Published:Updated:

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

நடராஜ மூர்த்தம்!
பிரீமியம் ஸ்டோரி
நடராஜ மூர்த்தம்!

நல்லது நடந்தது

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

நல்லது நடந்தது

Published:Updated:
நடராஜ மூர்த்தம்!
பிரீமியம் ஸ்டோரி
நடராஜ மூர்த்தம்!

சென்ற வாரம் போன் அழைப்பு ஒன்று. ஏகாம்பரநல்லூரிலிருந்து சண்முகம் என்ற அடியார்தான் பேசினார்.

``வாசகர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல ணும் ஐயா. நம்ம ஊர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பணி ஏறக்குறைய நிறைவடைஞ்ச மாதிரிதான்...’’

நன்றி பகிர்தலுடன் தொடங்கி நெகிழ்ச்சி யுடன் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நம்மையும் நெக்குருகவைத்தன.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

ஏகாம்பரநல்லூர் நம் வாசகர் களுக்கு மிகவும் பரிச்சயமான திருத் தலம்தான். ராணிப்பேட்டை காஞ்சன கிரி அருகில் உள்ள தலம் இது.

இங்கு அருளும் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலின் மகிமைகள் குறித்தும் அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்தும் சக்தி விகடன் 20.10.2020 தேதியிட்ட இதழில் `காத்திருக்கும் திருப்பணிகள்’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

வாசகர்கள் மற்றும் அடியார்கள் பங்களிப்புடன் பெரும்பான்மை யான திருப்பணிகள் நிறைவுற்று, தற்போது கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருக்கிறது இந்தக் கோயில்.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

எனினும், ஆலய உற்சவத்துக்கான திருமேனிகள் உருவாக்கம், வாகனங்கள், திருவாசி ஆகியவற்றைச் செய்வது போன்ற பணிகள் மீதமுள்ளன. இந்தப் பணிகளும் இனிதே விரைந்து நிறைவேற நம் பங்களிப்பை வழங்குவோம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் அடியார்கள்.

இந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்கள் பலரும் ஏகாம்பர நல்லூர் ஆலயத்தைத் தொடர்புகொண்டு கனிவோடு விசாரித்ததுடன், வழக்கம்போல் தங்களின் பங்களிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். அதன் பொருட்டே தங்களுடைய நன்றியைப் பகிர்ந்து கொண்டார் அடியார் சண்முகம்.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

“நம்ம கோயிலுக்கு உற்சவரா பஞ்சலோக நடராஜ மூர்த்தம் செய்யணும்னு யோசிச்சு நமக்குத் தெரிஞ்ச சிற்பி ஒருத்தர்கிட்ட பேசினோம். அவர் நமக்காக... சிலைக்கான செலவுத் தொகையை குறைத்துக் கொண்டார்; அப்பவும் சிலை செய்ய ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை.

சொன்னா நம்ப மாட்டீங்க... நம் இதழில் கட்டுரை யைப் படித்து விட்டு வாசகர்கள் பலரும் பங்களிப்பு செய்து சேர்ந்ததும் அதே அளவு பணம். அந்தத் தொகையை அப்படியே நடராஜ மூர்த்தம் வடிக்கக் கொடுத்துட்டோம் ஐயா.

ஏற்கெனவே இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல வாசகர்களோடு சேர்ந்து சிவராத்திரி கொண்டாடினோம் அல்லவா? அப்போது அவர்கள் வழங்கிய தொகையை (ரூ. 24,000) தட்சிணாமூர்த்தி சுவாமி கருங்கல் திருமேனிக்காகப் பயன்படுத்தினோம்.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

அந்தத் தட்சிணாமூர்த்தி சுவாமியை நாள்முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு... நுட்பம். அவரை தரிசிக்கும் போதெல்லாம் எங்களுக்குச் சக்தி விகடன் ஞாபகம்தான் வரும். இதோ இப்ப நடராஜ மூர்த்தி வரப்போறார்...’’ என்றார் சிலிர்ப்பும் ஆனந்தமுமாக. அவரே தொடர்ந்து வேறொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“உற்சவ மூர்த்தி தயாராகிவிட்டார். அதுபோல மூல மூர்த்திக்கு ஒரு திருவாசியும் நாகபரணமும் இருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று அடியார்கள் நாங்கள் எல்லோரும் விரும்பினோம். ஆனாலும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. சுவாமி விரும்பினால் அவரே வழிகாட்டுவார் என்று விட்டு விட்டோம்.

