Published:Updated:

காலனை வென்ற கானம்!

ஶ்ரீசரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசரஸ்வதி

ஓவியம்: வேதா

காலனை வென்ற கானம்!

ஓவியம்: வேதா

Published:Updated:
ஶ்ரீசரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசரஸ்வதி

பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. பீஜப்பூரை மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மாற்று மதத்தைச் சேர்ந்தவன் அவன் என்றாலும் பிற மதங்களையும் அதன் தத்துவங்களையும் மதிப்பவன். அவன் மதத்தைச் சார்ந்த மன்னர்கள் பலரும் மற்றவர்களை மத மாற்றத்துக்கு உட்படுத் திய காலத்தில், இவன் அனைத்து மதங்களையும் நேசிப்பவ னாக இருந்தான். அதனால் இவனை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த மன்னனுக்கு இசைக்கலையில் ஆர்வம் அதிகம். பல இசைக் கலைஞர்கள் அவன் நண்பர்களாக இருந்தார்கள். அந்த நண்பர்கள் யாவரும் வெளிப்படையாகவே அவரை, `கலைவாணியின் அருள்பெற்றவர்' என்று புகழ்வார்கள்.

இந்த மன்னனின் காலத்தில் பீஜப்பூரில் யோகி ஒருவரும் வாழ்ந்து வந்தார். மகான்களை மதித்துப் போற்றுபவன் என்பதால் அந்த யோகியும் இவன் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அடிக்கடி யோகியைச் சந்தித்து அவரின் ஆசியையும் பெற்று வந்தான் மன்னன். இந்த நிலையில்தான் மன்னனின் வாழ்வில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மன்னனுக்கு அருமையான மகள் ஒருத்தி இருந்தாள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங் கிய அந்தப் பெண் திடீரென்று மரணமடைந்து விட்டாள். சற்றும் எதிர்பாராத இந்த துக்கத் தால், மன்னன் மிகவும் திகைத்துப்போனான். தன் துயரைச் சொல்லி அந்த யோகியின் காலடியில் வீழ்ந்து வேண்டினான். மன்ன னின் நல் மனதை அறிந்தவர் என்பதால், அந்த யோகி அவன் துயரை நீக்க முடிவு செய்தார்.

தொடர்ந்து யோகி சில கட்டளைகளை இட்டார். மன்னனின் மகளின் உடலை ஓர் அறைக்குள் கொண்டுவரச் சொன்னார். அதே போன்று அந்த அறையில் ஒரு சரஸ்வதியின் சிலையையும் கொண்டுவரச் செய்தார். யோகியின் சொல்லைத் தட்டாமல் செய்யுமாறு மன்னன் சேவகர் களுக்கு ஆணையிட்டார். அதன்படி, அறைக்குள் அன்னை கலைவாணியின் விக்கிரகம் வந்து சேர்ந்தது.

யோகி, சரஸ்வதியைப் போற்றித் துதிக்க ஆரம்பித்தார். தன் உன்னதமான குரலில் சியாமளாவைப் போற்றிப் பாடல் ஒன்றைப் பாடினார். அமைதியாக இருந்த அரசவை முழுவதும் அவரின் குரல் எதிரொலித்தது.

கூடியிருந்த மன்னரும் மக்களும் அவர் பாடலைத் தொடர்ந்து பாடி அன்னையைப் போற்றினார்கள். கலைவாணியின் அருள் இருந்தால் கல்லும் கரையும் அல்லவா... யோகியின் பாடலால் உயிரிழந்த மன்னன் மகளின் உடலில் சில அசைவுகள் தோன்றின. மன்னன் அதைக் கண்டதும் புத்துணர்ச்சி அடைந்தான். யோகியின் இசையைக் கேட்டதோடு, மனதார அன்னை சரஸ்வதியை வேண்டவும் ஆரம்பித்தான்.

யோகியின் பாடல் முடியவும் மன்னனின் மகள் உயிர் பெற்று எழவும் சரியாக இருந்தது. மன்னனால் இந்த அதிசயத்தை நம்பவே முடியவில்லை. அவையோர் அனைவரும் பிரமித்தனர். யோகியின் சக்தியையும் கலைமகளின் கருணையையும் அறிந்து மக்கள் மகிழ்ந்தனர்.

