Published:Updated:

தீபம் ஏற்றினோம்...

சுமார் 7 அடி உயரத்தில் செவ்வந்தி - செவ்வரளிப் பூக்களால் ஆன புஷ்ப லிங்கமும் ஒருபுறத்தில் தயாராகிக் கொண்டிருந்தது.

பிரீமியம் ஸ்டோரி

ன்மாக்களின் தலைவனான ஆத்மநாதர் அலங்கார ரூபனாக ஜொலித்துக் கொண்டிருந்தார். தீபத் திருநாளை யொட்டி அன்று காலையிலிருந்தே... சொக்கப் பனை மற்றும் மகா தீபத்துக்கான பணிகள், மாவளி தயாரிப்பு, அகல் விளக்குகள் சுத்தம் செய்தல் என்று அடியார்களின் பணிகள் ஆரம்பித்திருந்தன.

சுமார் 7 அடி உயரத்தில் செவ்வந்தி - செவ்வரளிப் பூக்களால் ஆன புஷ்ப லிங்கமும் ஒருபுறத்தில் தயாராகிக் கொண்டிருந்தது. அதேநேரம் திருமுறை முற்றோதுதலும் சந்நிதியில் நிகழ்ந்துகொண்டிருந்தது.

தீபம் ஏற்றினோம்...

`தீபம் ஏற்றுவோம் திருப்பணியில் பங்கேற்போம்’ எனும் தலைப்பில், அடியார்களே எழுப்பும் சங்கரன்பாடி சிவாலயம் குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம் அல்லவா. அந்தத் தலத்தில்தான் இவ்வளவு பணிகளும். மழையும் காற்றுமாய் இயற்கையும் தன் பங்குக்கு நம் நாதனை ஆராதித்துக் கொண்டிருந்தது.

திருக்கார்த்திகை விளக்கீடு
திருக்கார்த்திகை விளக்கீடு

மாலை சரியாக 6 மணிக்குப் பனையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப் பட்டது. அடியார்கள் திருவண்ணாமலை பதிகம் பாட ஆத்மஜோதியாய்ப் பிரகாசித்தது அந்த தீபம். தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அடுத்து திருப்பணிக்குப் பங்களித்த வாசகர்களின் பிரார்த்தனைச் சங்கல்பத்துடன் 1008 அகல் விளக்குகள் ஏற்றப்பட, அடியார்களும் குழந்தைகளும் மாவளிகளைச் சுழற்ற... எங்கும் ஒளிவெள்ளம்!

மாவளி மத்தாப்பு
மாவளி மத்தாப்பு
தீபவிழா ஏற்பாடு
தீபவிழா ஏற்பாடு
தீபம் ஏற்றினோம்...

மேலும் கயிலாய வாத்திய முழக்கம், அருள்வழிபாடுகள், கும்மி அடித்தல், மகா ஆராதனை என வைபவங்கள் தொடர அந்த இடமே திருக்கயிலாயமாக ஒளிர, நம் மனம் மலர்ந்தது. `குறுகிய காலத்துக்குள் கோயில் பணிக்கு சக்தி விகடன் வாசகர் தரப்பிலிருந்து வந்த தொகை ரூ.1,40,000’ என்ற தித்திப்பான தகவலைச் சொல்லி நம் மலர்ச்சியை மேலும் அதிகப்படுத்தினார்கள் அடியார்கள்.

சொக்கப்பனை மாசுடர்
சொக்கப்பனை மாசுடர்
மகாதீபம் ஏற்றுதல்
மகாதீபம் ஏற்றுதல்
புஷ்பலிங்க வழிபாடு
புஷ்பலிங்க வழிபாடு

வாசகர்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்ப ஒளி பெருக மனதார வேண்டிக்கொண்டோம் சங்கரன்பாடி ஈசனை. சங்கரன்பாடியில் நிகழ்ந்த கார்த்திகைக் கொண்டாட்ட காட்சிகள் இங்கே உங்களுக்காகவும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு