Published:Updated:

கலைவாணியே அருள்வாய் நீயே!

சரஸ்வதி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சரஸ்வதி பூஜை

பூசை ச. அருணவசந்தன்

கலைவாணியே அருள்வாய் நீயே!

பூசை ச. அருணவசந்தன்

Published:Updated:
சரஸ்வதி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சரஸ்வதி பூஜை

ஞான சொரூபமானவளும், கல்வியின் அதிதெய்வமும், அறுபத்து நான்கு கலைகளின் நாயகியாகவும், வாக்கின் தேவியாகவும் விளங்கும் கலைமகளை வழிபட உகந்த அற்புத நாள் மகாநவமித் திருநாளான சரஸ்வதி பூஜை நன்னாள். இந்த நாளில் சரஸ்வதிதேவியின் சிறப்புகளை, விசேஷ தகவல்களை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். நாமும் அன்னை கலைவாணி குறித்த அற்புதத் தகவல்களை அறிந்து மகிழ்வோம்.

நாதமே அனைத்தையும் படைத்தது என்பது புராணங்களின் வாக்கு. அதன்படி கலைமகளே பிரபஞ்சத்தின் கரு ஆவாள். வேத மந்திரங்களே உயிர்களைச் சிருஷ்டித்ததால், நாமகள் உயிர்களின் உருவானாள் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. ஆகவே இந்த அன்னையை வழிபட்டால், எல்லா சபைகளிலும் முன்னிலை பெரும் யோகத்தைப் பெறலாம்.

லைமகளை மிகவும் மகிழ்விக்கும் செயல் எது தெரியுமா? இதற்கு அற்புதமான பதிலைத் தருகின்றன புராணங்கள். `கச்சபி எனும் ஞானவீணையை நாளும் மீட்டும் இந்த ஞானமழை முகிலை மகிழ்விக்கும் ஒரே செயல் உண்மை பேசுவது’ என்கின்றன. ஆகவே சொல்லிலும் செயலிலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்போருக்கு கலைமகளின் கடாட்சம் பூரணமாகக் கிடைக்கும்.

லைமகளுக்குப் பல திருப்பெயர்களைச் சூட்டுகின்றன வேதங்கள். அவை: சத்யப் பிரியை, வேதகோஷப் பிரியை, சங்கீத நாதப் பிரியை, தர்மசாஸ்த்ரப் பிரியை, தர்க்கநியாயப் பிரியை.

கலைவாணியே அருள்வாய் நீயே!

யோக, போக, தியான நிலைகளால் பல்வேறு வடிவங்களைக் கொண்டு திகழ்கிறாள் அன்னை கலைவாணி.

சரஸ்வதி, பராசம்புதிதா, பாரதி, நீல சரஸ்வதி, வாகீஸ்வரி, மகா சரஸ்வதி, பூதலிபி, மாத்ரிகா, தாரோதகலா, பாலா, காமேஸ்வரி, பரமஹம்சா, திரிபுராபைரவி, சம்பத்ப்ரதா பைரவி, சத்குடா பைரவி, மாதங்கி, பிராஹ்மி, பிரஹமணி, சாரதா, காயத்ரீ, மகாவித்யா, மகாவாணி, மகாதேனு, ஆர்யா, வேதகர்பா, வாக் தேவி, ருத்ர பைரவி, த்ரைலோக்ய மோஹனா, ஸ்ரீதத்வ நிதி, ஸ்ரீவித்யா, ஹம்ச வாகினி, சௌபாக்கிய வாகேஸ்வரி ஆகிய அன்னையின் திருவடிவங்களைப் புராணங்கள் பெரிதும் போற்றுகின்றன.

வேதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமல்ல இன்னும்பல ஞான நூல்களும் கலைவாணையைப் போற்றிப் பரவுகின்றன. அக்னி புராணம், தேவி மகாத்மியம், விஷ்ணு தர்மோத்தரம், சாரதா திலகம், பிரபஞ்ச சார திலகம், ரூப மண்டலா, பஞ்ச ரத்னகமம், மண்டன மகாவித்யா, ராமாயணம் போன்ற பல நூல்கள் கலைமகளைப் போற்றுகின்றன.

யிர்களுக்கு ஞானம் வழங்குவதால் ஞானாம்பிகையாக அருள் பாலிக்கும் அன்னை பிரம்மனுக்குத் துணையானாள் என்பதை நாமறிவோம். வேறொரு தகவலும் உண்டு என்கின்றன சிவநூல்கள். சிவனாரின் பேரறிவாக வெளிப்பட்ட - ஆகமங்களின் வடிவாகத் திகழும் ஒரு தேவி உண்டு. அந்த சரஸ்வதிதேவியை, ஆகம சுந்தரி, ஆகமச் செல்வி, ஞான சரஸ்வதி என்றும் போற்றுவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆகமச் செல்வியின் திருவடிவை திருமந்திரம் போற்றுகிறது:

ஏடங்கை நங்கை இறைவி எங்கள் முக்கண்ணி

வேடம் படிகம் விளங்கும் வெண்தாமரை

பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்

சூடுமின் வாய்தோத்திரம் சொல்லுமே

எனப்போற்றுகிறது அப்பாடல்.

