பார்வதிதேவியின் ஆணைப்படி சும்பன் - நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்தாள் காளிமாதா.

ஆனால், அசுர ரத்தத்தைப் பருகியதால், காளிக்கும் அசுர குணம் மேலோங்கியது. காளியைக் கட்டுப்படுத்த வந்த சிவனார், அவளுடன் நடனப்போட்டியில் பங்கேற்க நேர்ந்தது!

சிவனாரின் தாண்டவம் தொடர்ந்தது. இவர் ஒரு தாண்டவத்தை ஆடிக்காட்ட, காளிதேவியும் அதே போல் ஆடிக்காட்டினாள். 17 தாண்ட வங்கள் ஆடி முடித்தாயிற்று. அடுத்த தாண்டவம்... தன்னுடைய வலக்காதில் இருந்த குண்டலத்தைத் தவறவிட்ட சிவனார், சட்டென்று இடது காலால் அந்தக் குண்டலத்தை எடுத்து, அதே காலை உயரத் தூக்கி, குண்டலத்தை கரத்தில் வாங்கி அணிந்து கொண்டார்.

காளிதேவியால் அப்படி ஆட முடியவில்லை. சிவனார் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி நடை பெற்ற தலம் திருவாலங்காடு; சென்னை - அரக்கோணம் செல்லும் வழியில், சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவதாண்டவத்தைக் காரைக்கால் அம்மையார் தினமும் காணும் பேறு பெற்ற தலமும் இதுதான்!

ஆலயத்தின் மூலவருக்கு ஶ்ரீவடவாரண்யேஸ்வரர், ஆலவன ஈசர், தேவர் சிங்கப் பெருமாள் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அம்பிகை - ஶ்ரீவண்டார் குழலி. இங்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திர விழா விசேஷம் (ஜூன் 28-ஆம் தேதி) அனை வரும் தரிசிக்க வேண்டிய ஒன்று.

ஈரோடு அருகில் உள்ளது காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயில். இங்கே, திருவாதிரை நாளில், ஶ்ரீநடராஜரும் சிவகாமியம்மை யும் பரிசலில் எழுந்தருள்வர்; இன்னொரு பரிசலில் மேள-தாளங்கள் இசைக்க... ஆற்றிலேயே கோயிலைச் சுற்றி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்!

கரூர் அருகில் உள்ளது புகழிமலை வேலாயுதம்பாளையம். இங்கு உள்ள ஶ்ரீபால சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா விசேஷமாக நடைபெறும்.

மலை அடிவாரத்தில், ஶ்ரீநடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு தம்பதி சமேதராக கிரிவலம் வருவர். இந்த வேளையில், ஶ்ரீநடராஜரை தரிசித்தால், திருமண பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.