திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

தெரிந்துகொள்வோம்!

கோ தானம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோ தானம்

வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.

கோ தானம் எதற்கு?

சு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடமிருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாவத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்சகவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழவைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை.

கோ தானம்
கோ தானம்

இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக் கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்ம சாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக் கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.

மாக்கோலத்தின் மகிமை!

ரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம்.

மாக்கோலத்தின் மகிமை!
மாக்கோலத்தின் மகிமை!

அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம். அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். ஆக, அரிசி மாவுக் கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா: வைச்வதேவத்யா:).