இந்திர மயில்

கந்தனைச் சுமக்க

வந்த வினையும்

வருகின்ற

வல்வினையும்

கந்தனென்றால்

விலகும்;

மந்திரவடிவேல்

விந்தைகள் புரியுமென

நகர்ந்தது

கந்தனின் சேனை!

அலை விளையாடும்

திருச்சீரலைவாய் தீரம்!

வீரபாகு பகர்ந்தான்...

`கந்தா அதோ பார்!

வீரமகேந்திரம்...

அதர்மத்தின் கேந்திரம்.

விதிகெட்ட சூரனின்

அதர்மத் தலைநகரம்!

இனி அவன்

கதியற்றுப் போகட்டும்

விடுக வேலை’ என்றான்!

கந்தன் சிரித்தான்;

`அறமற்றுப் போன

அரக்கனின் சிந்தையில்

ஒளியேற்றி வருக...

இன்சொல்லால்

ஞான விளக்கேற்றி

வருக’ என்றான்.

சடுதியில் மறுத்தான்

வீரபாகு.

`கந்தா! கல்லில்கூட

நார் உரிக்கலாம் -

இன்சொல்லில் அசுரனுக்கு

அறமூட்டுவது

வீண். ஆகவே

சொல் வேண்டாம்;

வேல் பேசட்டும்’ என்றான்!

கந்தன் கடிந்தான்;

கடமையாற்றப் பணித்தான்.

ஆகவே, வீரபாகு

சென்றான்; அவுணன்முன்

நின்றான்; அறம்

பகன்றான்.

உதிர்ந்த கனி

மரம் சேருமா - காய்ந்து

கரைந்த பனி மீண்டும்

திரளாகுமா - ஆணவத்தால்

முதிர்ந்த மனம்

அறம் ஏற்குமா?!

பதுமகோமளை -

இன்சொல்லில் நிகர் மாதுளை;

சேற்றில் முளைத்தச்

செந்தாமரை - சூரனின் மனையாள்!

அவள் சொன்னாள்...

வந்திருப்பது கந்தனென்று

சிவமைந்தனென்று!

அவள் மட்டுமா...

சூரனின் தம்பியொருவன்

கந்தபுராணத்து விபீடணன்.

அவனும் சொன்னான்...

`அண்ணா

அவசரம் வேண்டாம்

அசுரகுலம் கெடும்’ என்றான்.

கேட்டானா சூரன்...

நல்லோரின் நல்லுரைகளைக்

கேளாமல் கெட்டான்!

விளைவு...

பெரும்போர் மூண்டது;

சமராபுரியானது

செந்திலம்பதி!

படையோடு படை மோதின

வாளோடு வாள் மோதின

வில்லும் வேலும் சீறின!

கரம் முறிந்தது சிரம் அறுந்தது

செந்தூரின் கடலில்

செங்குருதி கலந்தது!

சிங்கமுகன் வந்தான்;

அங்கம் அறுபட வீழ்ந்தான்.

தாருகன் வந்தான்;

வேரற்ற மரமாய் சாய்ந்தான்;

கிரெளஞ்சன் வந்தான்;

மலையாகித் தடுத்தான்.

முருகன் விடுத்தான் வேலை;

பிளந்தான் மலையை!

சூரன் மகன்

பானுகோபனும்

வந்தான்

மண்ணில்

சாய்ந்தான்...

இங்ஙனம் முன்னும்

பின்னுமாய்

எத்தனையோ பேர்

வந்தனர் வீழ்ந்தனர்.

நிறைவில் சூரனே

வந்தான்!

வீரத்தின்

விளைநிலம் கந்தன்.

அவனிடம் எடுபடுமா

சூரனின் தீரம்?

ஆகவே,

மாயாவின் மகனவன்

மலையானான்;

முகிலானான்;

காற்றில் கலந்தான்;

விண்ணில் மறைந்தான்;

இன்னும்பல

மாயங்கள் புரிந்தான்.

ஒன்றும் பலன் இல்லை.

நிறைவில்

மாமரமாகி நின்றான்.

வேலால் விறகாகி

வீழ்ந்தான்; சேவற்

கொடியாகி எழுந்தான்;

மயிலாகிப் பறந்தான்.

நம் மயிலோன்

யாவர்க்கும் இறையாகி

நின்றான்!

பற்றற்ற முனிவரும்

நட்புற்ற அமரரும்

வெற்றிவேல் வீரவேலென

ஜயகோஷம் செய்தனர்.

முருகனோ

சிவகோஷம் செய்தான்.

ஐந்தெழுத்து நாதனை தமிழ்

மந்திரத்தால் போற்றினான்.

நன்மையும் தீமையுமாய்

நமக்குள்ளும் சமர் உண்டு.

கந்தனைச் சிந்தையிலேற்றி

ஆணவம், கன்மம், மாயை

மும்மலம் விலக்கினால்,

துன்பத் திரை விலகும்;

இன்பவினை கூடும்.

மண்ணில் மனிதருக்கான

இக்காட்சியை

செந்தூரின் விண்ணும் காட்டியது.

முகில் திரை விலக,

கந்தன் அருளால் பூரணச்

சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்

தண்ணொளி பொலிந்தது!

- கந்தன் வருவான்...

