Published:Updated:

சந்தோஷம் தரும் சந்திர தரிசனம்!

சந்திர தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
சந்திர தரிசனம்

சந்திர தரிசனம்

சந்தோஷம் தரும் சந்திர தரிசனம்!

சந்திர தரிசனம்

Published:Updated:
சந்திர தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
சந்திர தரிசனம்

சுக்லபட்சம் மூன்றாம் பிறைச் சந்திரன், வளர்பிறை. கண்ணுக்குப் புலப்படும் பிறை. முன்பிறைகள் விண்வெளியில் பளிச்சென்று தெரியாது. வளரும் சந்திரனைப் பார்ப்பது நமது வளர்ச்சிக்கு உதவும் என்கிறது தர்மசாஸ்திரம்.

சந்திர தரிசனம்
சந்திர தரிசனம்


சந்திரன் தேய்ந்த வடிவில் தென்பட்டாலும், படிப்படியாக வளரும் திறமையோடு இருப்பவன் என்பதால், முளையில் இருக்கும் நமது முன்னேற்றமும் படிப்படியாக வளரும் என்பது திண்ணம். தேய்ந்தும், வளர்ந்தும் இருப்பது சந்திரனின் இயல்பு. அது நம் மனதுக்கும் பொருந்தும். துயரத்தில் தேய்ந்தும், மகிழ்ச்சியில் வளர்ந் தும் தென்படும் சந்திரனை மனதோடு ஒப்பிட்டுச் சொல்கிறது ஜோதிடம். மன வளர்ச்சிக்கு சந்திரனின் பங்கு முக்கிய மானது என்றும் அது கூறும்.

சூரியனில் மறைந்து கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த சந்திரன், உலகத்தின் பார்வைக்குத் தென்படும் தருணம், மூன்றாம் பிறை காலம். பஞ்சாங்கத்தில் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சந்திர தரிசனம்’ அதாவது சந்திர னைப் பார்க்கும் வேளை என்று குறிப்பிட்டிருக்கும்.

ஆயிரம் சந்திரனைப் பார்த்தவன் சதாபிஷேகம் செய்து கொள் கிறான். நீண்ட ஆயுள் இருப்பவனுக்கு சதாபிஷேகத்தில் மகிழ வாய்ப்பு இருக்கும். ஆக, மூன்றாம் பிறையைப் பார்த்தவர்களுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையுடன் சதாபிஷேக வைபவத்தையும் அவர்களுக்கு வழங்குவான் மூன்றாம் பிறைச் சந்திரன் என்ற நம்பிக்கை உண்டு. பண்டைய காலத்தில் கிராமத்தில் வாழும் முதியோர்கள் மூன்றாம் பிறையைப் பார்த்து மகிழ்வர்.

ஈசனும், உமையும், கணேசனும் பிறைச் சந்திரனை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். சந்திர மௌலி, பாலச்சந்திரன் என்ற பெயர்கள் அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது.

ஒரு முறை சந்திர லோகத்துக்கு விஜயம் செய்தார் கணபதி. கையில் கொழுக்கட்டை ஏந்திய கணபதியின் தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்தான் சந்திரன். கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தி யில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் கலங்கிய சந்திரன் மன்னிக்கும்படி வேண்டி, அவரை வழிபட்டார். சாப விமோசனம் கிடைத்தது.

அதோடு மூன்றாம் பிறையைப் பார்ப்பவர்களுக்கு முழு மகிழ்ச்சி பொங்கும் என்றும் அருளினார். சதுர்த்தி சந்திரனைப் பார்த்து வீண் பழிக்கு ஆளானான் கண்ணன். கணபதியை வேண்டி பழியில் இருந்து விடுபட்டான். சதுர்த்தி சந்திரனைப் பார்த்தவர்கள் கண்ணனின் ஸ்யமந்தக வரலாற்றைச் சொன்னால் பழியிலிருந்து விடுபடுவார்கள் என்று புராணம் தெரிவிக்கிறது.

சொல்ல வேண்டிய செய்யுள்:

சிம்ஹ: ப்ரசேனமவதீத் சிம்ஹோ ஜாம்பவதா ஹத:

ஸீகுமாரக மாரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக: