Published:Updated:

பரதனின் விசேஷ தர்மம்!

ராமர் சீதா
பிரீமியம் ஸ்டோரி
News
ராமர் சீதா

ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி

பாகவதர் ஒருவர், ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை விளக்குவார்.

ஒருநாள், ‘`தர்மத்தில் சாதாரண தர்மம், விசேஷ தர்மம் என்று இரு வகை உண்டு!’’ என்று தொடங்கி, ராமாயணச் சம்பவத்தை விவரித்தார்.

‘`ஒருவன், தன் தாய் தந்தை மற்றும் குரு ஆகியோரது வார்த் தைகளை மீறக் கூடாது. இதைக் கடைப்பிடித்தவர் ராமன் என்றாலும் இது சாதாரண தர்மமே. காட்டுக்குச் செல்லும்படி தந்தை தசரதர் உத்தரவிட்டதாக ராமனிடம் கூறுகிறாள் கைகேயி. அதன்படியே காட்டுக்குச் சென்றார் ராமன்.

இதற்கு முன் ஒருமுறை, குரு விஸ்வாமித்திரரது கட்டளைப்படி தாடகை என்ற அரக்கியைக் கொன்றொழித்தார். ஆக, மாதா, பிதா மற்றும் குரு ஆகியோரது வார்த்தைகளை மீறாத தர்மத்தைச் செய்தவர் ராமன். ஆனால், விசேஷ தர்மம் இப்படிப்பட்டதல்ல!’’ என்ற பாகவதரின் பேச்சை மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவர், தொடர்ந்தார்:

‘`தன் மகன் பரதனே நாடாள வேண்டும் என்பது கைகேயியின் ஆசை. கேகய நாட்டில் இருந்து திரும்பிய பரதனிடமும் தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். ஆனால் நடந்தது வேறு!

பரதனின் விசேஷ தர்மம்!

கைகேயி சொன்னதும் வன வாசம் மேற்கொண்ட ராமனைப் போல செயல்படவில்லை பரதன்.

தந்தை தசரதரின் மறைவுக்கு தன் தாயே காரணம் என்ற கோபம் ஒருபுறம்; உயிருக்குயிரான அண்ணன் ராமனின் பிரிவு ஒருபுறம்... அவன் சிந்தித்தான்.

‘தந்தைக்குப் பிறகு, அவரின் மூத்த மைந்தன் ராமனே நாடாள வேண்டும். அதுவே, ரகு குலத்தின் மரபும் சாஸ்திர தர்மமும் ஆகும். அந்த தர்மத்தைக் காக்க வேண்டும்!’ என்று எண்ணியவன், தாயின் ஆணையையும் மீறினான்.

தான் அரியாசனம் ஏறுவதை மறுத்து, பாதுகா பட்டாபிஷேகம் வரை சென்றான். இதுவே விசேஷ தர்மம்!’’ என்றார் பாகவதர்.