இந்திர மயில்

கந்தனைச் சுமக்க

வந்த வினையும்

வருகின்ற

வல்வினையும்

கந்தனென்றால்

விலகும்;

மந்திரவடிவேல்

விந்தைகள் புரியுமென

நகர்ந்தது

கந்தனின் சேனை!

அலை விளையாடும்

திருச்சீரலைவாய் தீரம்!

வீரபாகு பகர்ந்தான்...

`கந்தா அதோ பார்!

வீரமகேந்திரம்...

அதர்மத்தின் கேந்திரம்.

விதிகெட்ட சூரனின்

அதர்மத் தலைநகரம்!

இனி அவன்

கதியற்றுப் போகட்டும்

விடுக வேலை’ என்றான்!

கந்தன் சிரித்தான்;

`அறமற்றுப் போன

அரக்கனின் சிந்தையில்

ஒளியேற்றி வருக...

இன்சொல்லால்

ஞான விளக்கேற்றி

வருக’ என்றான்.

சடுதியில் மறுத்தான்

வீரபாகு.

`கந்தா! கல்லில்கூட

நார் உரிக்கலாம் -

இன்சொல்லில் அசுரனுக்கு

அறமூட்டுவது

வீண். ஆகவே

சொல் வேண்டாம்;

வேல் பேசட்டும்’ என்றான்!

கந்தன் கடிந்தான்;

கடமையாற்றப் பணித்தான்.

ஆகவே, வீரபாகு

சென்றான்; அவுணன்முன்

நின்றான்; அறம்

பகன்றான்.

உதிர்ந்த கனி

மரம் சேருமா - காய்ந்து

கரைந்த பனி மீண்டும்

திரளாகுமா - ஆணவத்தால்

முதிர்ந்த மனம்

அறம் ஏற்குமா?!

பதுமகோமளை -

இன்சொல்லில் நிகர் மாதுளை;

சேற்றில் முளைத்தச்

செந்தாமரை - சூரனின் மனையாள்!

அவள் சொன்னாள்...

வந்திருப்பது கந்தனென்று

சிவமைந்தனென்று!

அவள் மட்டுமா...

சூரனின் தம்பியொருவன்

கந்தபுராணத்து விபீடணன்.

அவனும் சொன்னான்...

`அண்ணா

அவசரம் வேண்டாம்

அசுரகுலம் கெடும்’ என்றான்.

கேட்டானா சூரன்...

நல்லோரின் நல்லுரைகளைக்

கேளாமல் கெட்டான்!

விளைவு...

பெரும்போர் மூண்டது;

சமராபுரியானது

செந்திலம்பதி!

படையோடு படை மோதின

வாளோடு வாள் மோதின

வில்லும் வேலும் சீறின!

கரம் முறிந்தது சிரம் அறுந்தது

செந்தூரின் கடலில்

செங்குருதி கலந்தது!

சிங்கமுகன் வந்தான்;

அங்கம் அறுபட வீழ்ந்தான்.

தாருகன் வந்தான்;

வேரற்ற மரமாய் சாய்ந்தான்;

கிரெளஞ்சன் வந்தான்;

மலையாகித் தடுத்தான்.

முருகன் விடுத்தான் வேலை;

பிளந்தான் மலையை!

சூரன் மகன்

பானுகோபனும்

வந்தான்

மண்ணில்

சாய்ந்தான்...

இங்ஙனம் முன்னும்

பின்னுமாய்

எத்தனையோ பேர்

வந்தனர் வீழ்ந்தனர்.

நிறைவில் சூரனே

வந்தான்!

வீரத்தின்

விளைநிலம் கந்தன்.

அவனிடம் எடுபடுமா

சூரனின் தீரம்?

ஆகவே,

மாயாவின் மகனவன்

மலையானான்;

முகிலானான்;

காற்றில் கலந்தான்;

விண்ணில் மறைந்தான்;

இன்னும்பல

மாயங்கள் புரிந்தான்.

ஒன்றும் பலன் இல்லை.

நிறைவில்

மாமரமாகி நின்றான்.

வேலால் விறகாகி

வீழ்ந்தான்; சேவற்

கொடியாகி எழுந்தான்;

மயிலாகிப் பறந்தான்.

நம் மயிலோன்

யாவர்க்கும் இறையாகி

நின்றான்!

பற்றற்ற முனிவரும்

நட்புற்ற அமரரும்

வெற்றிவேல் வீரவேலென

ஜயகோஷம் செய்தனர்.

முருகனோ

சிவகோஷம் செய்தான்.

ஐந்தெழுத்து நாதனை தமிழ்

மந்திரத்தால் போற்றினான்.

நன்மையும் தீமையுமாய்

நமக்குள்ளும் சமர் உண்டு.

கந்தனைச் சிந்தையிலேற்றி

ஆணவம், கன்மம், மாயை

மும்மலம் விலக்கினால்,

துன்பத் திரை விலகும்;

இன்பவினை கூடும்.

மண்ணில் மனிதருக்கான

இக்காட்சியை

செந்தூரின் விண்ணும் காட்டியது.

முகில் திரை விலக,

கந்தன் அருளால் பூரணச்

சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்

தண்ணொளி பொலிந்தது!

- கந்தன் வருவான்...