தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆதிசங்கரர்...

ஆதிசங்கரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதிசங்கரர்

அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று வலியுறுத்தியவர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் பாரத தேசத்தில் வேத காலத்தின் உயர்வுகளும் பெருமைகளும் மறைந்து பிற மதங்களின் ஆதிக்கம் பரவியது.

சனாதன தர்மம் என்னும் நம்முடைய இந்து மதத்திலேயே பல சச்சரவுகள் ஏற்பட்டிருந்த அந்தக் காலத்தில்தான், இந்து மதத்துக்குப் புத்தெழுச்சி தருவதற்காக காலடியில் அவதரித்தார் ஆதிசங்கரர். அத்வைத தத்துவத்தை முன்னிறுத்திய மகான் ஆதிசங்கரர்.

அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று வலியுறுத்தியவர். அப்படியென்றால், ஷண்மத ஸ்தாபனம் செய்து, இறைவனை பல வடிவங்களில் வழிபடுவதற்கான ஸ்தோத்திரங்களை இயற்ற வேண்டும் என்ற அவசியம் அவருக்கு எப்படி ஏற்பட்டது? அதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் உருவமற்ற பரம்பிரம்மத்தை தியானித்து வந்தவர். அதன் பலனாக அவருக்குப் பல ஸித்திகளும் கைவரப்பெற்றன. ஒருநாள் அவர் வானவெளியில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அவர் குருவாயூர் திருத்தலத்தைக் கடந்து செல்லும்போது, குருவாயூரப்பன் கோயிலில், ஒரு யானை மீது குருவாயூரப் பன் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து, பிராகாரம் வலம் வரும் சீவேலி என்னும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல பக்தர்கள் அந்த அரிய காட்சியை தரிசிக்க ஆலயத்தில் குழுமி இருந்தனர். வானவெளியில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த ஆதிசங்கரர், குருவாயூரப்பனின் ஆலயத்தை நோக்கி கீழே ஈர்க்கப்பட்டார்.

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்

எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் தாம் குருவாயூரப்பன் கோயிலை நோக்கி ஈர்க்கப்படுவதைத் தடுக்க முடியவில்லை. பிறகு என்ன..?

கீழே இறங்கி குருவாயூரப்பனை நமஸ்கரித்துவிட்டுத்தான் அவரால் மேற்கொண்டு வானவெளியில் சஞ்சாரம் செய்ய முடிந்தது.

அத்வைத தத்துவம் என்பது மிகப் பெரிய அளவில் மனப்பக்குவம் அடைந்தவர்களால் மட்டுமே முடியும். மற்றபடி சராசரி மனிதர்களுக்கு உருவ வழிபாடு அவசியம்தான் என்பதை ஆதிசங்கரருக்கு உணர்த்தவே, அவர் தினமும் தியானித்த பரம்பொருள், குருவாயூரப்பன் வடிவில் இப்படி ஓர் அருளாடல் நிகழ்த்தியது போலும்.

எனவேதான், ஆதிசங்கரர் தாம் அத்வைதியாக இருந்தபோதும், ஷண்மத ஸ்தாபனம் செய்ததுடன், அரிய பல ஸ்தோத்திரங்களையும் இயற்றி அருளினாராம்.

வரும் ஏப்ரல் 28 செவ்வாய் அன்று ஶ்ரீஆதிசங்கரர் ஜயந்தி. இந்நாளில் அந்த மகானின் திருவருள் வேண்டி வணங்கி சகல சுபிட்சங்களும் வாய்க்கப் பெறுவோம்.