திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சுபிட்சங்கள் பெருகட்டும்!

தெய்வப் பாடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வப் பாடல்கள்

பரிகாரத் துதிப்பாடல்கள்!

பிலவ புத்தாண்டில் அனைவரும் சகல நன்மைகளையும் பெற்று மகிழ இறையருள் மிக அவசியம் அல்லவா? அவ்வகையில், மகத்துவம் வாய்ந்த சில பரிகாரத் துதிப் பாடல்கள் இங்கே உங்களுக்காக...

சுபிட்சங்கள் பெருகட்டும்!

ஶ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரம்

ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா


இந்த மந்திரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்று ஜபித்து வந்தால், சகல நன்மைகளும் உண்டாகும்; காரிய ஸித்தி உண்டாகும். இயலாதவர்கள், கீழ்க்காணும் பாடலைப் படித்தும் வழிபடலாம்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

சுபிட்சங்கள் பெருகட்டும்!

நீண்ட ஆயுள் பெற!

கா மிருத்யுஞ்சய ஹோமம் என்பது 21 மந்திரங்கள் கொண்டது. அது வேத விற்பன்னர்களால் செய்யப்படுவது. இருப்பினும், அவற்றுள் சிறந்த மந்திரமாக இருப்பது ‘த்ரயம் பக’ மந்திரம் ஆகும்.

‘பார்ப்பதற்கு நளினமாக இருப்ப வரும், தலையில் ரேகையாக கங்கையை உடையவரும், அழகான கழுத்தை உடைய வரும், சூரியன், சந்திரன், அக்னியைக் கண்களாகக் கொண்டவரும், நான்கு கரங்களில் அபயம், பாசம், வேதங்கள், ஸ்படிகத்தாலும் வெண் முத்துக்களாலும் ஆன அட்சமாலை ஆகியவற்றை ஏந்தியவரும், சுபம் தரக்கூடிய வெண்மை நிறத்தவராகவும் விளங்கும் பரமேஸ்வரனை வணங்குகிறேன்!’

இப்படிப் பரமேஸ்வரனை தியானித்து விட்டு, த்ரயம்பக மந்திரத்தை ஜபித்தால், நோய் இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்

சுபிட்சங்கள் பெருகட்டும்!

சர்ப்ப தோஷங்கள் நீங்கும்...

கீழ்க்காணும் துதிபாடல்களைப் பாடி வணங்கிட, சர்ப்ப தோஷ பாதிப்புகள் நீங்கும். ராகு-கேது பாதிப்புகளால் உண்டாகும் கெடுபலன்கள் நீங்கி வாழ்வில் வளம் காணலாம்.

ராகு துதிப் பாடல்

வாகுசேர் நெடுமால் முன்னம்
வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன்
புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர்மொழியாள் பங்கன்
பரன் கையால் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!


கேது துதிப் பாடல்

பொன்னை இன்னுதிரத்தில் கொண்டோன்

புதல்வர்தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னத்

தண்அமுது அளிக்கல் உற்ற

பின்னைநின் கரவால் உண்ட

பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய்
என்னை ஆள் கேதுவே

இவ்விருநிலம் போற்றத் தானே!

சுபிட்சங்கள் பெருகட்டும்!

சனி பகவான் துதிப்பாடல்
பிலவ புத்தாண்டு முழுவதும் மகர ராசிக்கு ஜன்மச் சனி தொடர் கிறது; தனுசு, கும்பம் ஏழரைச் சனி ஆதிக்கத்தில் உள்ளன. மிதுனத்துக்கு அஷ்டமத்துச் சனி; துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி. இந்த ராசிக்காரர்கள் கீழ்க்காணும் சனிபகவான் துதிப்பாடலைப் பாடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும்.

முனிவர்கள் தேவர்கள் ஏழு
மூர்த்திகள் முதலானோர்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது
அல்லால் உண்டோ?

கனிவுள தெய்வம் நீயே
கதிர்சேயே காகம் ஏறும்
சனியே உனைத் துதிப்பேன்

தமியனேற்கு அருள் செய்வாயே!