Published:Updated:

கந்தன் வந்தான்!

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

சொல்லோவியமாய் கந்த காவியம்

கந்தன் வந்தான்!

சொல்லோவியமாய் கந்த காவியம்

Published:Updated:
கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

ன்மையும் தீமையுமாய்

நமக்குள்ளும் சமர் உண்டு

கந்தனைச் சிந்தையிலேற்றி

ஆணவம், கன்மம், மாயை

மும்மலம் விலக்கினால்

துன்பத் திரை விலகும்;

இன்பவினை கூடும்.

மண்ணில் மனிதனின்

மனத்தின் இக்காட்சியைச்

செந்தூரின் விண்ணும் காட்டியது.

முகில் திரை விலக

கந்தன் அருளால் பூரணச்

சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்

தண்ணொளி பொலிந்தது!

கந்தன் வந்தான்!

விழி நீரில் பூத்த மலர்கள்!

செந்தூரில்

சூரனை ஆட்கொண்ட

அருளாடல் மட்டுமா?

சுட்ட பழம் தந்தது,

ஆற்றுப்படை கொண்டது,

வேள்வி ஆடு வென்றது,

வேடுபறி செய்தது என

முன்னும் பின்னுமாய்...

கந்தனின் அருள் சொல்லும்

இன்னும்பல கதைகள் உண்டு!

மண்ணை மட்டுமா...

முருகனின் அருள் லீலைகள்

விண்ணையும்

வியக்க வைத்தன!

அவ்விதமான

மருகனின் லீலைகளைக்

கண்டும் கேட்டும்

உண்டான களிப்பில்

மாலவனுக்கு விம்மியது மனம்

அவரின் பூவிழிகளில்

பொழிந்தது கண்ணீர்!

அவ்விழி நீரில் பூத்த

மலரிரண்டு:

அமுதவல்லி - சுந்தரவல்லி!

பாவையர் இருவரும் முருகனே

தேவையென்று தவமாய்த்

தவமிருந்து பிறந்தனர்

விண்ணிலும் மண்ணிலுமாய்.

முன்னவள் காணிக்கைப் பரிசாகக்

கந்தனை வந்தடைந்தாள்;

பின்னவளைக் காதலில்

கசிந்துருகிக் கந்தனே

சென்றடைந்தான்.

இனி, அக்கதைகளைக்

காண்போம்!

கந்தன் வந்தான்!

இந்திரனின் காணிக்கை!

வாழ்வளித்த

கந்தனுக்குக்

காணிக்கைப் பரிசளிக்க

நினைத்தான் இந்திரன்.

`யாது தருவது?’

அமரர்கள் வினவ...

`என்னையே தருவேன்’

என்றான் இந்திரன்.

காலம் சிரித்தது;

`நீ மனத்தால்

பிணக்குற்றவன்

அதனால் பல

இன்னலுற்றவன்.

நீயோ கந்தனுக்குக்

காணிக்கை நடந்தால்

அதுவே வேடிக்கை’

என்றது!

இந்திரன்

சிந்தித்தான்

தீர்மானித்தான்.

`உள்ளத்தில்

உயர்வானவள் - என்

உயிரினும் மேலானவள்

என் மகளை

முருகனுக்குத் தருவேன் அவரை

மருகனாக்கி வருவேன்!’

என்றான்.

மண் மகிழ்ந்தது;

விண் புகழ்ந்தது!

தெய்வயானை திருக்கல்யாணம்

பாக்கும் கமுகும்

தென்னங்கீற்றும் வாழையும்

செவ்விள நீரும் கனிகளும்

தோரணமாய்த் திகழ

நான்முகனார்

வேதம் சொல்ல

கலைமகளும்

நலங்கு வைக்க

மாலவனும் மலர்விழியாள்

திருமகளும் பூமகளும்

வந்தோரை வரவேற்க

அன்னையவள்

கன்னம் கிள்ள

அரனாரோ ஆசிகூற

நந்தி வாகனரும்

தொந்தி வயிற்றோனும்

முந்தி வந்து இசைபாட

மனிதரும் முனிவரும்

முக்கோடி தேவரும்

மனம் கனிந்து

வாழ்த்துசொல்ல

கல்யாணம் நடந்தது

தெய்வயானையின்

திருக்கல்யாணம் நிகழ்ந்தது!

காலம் சுழன்றது

இரவு - பகல் விழுங்கி

இயற்கை பருவ நிலை மாற்ற

கார்காலம் வந்தது!

வேடனின் வருகை!

வானவில்லின்

கோலம் கண்டு - மயில்

வண்ணத் தோகை விரித்தாடும்

குறிஞ்சியின் மண்

உறிஞ்சிய நீர் விருட்சங்களின்

வேர்வழி புகுந்து

கிளை வழி ஊதலாய் எழுந்து

காதலர் மனம் கசிய

கூதலாய் வளர்ந்து

ஆற்றின் நீர்மிசை பாய்ந்தது

பின்னும்

வேகம் தணியாது -

குளிர்த் தென்றலாய்

எழுந்து வான்முகில்

சேர்ந்து மலைச் சாரலில்

மோதி மழைச் சாரலைப்

பொழிந்தது!

சாரலும் தூறலுமாய்

முகம் வழிந்த நீரை

வழித்தெறிந்த வேடன்,

சளைத்தானில்லை

புள்ளினம் தேடுவதாய்

வள்ளியின் தினைப்புனம்

சேர்ந்தான்!

- கந்தன் வருவான்...