அன்று முதல் மன்னன் சரஸ்வதிதேவியின் மீது பக்தி செலுத்த ஆரம்பித்தான். தன் அரண்மனையில் அந்த சரஸ்வதியின் சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்து, அதற்கு உரிய பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தான். அதில் அவனும் தவறாமல் கலந்துகொண்டான்.

அதுமட்டுமல்ல, தானே பல பாடல்களை சரஸ்வதி தேவியின் மீது இயற்றிப் பாடினான். அதேபோன்று பிற கலைஞர்களையும் அழைத்துவந்து பாடச் செய்தான்.அவன் ஆட்சிக் காலத்தில் மத பேதங்களும் சர்ச்சைகளும் இல்லாமல் போயின. அவன் இயற்றிய நூல்களில் கணபதி துதியும் சரஸ்வதி துதியும் கட்டாயம் இடம் பிடித்தது. சரஸ்வதி வழிபாடு அவன் வாழ்வோடு கலந்தது. இவை அனைத்தும் மராத்தி மொழியில் பதிவு செய்யப்பட்டு, அரசாங்க ஆவணங்களில் காணக்கிடைக்கின்றன.

மாற்று மதத்து மன்னர் ஒருவரின் வாழ்வில் நடந்த இந்த அற்புதங்கள் எல்லாம் சரஸ்வதி தேவியின் மகிமையை மட்டுமல்ல நம் தர்மத்தின் சிறப்பையும் விளக்குகின்ற்ன. சரஸ்வதி தேவி கல்வி தரும் தெய்வம் மட்டுமல்ல... சகலமும் அருள்பவள் என்பதை இந்த வரலாற்று நிகழ்வு மூலம் அறியலாம்.

வாக்கும் மனமும்!

யாகங்கள் செய்யும்போது வேத மந்திரங்களை உச்சரிப்பார்கள். அப்போது பிரஜாபதியின் பெயர் வரும் இடத்தில் அதை மென்மை யாக உச்சரிப்பார்களாம். காரணம் வாக்கு கொடுத்த சாபம் என்பார்கள்!

ஒருமுறை, மனசுக்கும் வாக்குக் கும் இடையே தங்களில் யார் பெரியவர்?' என்ற சண்டை வந்த தாம். மனமோ, `நான் நினைப்பதையே நீ சொல்கிறாய் அதனால் நானே உயர்ந்தவன்' என்றதாம்.

வாக்கோ, `நினைத்தது நீயாக இருந்தாலும், நான் சொல்லவில்லை என்றால் யாருக்கு அது தெரியவரும்? எனவே நானே பெரியவன்' என்றது. விவாதத்துக்குத் தீர்வு வரவில்லை.

இந்தப் பிரச்னையை பிரஜாபதி யிடம் கொண்டு சென்றனராம். பிரஜாபதி, 'மனமே உயர்ந்தது. அது நினைக்காத ஒன்றை வாக்கு சொல்லமுடியாது' என்று தீர்ப்பு வழங்கினாராம்.

`வாக்கு' தீர்ப்பை ஏற்காமல் கோபப்பட்டது. ``இனி யாகங்களில் உமது பெயர் வரும் இடங்களில், அது சப்தமாய் உச்சரிக்கப்படாது போகட்டும்' என்று சாபமிட்டதாம்.

அதனால்தான் வேதம் சொல்பவர் கள் பிரஜாபதி என்னும் நாமத்தை உச்சரிக்கும்போது மென்மையாக உச்சரிக்கிறார்களாம்.

`மனமே உயர்ந்தது' என்ற தீர்ப்பு, `இறைவனைத் துதிக்கும்போது வாக்கால் துதிக்காமல் மனதால் துதிப்பதே உயர்ந்தது' என்று அறிவுறுத்துவதாக எடுத்துக்கொள்ள லாம்.இந்தக் கதை `சதபத பிரமாணம்' எனும் நூலில் உள்ளது.


- கே.பத்மநாபன், சென்னை-5

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism