தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

தேவராவதும் அசுரராவதும்...

பிரம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரம்மா

பிருஹதாரண்ய உபநிஷதத்தில் வரும் இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் ஆதிசங்கரர் தேவர், மனிதர், அசுரர் என்று மூன்று பேர் இல்லை.

ருமுறை தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூன்று தரப்பினருக்கும் `த’, ‘த’, ‘த’ என்று உபதேசித்தருளினார் பிரம்மன்.

தேவர்கள் அதை ‘தாம்யத’ என்று புரிந்து கொண்டார்கள். தாம்யத என்றால் உங்களை அடக்குங்கள் என்று பொருள். தேவர்கள் தங்களின் புலன்களால் மிகவும் துன்புறுவதால் புலனடக்கத்தையே தங்களுக்கு பிரம்ம தேவர் அருளினார் என்று உணர்ந்து சென்றனர்.

மனிதர்களோ ‘த’ என்றால் ‘தத்த’ என்று பொருள் கொண்டனர். தத்தம் என்றால் தானம். இருப்பதை அடுத்தவர்களுக்குத் தானம் அருளும் பொருளாசையற்ற அர்த்தமுள்ள வாழ்வை வாழ வேண்டும் என்று புரிந்து கொண்டனர். அசுரர்களோ, `த' என்பதை தயத்துவம் என்று புரிந்துகொண்டனர். அசுரர்கள் பிற உயிர்களிடம் தயை இன்றி நடந்துகொள்வதால், தங்களைக் கருணையுள்ள உயிர்களாக மாறுமாறு பிரம்ம தேவர் வலியுறுத்தியுள்ளார் என்று அறிந்துகொண்டு சென்றனர்.

பிரம்மா
பிரம்மா

பிருஹதாரண்ய உபநிஷதத்தில் வரும் இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் ஆதிசங்கரர் தேவர், மனிதர், அசுரர் என்று மூன்று பேர் இல்லை. புலன்களை அடக்குகிறபோதும் தானம் மற்றும் கருணையைக் கைகொள்ளும்போதும் மனிதர்களே தேவர்களாக மாறுகிறார்கள். இந்த மூன்று குணங்களையும் கைவிடும்போது மனிதர்கள் மனித நிலையிலிருந்து கீழிறங்கி அசுரர்களாகிறார்கள் என்று பொருள் கூறுகிறார். மேலும் குருவானவர் நல்வழியே காட்டுவார் என்று உணரும் சிஷ்யனின் மனம், குருவின் உபதேசத்தை மிகவும் உயர்ந்த பொருள்களில் கொண்டு மேன்மையுறும் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.