Published:Updated:

கந்தனே கதிர்வேலனே..!

திருத்தணிகை - முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த திருத்தலம். ஆகையால், இங்கே சூரசம்ஹார வைபவம் நடைபெறுவது இல்லை.

பிரீமியம் ஸ்டோரி

ந்த சஷ்டி என்றதும் நம் நினைவுக்கு வரும் திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமான் சூரனை வதைத்து தேவர்களுக்கு அருள்புரிந்தது இந்தத் தலத்தில்தான். இங்கே அருளும் மூலவர் ஸ்ரீசெந்திலாண்டவருக்கான உத்ஸவ மூர்த்திக்கு, அலைவாய் உகந்த பெருமான் என்று திருநாமம்.

இவரை தோழன்சாமி, சந்திச்சாமி என்றெல்லாம் சிறப்பிப்பர். ஸ்ரீஆறுமுகப்பெருமானின் உத்ஸவருக்கு ஸ்ரீகுமாரவிடங்க பெருமான் என்று திருநாமம். திருமண காலங்களில் இவரே எழுந்தருள்வதால், மாப்பிள்ளைச்சாமி எனப் போற்றுவர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங் குன்றத்தில், கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளன்று, கந்தனின் சினம் தணியும் விதம், நூறு படி அரிசியால் தயிர்சாதம் செய்து படைப்பார்கள். இந்தப் பிரசாதம் இங்கே வெகு விசேஷம்!

திருத்தணிகை - முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த திருத்தலம். ஆகையால், இங்கே சூரசம்ஹார வைபவம் நடைபெறுவது இல்லை. பழநி மலைக் கோயிலில், வருடத்தில் சூரசம்ஹார வைபவத்தன்று மட்டுமே முருகனின் உத்ஸவ மூர்த்தி, மலையில் இருந்து கீழிறங்கி வருவார்.

கந்தனே கதிர்வேலனே..!

விராலிமலையில் ஆறு முகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு, மயிலின் மீது வள்ளி- தெய்வானை தேவியருடன் அபூர்வ காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு கோயிலில், சுமார் ஆறடி உயரத்தில் அருள்கிறார் முருகப்பெருமான். இங்கே தெய்வானை கிரீடத்துடனும், வள்ளிதேவி குறத்திக் கொண்டை யுடனும் காட்சி தருகின்றனர்.

கர்நாடக மாநிலம், மங்களூர் அருகே அமைந்த முருகன் தலம் ஸ்ரீசுப்ரமண்யா. இங்கு கார்த்திகை மாதம் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்கும், ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கும் ரதோத்ஸவ திருவிழா சிறப்புற நடைபெறுகிறது.

விழாவின்போது தேரை இழுப்பதற்காக, வளையும் தன்மை கொண்ட ஒருவகைப் பிரம்பினைப் பயன்படுத்துவர். தேர் நிலைக்கு வந்ததும், அந்தப் பிரம்பைத் துண்டுகளாக்கி பக்தர்களுக்குத் தருகிறார்கள். இந்தப் பிரம்புத் துண்டை உடலில் தேய்த்துக்கொண்டால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

பாண்டிய நாட்டின் சிறந்த பிரார்த்தனைத் தலமாகத் திகழ்வது குன்றக்குடி. இங்கே முருகப் பெருமானும் வள்ளி- தெய்வானை தேவியரும் தனித்தனியே மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். .

- எஸ். விஜயலட்சுமி, சென்னை-88

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு