Published:Updated:

‘ஈசனின் வாக்கு பொய்க்குமா?’

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

படங்கள்: கே.என்.பிரசன்னா

கலிலேயே வழிகள் அறிய முடியாத அந்த வனத்தில் இரவு அடர்ந்திருந்தது.

`இந்த இரவில் எதற்காக இந்த வனத்துக்குள் வந்தோம்’ என்று தோன்றினாலும் பாஸ்கரனின் நடை என்னமோ நிற்கவில்லை. முழுநிலவின் ஒளி ஆங்காங்கே கிளைகளின் இடையே ஒரு கோடுபோல ஊடுருவிப் பாய்ந்து தரையில் நட்சத்திரங்களைப் போல மின்னிக்கிடந்தன. கொஞ்சம் தொலைவில் ஒரு கட்டுமானம் தோன்றியது. அதன் இருள் வடிவமே அது ஒரு கோயில் என்பதை உணர்த்தியது.

‘நமசிவாய’ என்று சொல்லிக் கைகளை உயர்த்தி வணங்கினார். வேகமாக அந்த ஆலயத்தை நோக்கி நடைபோட்டார். சந்திரனின் ஒளிக்கீற்று ஒன்று கர்ப்பகிருகத்தில் ஊடுருவி வீச, அந்த மெல்லிய ஒளியில் உள்ளே இருப்பது சிவனே என்பது உறுதியானது.

என்ன ஓர் ஆனந்த தரிசனம், ‘சந்திரனைத் தலையில் தாங்கிய சந்திர மெளலீஸ்வரராய் தரிசனம் தரும் லிங்க ரூபனை வணங்கியபடியே கோயிலை நெருங்கினார். அப்போது இரு அக்னித் துண்டுகள் கருவறையிலிருந்து மிதந்து வருவதைப்போலத் தோன்றின.

 ‘ஈசனின் வாக்கு பொய்க்குமா?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில நொடிகளில் வருவது விலங்கு என்பதும் அக்னித் துண்டுகளாய் மின்னியவை அதன் கண்கள் என்பதும் புரிந்தது. அந்த விலங்கு கருவறையிலிருந்து வெளியேறி முன் மண்டபத்துக்கு வந்து, நந்திக்கு முன்பாக இடதுபுறம் தன் முன்கால்களை நீட்டிச் சந்நிதிக்கு முன்பாகப் படுத்ததும்தான் புரிந்தது அது ஒரு புலி என்று. முதுகுத் தண்டு சிலிர்க்க அப்படியே நின்றுவிட்டார் பாஸ்கரன். நகரவும் கால்களுக்குத் தெம்பில்லை.

`இப்போது என்ன செய்ய வேண்டும் ஈசனே...’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவர் மனம் நடுங்கியது. இந்த ஆபத்தில் யார் நமக்கு உதவ முடியும்... மார்க்கண்டேயனைப்போல அந்த ஈசனைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ‘விஸ்வநாதா’ என்று அவர் அபயக்குரல் இட்டபோது, யாரோ பாஸ்கரனின் தோள் தொட்டு உலுக்குவதுபோல் இருந்தது.

“என்ன ஆச்சு பாஸ்கரா...”

அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒரு கணத்தில் பாஸ்கரனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அதுவரை கண்டது அனைத்தும் சொப்பனம். ஆனால், அதை சொப்பனம் என்று எளிதில் சொல்லிவிட முடியுமா... அந்த அற்புத தரிசனம் இன்னும் மனக்கண்ணில் நிற்கிறது!

‘சொல்கிறேன்’ என்று சொல்லி எழுந்து காலைக் கடன்களையும் அனுஷ்டானங்களையும் முடித்து, அப்பாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். கண்ட கனவில் துளிகூட மங்காது அவரின் நினைவோடு இருந்தது.

 ‘ஈசனின் வாக்கு பொய்க்குமா?’

`‘அது ஒண்ணுமில்லைடா, காசி விஸ்வநாதர் உன்னை பூஜை செய்யக் கூப்பிடுறார்’’ என்றார் அப்பா.

