அந்த நாராயணனைக் காலம் முழுவதும் தன் கானத்தால் துதித்து மகிழ்பவர் நாரதர். இதுவே அவருக்குள் சிறு கர்வத்தை உண்டு பண்ணியது.
ஒருமுறை, பூலோகத்தில் ஒரு வனத்தில் அனுமன் ராம கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். அனுமன் நன்றாகப் பாடுவதாகத் தோன்றி னாலும் தன்னைவிட நன்றாகப் பாட முடியாது என்று எண்ணினார். அனுமன் இருக்கும் இடத்துக்கு வந்து, தன் வீணையை அங்கிருந்த ஒரு பாறைமேல் வைத்து விட்டு அனுமனின் பாடலைக் கேட்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅனுமன், இசையில் வல்லவர் அவரின் பக்தி, இசையை மேன்மேலும் வளமாக்கியது. பாடும்போது ராம சிந்தனையன்றி வேறொன்றை அவர் கொள்வதில்லை. அப்படி அவர் லயித்துப் பாடிக்கொண்டிருந்தபோது நாரதர் அந்த கானத்தில் மூழ்கிப்போனார்.

கல்லையும் கரையவைக்கும் கீதம் அது. தன் கால் தூசியினாலே கல்லைப் பெண்ணாக்கிய கடவுளின் பக்தர் அல்லவா... அனுமன் பாடப் பாட நாரதர் தன் வீணையை வைத்திருந்த கல் அப்படியே உருகிவிட்டது. பாடல் முடிந்ததும் சுய நினைவுக்கு வந்த அனுமன் நாரத மகரிஷியைக் கண்டு வணங்கினார். நாரதரும் வணங்கிவிட்டுத் திரும்பினால் அவர் வீணையைக் காணோம். உருகிய கல் அனுமன் பாடி முடித்ததும் மீண்டும் இறுகிப் பாறையாகிவிட்டது. நாரதரின் வீணையும் அதனுள் சிக்கிக்கொண்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது என்ன சோதனை என்று நாரதர் எண்ணியபோது அனுமன், “கானத்தில் சிறந்த நீங்கள் பாடுங்கள். கல் கரையும்” என்றார். நாரதரும் `அனுமனால் முடிந்தது நம்மால் முடியாதா...' என்ற இறுமாப்போடு பாடினார். எவ்வளவு பாடியும் கல் கரையவேயில்லை. நாரதர் தன் பிழையை உணர்ந்தார். அகந்தையின்றி உண்மையான பக்தியால் செய்யும் இசையே மகத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து தன் வீணையை மீட்டுத் தரும்படி அனுமனை வேண்டிக்கொண்டார். அனுமன் மீண்டும் ராமனைப் பிரார்த்தித்துப் பாட, கல் உருகியது. நாரதர் தன் வீணையை மீட்டுக்கொண்டார்.