமைக்குரியவள். பாண்டிய நாட்டில் இன்றளவும் சைவம் தழைத்தோங்கி இருப்பதற்கான முழுமுதற் காரணம் அவளே.

ஒரு பெண்ணின் பக்தி என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி வரும்போதெல்லாம், மங்கையர்க்கரசி பதிலாக எழுவாள். அரசனை யும், நாட்டு மக்களையும் தன் விடாமுயற்சியால் மீட்டெடுத்து, தாய் மதத்துக்குத் திருப்ப முடியும் என்பதை உலகுக்கு உரக்கச் சொன்ன வள் மங்கையர்க்கரசி. இதனாலேயே 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப் படுகிறாள். பாண்டிய நாட்டையே சமண சமயத்திலிருந்து மீட்டெடுத்த மங்கையர்க்கரசி பாண்டிமாதேவி என்றும் அழைக்கப்படுகிறாள். சைவத்துக்கும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் மங்கையர்க்கரசி செய்த சேவைகளும் தொண்டுகளும் என்றும் நிலைத்திருக்கும்.

- சக்திகளின் பக்தி தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism