ஒருமுறை பஞ்சபாண்டவர் களில் மூத்தவரான தருமருக்கு, ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் ஏற்பட்டது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்த கர்வத்தைப் போக்கத் திருவுளம் பூண்டார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.

ஒருநாள் தருமரை பாதாள லோகத்துக்கு அழைத்துச் சென்றார். பாதாள லோகத்தை பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி ஆண்டு வந்தான். இவனும் தான தர்மங்களில் அதிக நாட்டம் உள்ளவன். பாதாள லோகத்தின் முக்கியமான தெருக்கள் வழியாக கிருஷ்ணரும் தருமரும் நடந்துகொண்டிருந்தனர். நகரின் செல்வச் செழிப்பையும், வனப்பையும் கண்டு பிரமித்த தருமருக்கு ஒருகட்டத்தில் தாகம் ஏற்பட்டது. அப்போது அருகில் வீடு ஒன்று தென்பட்டதால், தருமர் அந்த வீட்டுப் பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார்.

மறுகணம் அவள் தங்கக்கிண்ணம் ஒன்றில் குடிநீர் எடுத்துவந்து பவ்யமாகக் கொடுத்தாள். நீர் அருந்திய தருமர், தங்கக்கிண்ணத்தை அந்தப் பெண்மணியிடம் திருப்பிக் கொடுத்தார். அவளோ, ‘‘ஐயா... தாங்கள் எங்கள் ராஜ்ஜியத்துக்கு இப்போதுதான் வருகிறீர்கள் போலிருக்கிறது. எங்கள் ராஜ்ஜியத்தில் ஒரு தடவை உபயோகித்த பொருள் - அது தங்கமாகவே இருந்தாலும் வீசி எறிந்து விடுவோம். எனவே, தாங்களே அந்தத் தங்கக்கிண்ணத்தை வீசி எறிந்து விட்டுச் செல்லுங்கள்!’’ என்றாள் நிதானமாக.

தருமர் திகைத்துப் போனார். தொடர்ந்து அவர்கள் இருவரும் மகாபலியின் அரண் மனையை அடைந்தனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றான் மகாபலி. அவனிடம் தருமரை அறிமுகப் படுத்தினார் கிருஷ்ணபரமாத்மா. ‘‘மகாபலி... என்னுடன் நிற்கும் இவர் தருமபுத்திரர். குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு பேருக்காவது தவறாமல் அன்னதானம் செய்வது இவர் வழக்கம்!’’ என்றார். அவ்வளவுதான்! மகாபலியின் முகம் இறுகியது. ‘‘போதும்! இவரைப் பற்றி மேற்கொண்டு எந்த ஒரு செய்தியையும் என்னிடம் கூற வேண்டாம். நிறுத்துங்கள்’’ என்று கோபமான குரலில் சொல்லி, தன் இரு கைகளாலும் செவிகளைப் பொத்திக்கொண்டான் மகாபலி.

‘‘மகாபலி, ஏன் இப்படிக் கூறுகிறாய்?’’ என்று பதற்றம் இல்லாமல் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவர் அறியாததா என்ன?!

‘‘மதுசூதனா! எனது நாட்டில் கொள்வார் இல்லாமையால் கொடுப்பாரில்லை என்பது தாங்கள் அறியாததா? இங்கு தானம் பெற்று வாழும் நிலையில் எவரும் இல்லை. இவர் நாள்தோறும் ஐந்நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்றால், இவரது ராஜ்ஜியத்தில் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள் என்றல்லவா அர்த்தம்! இதிலிருந்தே இவர் அரசாட்சி செய்யும் லட்சணம் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒருவரைப் பார்க்கவோ, இவரைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்துகொள்ளவோ நான் விரும்பவில்லை. இந்தக் கணமே இவரை இங்கிருந்து புறப்படச் சொல்லுங்கள்’’ - மகாபலியின் பேச்சு பொட்டிலறைந்தாற்போலிருந்தது தருமருக்கு. அவர் மனத்தில் படிந்திருந்த கர்வம் அப்போதே அகன்றது.

- தங்கம் கிருஷ்ணமூர்த்தி

(16.5.07 இதழிலிருந்து...)