மறுநாளே எங்களுக்கு போன் அழைப்பு வந்தது. மதுரையைச் சேர்ந்த வாசகர் ஒருவர் பேசினார். நம் ஆலயத்துக்குத் தன்னோட பங்களிப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அப்போது நாங்கள் எதுவும் கூறவில்லை; அவரே தொடர்ந்து அந்த விஷயத்தைச் சொன்னார்.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

கும்பகோணத்தில் ஒரு சிற்பக்கூடத்தில் ஏகாம்பரேஸ் வரருக்கு திருவாசியும் நாகாபரணமும், அம்பாளுக்குத் திருக்கவசமும் ஐம்பொன்னால் செய்யச் சொல்லி ஏற்பாடு செய்திருப்பதாகவும், செய்து முடித்ததும் இந்த இடத்துக்குச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று விலாசத்தையும் கொடுத்தார்.

நாங்கள் அதிர்ந்துபோனோம். நேற்றுதான் சுவாமியிடம் விண்ணப்பம் வைத்தோம். இன்றே நிறைவேறிவிட்டதே... இதை என்னவென்பது... எல்லாம் அந்த ஈசனின் அருளாடல்...’’ என்று தழுதழுத்த வர் மேலும் தொடர்ந்தார்.

``அந்த ஐயா இவ்வளவும் செய்துவிட்டு என்ன சொன் னார் தெரியுமா... தன்னுடைய பெயரையோ விவரத்தையோ யாருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார். இதுபோன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும்வரை நம்முடைய தர்மங்களுக்கு எந்நாளும் அழிவில்லை ஐயா... திருப்பணிகள் செய்யச் செய்ய சிவப் புண்ணியம் வாய்க்கும் ஐயா...’’ என்று நெகிழ்ந்தார் சண்முகம்.

உண்மைதான்! ஏகாம்பரநல்லூர் மட்டுமல்ல இன்னும் பல தலங்களின் கோயில்கள் நம் வாசகர்களின் பங்களிப் போடு குடமுழுக்குக் கண்டுள்ளன. அற்புதமான அந்தப் பணி களால் உண்டான புண்ணியங்கள் அனைத்தும் நம் வாசகர்களையே சேரும்.

அந்தப் புண்ணிய பலன்கள் அவர்களையும் அவர்களின் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும். அவர்களின் இல்லங்களில் எப்போதும் இறையருள் நிறைந்திருக்கும்.

புரவியில் பவனி!

ஆலயங்களில் நடைபெறும் பெரு விழாக்களின்போது, தெய்வங்களைக் குதிரை வாகனத்தில் அமர்த்தி வீதியுலா நடத்துவார்கள்.

வாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்!

பலரும் அறிந்த குதிரை வாகன உலா என்றால் கள்ளழகர் வைபவம்தான். சித்திரைத் திருவிழாவின்போது வைகையில் எழுந்தருள அழகர் புரவியின்மீது வரும் அழகே அழகு!

சிவாலயங்களிலும் தெய்வங்கள் குதிரையில் உலா வரும் வைபவங்கள் உண்டு. வேதமே வெண்ணிறப் புரவியாக வந்து சிவபெருமானைத் தாங்கிச் செல்வதாகக் கூறுவர்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் குறிப்பிட்ட வண்ணத்திலான புரவிகளைக் குறிப்பிடுகின்றன புராணங்கள். சிவனார் வெண் புரவியில் வருவார் எனில், அம்பிகை வருவது நீலநிறக் குதிரையிலாம். அதேபோல் முருகன் சிவப்பு வண்ணக் குதிரையிலும் விநாயகர் பச்சை வண்ணக் குதிரையிலும் சண்டேசுவரர் பொன் வண்ண குதிரையிலும் பவனி வருவர். இப்படி பஞ்சமூர்த்தியரும் பஞ்ச குதிரைகளில் பவனி வருவது அற்புதக் காட்சியாகும்!

- கே.காமாக்ஷி, மதுரை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism