Published:Updated:

திருவாரூர் அருகே ருத்ராட்ச மரம்... கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள்!

ருத்ராட்ச மரம்
ருத்ராட்ச மரம்

`ஒருவர் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சங்கள் புனைவதற்கு ஈடாகாது' என்பது ஆன்றோர் வாக்கு.

மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய ருத்ராட்ச மரம் அதிசயமாக ஒரத்தூர் கிராமத்தில் வளர்ந்து ருத்ராட்ச காய்கள் காய்த்துக் குலுங்குவதால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்த மரத்துக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவநெறி நிற்போர் அணியும் திரு ஆபரணங்களில் முதன்மையானது ருத்திராட்சம். ருத்ராட்சம் அணிபவரை எத்தகைய தீவினைகளும் அண்டுவதில்லை என்பர்.

`ஒருவர் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சங்கள் புனைவதற்கு ஈடாகாது' என்பது ஆன்றோர் வாக்கு.

ருத்ராட்சம்
ருத்ராட்சம்

ருத்திராட்சகங்களை தனியாகவோ பிற மணிகளுடன் மாலையாகக் கோத்து வடமாகவோ அணிவது வழக்கம். ஆயிரம் ருத்ராட்சங்கள் அணிந்தவரை சிவபெருமானுக்குச் சமம் எனக் கருதித் தேவர்கள் தொழுவர் என்பதிலிருந்து ருத்ராட்சங்களின் பெருமையை அறியலாம்.

இமயமலைச் சாரலிலும் நேபாளத்திலும் வளரக்கூடிய இவ்வகை மரங்களின் பழங்களில் இருந்து பெறப்படும் கொட்டைகளே ருத்ராட்சகங்கள்.

மிளகு வடிவ அளவிலிருந்து சிறு தேங்காய் வடிவ அளவு வரை கிடைக்கப் பெறுகின்றன.

ஒரு சமயம், கமலாட்சன், தாரகன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை அழிப்பதற்காக வேண்டி, சிவபெருமான் அவர்களின் முப்புரங்களை சிரித்து எரித்தார். அப்பொழுது, அவரின் முக்கண்களும் கோபத்தில் சிவக்க, அக்கண்களைச் சுற்றி வியர்த்தரும்பிய நீர்த்துளிகள் மண்ணில் விழுந்து மரங்கள் ஆயினவாம்.

ருத்திராட்சம் என்பதற்கு 'சிவனின் கண்கள்' என்று பொருள்.

சிவபெருமானின் கண் வியர்வையில் தோன்றியதால், இவற்றுக்கு ருத்திராட்சங்கள் என்ற பெயர் வழங்கப் பெற்றது என்று கூறுவர்.

உருத்ருத்ராட்ச மரம்
உருத்ருத்ராட்ச மரம்

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் கோரையாறு மேற்குக் கரையில் சுமார் 25 அடி உயரத்தில் ருத்ராட்ச மரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இம்மரத்தில் முதன்முதலாக ருத்ராட்ச கொட்டைகள் தற்போது காய்க்கத் தொடங்கியுள்ளன.

இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய மரத்தைப் பார்த்து வணங்கிச் செல்கின்றனர். அந்த மரத்துக்கு மஞ்சள் துணி கட்டி, மரத்தினடியில் அகல் விளக்குகளை வைத்து அதில் விளக்கேற்றி வணங்கி வழிபாடு செய்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு