Published:Updated:

ஆண்டாளிடம் ஏன் கிளி வந்தது?

ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள்

மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டாளிடம் ஏன் கிளி வந்தது?

மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள்

108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடாகும். கடைசித் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இது அவரது தாய் வீடாகும். எனவே 108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவர் என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோயில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோயில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். ஆண்டாள் சந்நிதியின் முன்புறம் துளசி மாடம் ஒன்று உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் திருமணத்தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

கிளி
கிளி

மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மணி மண்டபத்தின் கம்பம் ஒன்றில் ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர். அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் விடியற்காலையில் பிராட்டியின் சன்னிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான். தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு கண்ணாடிக் கிணறு என அழைக்கப்படுகிறது.

ஆண்டாள்
ஆண்டாள்

ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும் தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்மம் இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. இங்கு ஆண்டாள் உலா வரும்போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி.

இந்த கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு - மாதுளம்பூ; மரவல்லி இலை - கிளியின் உடல்; இறக்கைகள் - நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள். கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப்பொன் போன்றவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

- A.S..கோவிந்தராஜன், சென்னை-24