Published:Updated:

அழைத்துவரச் சொன்னார் அரங்கன்!

சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்

ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா நடந்துகொண்டிருந்தது.

அழைத்துவரச் சொன்னார் அரங்கன்!

ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா நடந்துகொண்டிருந்தது.

Published:Updated:
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்

ன்புமயமான பக்தி இருந்தால் இந்தக் கலியுகத்திலும் நேருக்கு நேராக தெய்வத்தை தரிசனம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து நமக்கு வழிகாட்டியவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள். இவரது காலம் 1767-1847. தியாகராஜ ஸ்வாமிகளுக்காக தெய்வம் நடத்திக் காட்டிய திருவிளையாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று:

ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா நடந்துகொண்டிருந்தது. தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது தெற்கு வீதியில் தங்கியிருந்தார்.

சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்

அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் பவனிவரும் பெருமாளின் அழகை, ‘ராஜு வெடலெ...’ என்ற கீர்த்தனையில் வர்ணித்துப் பாடினார். ஏராளமான கும்பல். பக்கத்தில்போய் ஸ்வாமியை தரிசிக்க தியாகராஜ ஸ்வாமிகளால் முடியவில்லை. ஆனால், ஸ்வாமியின் பவனி இவரைக் கடந்து, மேற்கு வீதியில் திரும்பியவுடன், திடீரென்று நின்றுவிட்டது. வாகனத்தைச் சுமந்து வந்த ஆட்கள் என்னென்னவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. திருஷ்டி கழித்துப் பார்த்தார்கள். பலன் இல்லை. அப்போது அர்ச்சகர் ஒருவர் மேல் ஆவேசம் வந்தது: ‘‘தெற்கு வீதியில் ஒரு சிறந்த பக்தன் தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறான். அவனை அழைத்து வாருங்கள்’’ என்று உத்தரவு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே, அங்கிருந்தவர்கள் வேகமாகப் போய் தியாகராஜ ஸ்வாமிகளை அழைத்து வந்தார்கள். அருகில் நின்று அரங்கனின் திருக்கோலத்தை ஆனந்தமாக தரிசித்த தியாகராஜ ஸ்வாமிகள் மனமுருகி தேவகாந்தாரி ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடி முடித்தார். அதன் பிறகே அரங்கனின் பவனி தொடர்ந்தது. தியாகராஜரின் பக்தியையும் அதற்குத் திருவரங்கன் நடத்திக் காட்டிய லீலையையும் கண்டு அனைவரும் வியந்தார்கள்.

தியாகராஜ ஸ்வாமிகள் தை மாதம் தேய்பிறை பஞ்சமி அன்று (6.1.1847) தன் வழிபாட்டு தெய்வமான ஸ்ரீராமரின் திருவடிகளை அடைந்தார். இதை முன்னிட்டு இப்போதும் வருடா வருடம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆராதனை நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதையும் அங்கு போய் ஒரு பாடலாவது பாடுவதையும் சங்கீத வித்வான்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

- ஆர்.நந்தினி, மதுரை