கங்கைக்கொண்ட சோழபுரம், வேதாரண்யம், கூத்தனூர், காஞ்சி, தஞ்சை ஆகிய தலங்களில் அமைந்துள்ள சரஸ்வதியின் உருவங்கள் ஞான சரஸ்வதி வடிவங்களாகும்.

லைவாணியை அன்னத்தின் மீது உலா வருபவளாக வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. தென்னகத்திலோ அவள் மயில் மீது வருபவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். மயில் மீது அவள் வருவது, ஆயிரம் கண்களாலும் நாம் அறிவைப் பெற்று வரவேண்டும் என்பதைக் குறிக்குமாம்.

னி கலைமகள் வழிபட்ட சிவத் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.

ட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் தோஷத்துக்கு ஆளான கலைவாணி பிரம்மனுடன் சீர்காழிக்கு வந்து வழிபட்டு நலம் பெற் றாள். இதை `நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில்’ எனப் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

திருக்குருகாவூர் தலத்திலும் பிரம்ம தேவனுடன் சரஸ்வதி வழிபட்டாள். இந்தத் தலத்தில் அவளின் பெயரில் தீர்த்தம் ஒன்றும் உண்டு.

திருநெய்த்தானம் சரஸ்வதி பூசித்துப் பேறு பெற்றத் தலமாகும். இது திருவையாறு சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று. ராமேஸ்வரத்தில் சரஸ்வதி மூன்று வடியாய் இருந்து வழிபட்டாள். அதையொட்டி இந்தத் தலத்தில் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தங்கள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாக்தேவி ஓசையாய் வெளிப்படும்போது வாணி என்றும், அறிவாய் வெளிப்படும்போது சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறாள்.

பிரம்மனுக்கு இடப்புறம் வாணியும் வலப்புறம் சரஸ்வதியும் அருள்கின்றன. இந்த இரண்டு திருவடிவிலும் அவள் வழிபட்ட சிவத்தலம் பெருவேளூர் ஆகும். அங்குள்ள சிவலிங்கத்துக்கு வாணி சரஸ்வதீஸ்வரர் என்று திருப்பெயர்.

இந்தத் தலங்கள் மட்டுமன்றி உடுப்பி, ரிஷ்யச்ருங்கம், கோகர்ணம் ஆகிய தலங்களிலும் சிவ வழிபாடு செய்து அருள்பெற்றதாக திருக் கதைகள் உண்டு.

ல்லோரா கயிலாயநாதர் ஆலயத்தில் சரஸ்வதிக்கு இருபுறமும் கங்கையும் யமுனையும் காட்சித் தருகின்றனர். வேதங்களில் சரஸ்வதி நதி ரூபமாகவும் திகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லோராவில் கங்கை-யமுனையுடன் காட்சி தருகிறாள் போலும்.

கலைவாணியே அருள்வாய் நீயே!

வேதங்கள் சரஸ்வதிதேவியை யாகத்தைக் காக்கும் தேவதையா கவும் யாகத்தை நடத்து வோருக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றியை அளிப்பவளாகவும் கூறுகின்றன. யஜூர் வேதத்தில் உள்ள ஒரு துதிப்பாடல் `வீரமும் அறிவும் நிறைந்தவளான சரஸ்வதி திடத்துடன் எங்களை விருத்தி அடையச் செய்யட்டும்’ என்றொரு துதி உள்ளது.

கத்குரு ஆதிசங்கரரும், கம்பரும், ஒட்டக்கூத்தரும், மகாகவி பாரதியும் இவளைத் தொழுதே காலத்தால் அழியாத காவியம் படைத்தனர். மகாகவி காளிதாசன் இந்தத் தேவி யின் பெயரில் சியாமளா தண்டகம் எனும் நூலை அருளியுள்ளார்.

எல்லா நாள்களிலும் உண்மை உறையுமிடத்தில் வீற்றிருக்கும் கலைவாணிதேவி, சரஸ்வதி பூஜை தினத்தில் நாம் அடுக்கி வைக்கும் ஏட்டிலும் நல்லோர் இதயத்திலும் வீற்றிருக்க வருவாள்.

ஞான நூல்கள் போற்றும் அவளை வரவேற்று, வணங்கி வழிபட்டு, சகல ஞானமும் கைகூட அந்த அன்னையின் அருள் வேண்டுவோம்.

பூஜை செய்ய உகந்த நேரம்:

நிகழும் சார்வரி வருடம் ஐப்பசி - 9 நவமித் திருநாளன்று (25.10.20 - ஞாயிறு) சரஸ்வதி பூஜை வருகிறது. அன்று காலையில் 7:31 முதல் 9 மணிக்குள் ஏடு அடுக்கி, அன்னை கலைவாணியை வழிபடலாம்.

மறுநாள் ஐப்பசி - 10 விஜயதசமித் திருநாள் (26.10.20 - திங்கள்). அன்று காலை 6 முதல் 7:30 மணிக்குள் உரிய நிவேதனங்கள் படைத்து அன்னை கலைவாணியை மனத்தால் தியானித்து வழிபட்டு, ஏடு பிரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism