வேடனின் வருகை!

சாரலும் தூறலுமாய்

முகம் வழிந்த நீரை

வழித்தெறிந்த வேடன்,

சளைத்தானில்லை;

புள்ளினம் தேடுவதாய்

வள்ளியின் தினைப்புனம்

சேர்ந்தான்; குறவள்ளியைக்

கண்டான்!

அங்கே, அவன்

மனப்பட்சிக்கு

இணையாய்

வனப் பட்சிகள்

பறந்தன! அவற்றில்...

தினை கொத்த

வந்தவை பாதி;

மீனினம் என்று

அவளின்

கண்கொத்த

வந்தன மீதி!

கோவைப் பழம்

தொலைத்த

கிள்ளைகளோ,

அவளின் இதழ்

கொத்த வந்தன!

அதுகண்டு அவள்

நகைக்க, குயில்கள்

குரலடங்கி

நின்றன; வேடனோ

புலனடங்கி நின்றான்!

கிழமாகி நின்றான்!

கொடியிடையாள் -

வேல் விழியாள்,

வேடனை மனத்தில்

சிறைபிடித்தாள்!

வேடனோ

சிறைமீள

நாடவில்லை;

அவளின் அகம்நாட

விளைந்தான்.

ஆகவே. காதல்

கிழமாகி நின்றான்!

உருவத்தில் மட்டுமா?

காதல் குறும்பிலும்

பழுத்தவனாய்

அவளருகில் சென்றான்.

`பசி’ என்றான்.

தீயில் சுட்டு

கிழங்களித்தாள்;

`தாகம்’ என்றான்.

தொன்னையில் இட்டு

தேன் அளித்தாள்.

பின் `மோகம்’

என்றவன், அவள் கரம்

பற்றினான். வள்ளி

சினந்தாள்; கண்

சிவந்தாள்!

`அறம் மழுங்கிய

கிழமே! குறவர்தம்

மறம் உமக்குத்

தெரியாது.

கரம் விடுக்கவில்லை

எனில், சிரம் இழக்க

நேரும்; விடும் என்னை’

என்றாள்!

பதிலுக்கு

வேடன் நகைத்த

வேளை, படைச்

சத்தம் கேட்டது; அருகில்

பறை ஒலித்தது.

வேழம் வந்தது!

வணங்கி

நிற்போருக்கு

இணங்கி

அருள்செய்யும்

நம் வேலன்

அணங்கினை ஏய்க்க

வேங்கை

மரமாகி நின்றான்!

வேடர் படை

வந்தது; வள்ளியிடம்

கேட்டது...

`யாது சத்தம்?

கள்வன் வந்தானோ,

காட்டுப்புலி வந்ததோ...’

என்று.

வள்ளி தேடினாள்;

காதல் கிழத்தைக்

காணாது திகைத்தாள்!

ஆகவே காவல்

படையிடம்

`யாதுமில்லை’ எனப்

பதிலுரைத்தாள்.

படை நகர்ந்ததும்

மரம் மீண்டும்

கிழமானது.

வஞ்சிக்கொடியை

பஞ்சுப் பொதிபோல்

நெஞ்சோடு

அணைத்தது!

குறவள்ளி

திகைத்தாள்;

திமிறினாள்;

விலகினாள்;

ஓடினாள்!

மனம்

இறையை

விலக்கும்

தருணம்...

`உற்றவனைப்

பற்றிக்கொள்

இல்லையேல் இன்பவினை

அற்றுப்போகும்’ என

அறம் உரைக்க

தோன்றுமாம் ஞானம்.

இங்கே வேழம்

தோன்றியது!

தன்னையே கண்டாள்!

பருத்த

உடல் குலுங்க

விருத்தன் மகளை

விரட்டியது யானை!

வஞ்சியவள்

அஞ்சி ஓடினாள்;

தன்னையுமறியாமல்

கிழவனின் நெஞ்சில்

தஞ்சம் புகுந்தாள்!

கணநேரம்

ஏதோ உறுத்தவே

நிமிர்ந்தாள்

திகைத்தாள்!

அங்கே...

வெண்தாடி இல்லை;

தோல்சுருக்கம் இல்லை;

நரைகூடிய கிழமும்

இல்லை! பின்னே...

நிமிர்ந்து நோக்கியவள்

ஓராறு முகம் கண்டாள்

ஆறிரு திண்புயம் கண்டாள்.

முத்தாரம் துலங்கும்

மணி மார்பைக்

கண்டாள் - புலவர்கள்

பித்தாகிப் புலம்பும்

அணி அழகைக்

கண்டாள்!

தங்கமென

மின்னும் அவன்

அங்கமெல்லாம்

அண்டபகிரண்டமும்

கண்டாள்!

மூவரைக்

கண்டாள் - முக்கோடித்

தேவரைக் கண்டாள்.

தேவசேனையைக்

கண்டாள்;

தெய்வயானையைக்

கண்டாள்!

முனிவரைக்

கண்டாள் - புவி

மனிதரைக் கண்டாள்!

புள்ளினம்

கண்டாள் விலங்கினம்

கண்டாள் வல்லினம்,

இடையினம் மெல்லினம்

துலங்கும் உலகு

முதலாம் கன்னித்

தமிழையும் கண்டாள்!

விண்ணைக்

கண்டாள் மண்ணைக்

கண்டாள் நிறைவில்

கந்தனிடம் தன்னையே

கண்டாள்!

- கந்தன் வருவான்...