“அப்போ நான் இப்போ காசிக்குப் போணுமா”

அப்பா சிரித்துவிட்டார்.

“காசினின்னா உலகம்னு பொருள். இந்த உலகம் முழுவதும் வியாபிச்சி இருக்கிறவர் விஸ்வநாதர். அந்த விஸ்வநாதர் காசில மட்டும் இல்லை. இந்தத் தேசம் எங்கும் பல இடங்களில் எழுந்தருளியிருக்கார். நமக்காக மகான்கள் விஸ்வநாதரைப் பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்காங்க. அப்படி ஒரு காசி விஸ்வநாதர் நம்ம ஊருக்குப் பக்கத்திலேயே இருக்கார்.”

“என்னப்பா சொல்ற...”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“தெரியாதா, இதோ இந்தப் பக்கக் காடு இருக்கே... அதுகுள்ள ஒரு பழைய காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு. யாரும் போறதில்லை. எல்லாம் பாழடைஞ்சு போயிருக்கு. அதுதான் நீ கனவுல கண்ட கோயிலாயிருக்கும். அப்புறம் புலி வந்ததுன்னு சொன்னியே, அது நிச்சயம் புலிக்கால் முனிவராக இருக்கணும். அவர்தான் இந்த லிங்கத்தையே இங்க பிரதிஷ்டை செய்தார். நீ உன் சகாக்களைக் கூட்டிக்கிட்டு அங்கபோய் பாத்துட்டு வாயேன்” என்றார்.

பாஸ்கரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தன் சகாக்கள் நால்வரை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் நடக்கத் தொடங்கினார்.

 ‘ஈசனின் வாக்கு பொய்க்குமா?’

நடக்கும் தோரணையிலேயே அவருக்கு ஏற்கெனவே பாதை தெரியும் என்பதாக நண்பர்கள் நம்பினார்கள். 15 நிமிட நடையில் அந்தக் கோயில் வந்துவிட்டது. அதைப் பார்த்ததும் அதுவே, தான் கனவில் கண்ட கோயில் என்பது புரிந்துவிட்டது. நடையை விரைந்துபோட்டார்.

அப்பா சொன்னதுபோல அது காசி விஸ்வநாதர் ஆலயம்தான். அங்கே அன்னை விசாலாட்சியாக அமர்ந்திருந்தாள். மேலும் அங்கே ஓர் அதிஷ்டானம் போன்ற அமைப்பு. பாஸ்கரனுக்கு இதயம் வேகமாகத் துடித்தது. அதிஷ்டானத்தைப் பார்க்கும்போது ஒரு புலி மூச்சுவிடுவதுபோன்ற கற்பனை தோன்றியது.

அழுக்கான குப்பைகள் நிறைந்த சந்நிதியில் பாஸ்கரன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார்.

“சுவாமி நீங்கள்தான் என் கனவில் புலியாக வந்து தரிசனம் கொடுத்தீர்கள். இதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேன்” என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார். நண்பர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். அடுத்த கணம், துள்ளி எழுந்து, “இன்று முடிந்தவரை இந்த ஆலயத்தைத் தூய்மை செய்துவிட வேண்டும்” என்று சொல்லவும், நண்பர்கள் உற்சாகமாகப் பணியாற்றினார்கள். மனிதர்களின் கர்ம வினைகளைப் போலக் குவிந்துகிடந்த குப்பைகளையெல்லாம் அள்ளி வெளியே வீசினர்.

கருவறையிலிருந்து வெளிமண்டபம்வரை அனைத்தையும் சுத்தம் செய்து அருகிலிருந்த குளத்திலிருந்து நீர் எடுத்துவந்து, கோயிலைக் கழுவி சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து காட்டுப் புஷ்பங்கள் பறித்து அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

இந்த வேலைகளைத் தொடங்கும்போதே ஒரு நண்பர் ஊருக்குள் ஓடிப்போய் கொஞ்சமாய் நிவேதனம் செய்து எடுத்துக்கொண்டு ஓடிவந்தார்.

