சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் சந்நிதி இருப்பது நமக்குத் தெரியும். திருவாய்ப்பாடியில் பிறந்த விசாரசருமர் என்பவரே சிவனிடமிருந்து உண்ணக் கலமும், உடுப்பனவும், சூடுவனவும் பெற்று சிவபெருமானால் திருவடி தீட்சையும் பெற்று `சண்டீசர்’ ஆனார். இவர்தான் சிவாலயத்தில் வந்து வழிபடுவோருக்கு வழிபாட்டின் பலனை வழங்குபவர்.
இவர் எப்போதும் சிவ தியானத்தில் அழுந்தி இருப்பவர். ஆதலால், அவரை பயபக்தியுடன் மெள்ளக் கைதட்டி ‘அப்பனே! எனக்கு ஆலய வழிபாட்டின் பயனை அருள்’ என்று கும்பிட வேண்டும். நாம் உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்து நூலை எடுத்து அவர்மேல் போடுவது பாவம். அறியாமை ஆகும்.

‘சண்டி’ என்றால் பாதுகாப்போன் என்று பொருள், சண்டிகேஸ்வரர் சிவன் கோயில் சொத்துகளின் பாதுகாவலர். எனவேதான் அவரை வழிபடும்போது கோயிலில் இருந்து எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்று சொல்வதுபோல் கையைத் தட்டி காண்பிப்பதாகவும் கூறுவதுண்டு.
- மு.முத்து, ஓமலூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவில்வத்தின் சிறப்பு
‘வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்’ என்பது ஐதீகம். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணித்தால், மகாபாவங்கள் எல்லாம் விலகி, சகல மேன்மைகளும் உண்டாகுமாம்!

மாதப் பிறப்பு, சோம வாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்த நாள்களில் பூஜைக்குத் தேவையான வில்வத்தை முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஐதிகம்.
- ரேணுகாதேவி, காரைக்குடி