வேடனின் வருகை!

சாரலும் தூறலுமாய்

முகம் வழிந்த நீரை

வழித்தெறிந்த வேடன்,

சளைத்தானில்லை;

புள்ளினம் தேடுவதாய்

வள்ளியின் தினைப்புனம்

சேர்ந்தான்; குறவள்ளியைக்

கண்டான்!

அங்கே, அவன்

மனப்பட்சிக்கு

இணையாய்

வனப் பட்சிகள்

பறந்தன! அவற்றில்...

தினை கொத்த

வந்தவை பாதி;

மீனினம் என்று

அவளின்

கண்கொத்த

வந்தன மீதி!

கோவைப் பழம்

தொலைத்த

கிள்ளைகளோ,

அவளின் இதழ்

கொத்த வந்தன!

அதுகண்டு அவள்

நகைக்க, குயில்கள்

குரலடங்கி

நின்றன; வேடனோ

புலனடங்கி நின்றான்!

கிழமாகி நின்றான்!

கொடியிடையாள் -

வேல் விழியாள்,

வேடனை மனத்தில்

சிறைபிடித்தாள்!

வேடனோ

சிறைமீள

நாடவில்லை;

அவளின் அகம்நாட

விளைந்தான்.

ஆகவே. காதல்

கிழமாகி நின்றான்!

உருவத்தில் மட்டுமா?

காதல் குறும்பிலும்

பழுத்தவனாய்

அவளருகில் சென்றான்.

`பசி’ என்றான்.

தீயில் சுட்டு

கிழங்களித்தாள்;

`தாகம்’ என்றான்.

தொன்னையில் இட்டு

தேன் அளித்தாள்.

பின் `மோகம்’

என்றவன், அவள் கரம்

பற்றினான். வள்ளி

சினந்தாள்; கண்

சிவந்தாள்!

`அறம் மழுங்கிய

கிழமே! குறவர்தம்

மறம் உமக்குத்

தெரியாது.

கரம் விடுக்கவில்லை

எனில், சிரம் இழக்க

நேரும்; விடும் என்னை’

என்றாள்!

பதிலுக்கு

வேடன் நகைத்த

வேளை, படைச்

சத்தம் கேட்டது; அருகில்

பறை ஒலித்தது.

வேழம் வந்தது!

வணங்கி

நிற்போருக்கு

இணங்கி

அருள்செய்யும்

நம் வேலன்

அணங்கினை ஏய்க்க

வேங்கை

மரமாகி நின்றான்!

வேடர் படை

வந்தது; வள்ளியிடம்

கேட்டது...

`யாது சத்தம்?

கள்வன் வந்தானோ,

காட்டுப்புலி வந்ததோ...’

என்று.

வள்ளி தேடினாள்;

காதல் கிழத்தைக்

காணாது திகைத்தாள்!

ஆகவே காவல்

படையிடம்

`யாதுமில்லை’ எனப்

பதிலுரைத்தாள்.

படை நகர்ந்ததும்

மரம் மீண்டும்

கிழமானது.

வஞ்சிக்கொடியை

பஞ்சுப் பொதிபோல்

நெஞ்சோடு

அணைத்தது!

குறவள்ளி

திகைத்தாள்;

திமிறினாள்;

விலகினாள்;

ஓடினாள்!

மனம்

இறையை

விலக்கும்

தருணம்...

`உற்றவனைப்

பற்றிக்கொள்

இல்லையேல் இன்பவினை

அற்றுப்போகும்’ என

அறம் உரைக்க

தோன்றுமாம் ஞானம்.

இங்கே வேழம்

தோன்றியது!

தன்னையே கண்டாள்!

பருத்த

உடல் குலுங்க

விருத்தன் மகளை

விரட்டியது யானை!

வஞ்சியவள்

அஞ்சி ஓடினாள்;

தன்னையுமறியாமல்

கிழவனின் நெஞ்சில்

தஞ்சம் புகுந்தாள்!

கணநேரம்

ஏதோ உறுத்தவே

நிமிர்ந்தாள்

திகைத்தாள்!

அங்கே...

வெண்தாடி இல்லை;

தோல்சுருக்கம் இல்லை;

நரைகூடிய கிழமும்

இல்லை! பின்னே...

நிமிர்ந்து நோக்கியவள்

ஓராறு முகம் கண்டாள்

ஆறிரு திண்புயம் கண்டாள்.

முத்தாரம் துலங்கும்

மணி மார்பைக்

கண்டாள் - புலவர்கள்

பித்தாகிப் புலம்பும்

அணி அழகைக்

கண்டாள்!

தங்கமென

மின்னும் அவன்

அங்கமெல்லாம்

அண்டபகிரண்டமும்

கண்டாள்!

மூவரைக்

கண்டாள் - முக்கோடித்

தேவரைக் கண்டாள்.

தேவசேனையைக்

கண்டாள்;

தெய்வயானையைக்

கண்டாள்!

முனிவரைக்

கண்டாள் - புவி

மனிதரைக் கண்டாள்!

புள்ளினம்

கண்டாள் விலங்கினம்

கண்டாள் வல்லினம்,

இடையினம் மெல்லினம்

துலங்கும் உலகு

முதலாம் கன்னித்

தமிழையும் கண்டாள்!

விண்ணைக்

கண்டாள் மண்ணைக்

கண்டாள் நிறைவில்

கந்தனிடம் தன்னையே

கண்டாள்!

- கந்தன் வருவான்...