சுவாமிக்கு அதை நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டியபோது, அங்கே காசி விஸ்வநாதர் அமர்ந்து புன்னகைப்பதைப் போலத் தோன்றியது. நண்பர்களுக்கும் பாஸ்கருக்கும் மனம் குளிர்ந்தது. பின்பு பிரசாதத்தை ஆளுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு அங்கேயே அமர்ந்து உண்டனர்.

“இன்று நாம் ஐவரும் சுவாமியை வணங்கினோம். இறைவன் அருளால் இனி வருங்காலத்தில் இத்தலத்தின் மகிமையை அறிந்து மக்கள் கூடுவார்கள். இது சத்தியம்” என்றார் பாஸ்கர்.

திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது அவர் பிரக்ஞையோடு சொன்ன வார்த்தைகள் இல்லை. அந்த ஈசன் அவர் மூலம் சொன்ன சத்தியவாக்கு. ஈசனின் வாக்கு பொய்க்குமா என்ன?!

பாஸ்கர குருக்கள் கண்முன்னால் இந்தத்தலம் பொலிவுறுவதைப் பார்த்து வியந்த வண்ணம் இருந்தார். பின்னே, ‘தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்று பழமொழியே சிவாசார்யர்கள் மத்தியில் உண்டு. அதாவது தில்லையில் மூவாயிரம் சிவாசார்யர்களும் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூரில் மூவாயிரத்தியொரு சிவாசார்யர்களும் வாழ்ந்தார்கள் என்று பொருள்.

சிவமும் சைவமும் தழைத்து ஓங்கிய பகுதியல்லவா திருப்பட்டூர்... ஆனால் கலியின் லீலை இந்த ஊரில் பாஸ்கர குருக்களின் குடும்பத் தைத் தவிர வேறு சிவாசார்யர்கள் யாரும் அந்தக் காலகட்டத்தில் இல்லை.

சுற்றியிருக்கும் கிராமங்கள் அனைத்துக்கும் சைக்கிள் மிதித்த படி சென்று அங்கிருக்கும் சிவாலயங்களில் ஒருகால பூஜை செய்து வந்தார். ஆனால் கருணாமூர்த்தியான அந்த காசி விஸ்வநாதர் தன் இருப்பை வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்க முடிவு செய்துவிட்டால், அதை யார் தடுக்க முடியும்...

காசி விஸ்வநாதர் கோயிலின் மகத்துவங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. தல வரலாறும் தெரியவந்தது. குறிப்பாக வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரின் மகிமைகளும் வெளிப்பட்டன.

தேவேந்திரன் சிவ அபிஷேகத்துக்கு கங்கை தீர்த்தத்தைத் தர மறுக்க, கோபம் கொண்ட புலிக்கால் முனிவர் இந்தப் புண்ணிய பூமியில் கங்கைக்கு நிகரான புனிதம் வாய்ந்ததொரு தடாகத்தை உருவாக்கிய திருக்கதையைச் செவிமடுப்பவர்கள் சிலிர்த்துப் போவார்கள்.

அதுமட்டுமா? புலிக்கால் முனிவருடன் பதஞ்சலி முனிவரும் இங்கு வந்து வழிபட்ட கதையையும் இன்றைக்கும் இருவரும் இங்கே சூட்சுமமாய் அருளும் சாந்நித்தியத்தையும் விரிவாக விளக்குகின்றன ஞான நூல்கள்.

மகான்களின் பார்வை படுவதே சிறப்பு. அவர்கள் திருவடிபடுமாயின் அது பெரும் சிறப்பு. அவர்கள் அங்கேயே தங்கிவிடுவ தென்றால் அந்த மண்ணின் மகிமையைச் சொல்லவும் வேண்டுமா?

மகிமை வாய்ந்த அந்த அருள் கதைகள்...

- அடுத்த இதழில்...