எப்போதும் எங்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்பவர் மகா பெரியவா.

எவ்வளவு பெரிய துன்பங்கள் எங்களைச் சூழ்ந்தபோதிலும் அவற்றிலிருந்து மீட்டெடுத்துக் காப்பாற்றிய கருணாமூர்த்தி அவர். அவரை நினைக்கும்போதெல்லாம் இந்தச் சம்பவம் என் நினைவுக்கு வரும்.

இரண்டாவது மகளின் திருமணம்... பணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை என்று பல்வேறு பிரச்னைகளைக் கடந்து ஒரு வழியாகக் கடவுள் ஆசீர்வாதத்தால் திருமணம் நிச்சயமானது. எங்கள் குல வழக்கப்படி முதல் பத்திரிகையைக் காஞ்சிபுரம் சென்று மடத்தில் வைப்பது வழக்கம். நானும் எனக்கு நெருக்கமான பக்கத்து வீட்டு மாமியும் முதல் பத்திரிகையை மகா பெரியவாளிடம் சமர்ப்பிக்கக் காஞ்சிபுரம் புறப்பட்டோம்.

காலை 7 மணிக்குப் புறப்படும் போது குடித்த காபியோடு வெறும் வயிற்றுடன் மடத்துக்குள் நுழைந்தோம். அங்கு `அதிருத்ர’ ஹோமம் நடந்துகொண்டிருந்தது. உள்ளே சென்று பெரியவாளை தரிசிக்கவேண்டும் என்றோம்.

அங்கிருந்தவர்கள், “பெரியவா, ஏகாதசியன்று யாரையுமே பார்க்கமாட்டார். அதனால், இன்று அவரை தரிசிக்க முடியாது” என்றார்கள். நாங்கள் இருவரும் விவரத்தைச் சொன்னோம்.

“பத்திரிகையை மடத்து ஆபீஸில் கொடுத்து விடுங்கள்” என்றார்கள். எங்களுக்குப் பெருத்த ஏமாற்றம்; வருத்தம். பத்திரிகையை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, உடன் வந்தவரிடம் “என்ன மாமி இப்படி ஆயிடுத்தே... பெரியவாளிடம் சமர்ப்பிச்சு, அவர் ஆசியைப் பெறலாம்னு வந்தேன். நமக்குக் கொடுப்பினை இல்லை போல...'' என்று சோகத்துடன் சொல்லியபடியே புறப்பட ஆயத்தமானேன்.
.மகா பெரியவா - 50.
உடன் வந்த அந்த மாமி, ``வந்தது வந்தோம். இந்த அதிருத்ர ஹோமத்தை ஒரு பிரதக்ஷிணம் செய்து விட்டுப் போவோம். அந்தப் புண்ணியமாவது வாய்க்கட்டும்” என்றார். எனக்கும் அது சரியென்று படவே, பின் வழியாக அங்கிருந்தவர்களிடமிருந்து ஒதுங்கி உள்ளே நுழைந்தோம்.

உள்ளே சென்ற எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கே ஓர் இடத்தில் மகா பெரியவா அமர்ந்திருந்தார். அருகில் அணுக்கத் தொண்டர் பாலு. எங்களுக்குக் கை கால் ஓடவில்லை! எங்கள் இருவரையும் ஏறிட்டுப் பார்த்தவர் அருகில் வரும்படி மெதுவாகத் தலையசைத்தார். பெரியவாளின் அணுக்கத் தொண்டர் பாலு, என் கணவரின் பால்யகால தோழர்.

நாங்கள் இருவரும் ஓடோடிச் சென்று பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு எங்களிடமிருந்த மற்றொரு பத்திரிகையை தாம்பாளத்தில் வைத்துச் சமர்ப்பித்தோம்.அதைச் சில நிமிடங்கள் உற்றுப்பார்த்துவிட்டு பாலுவிடம் ஏதோ சமிக்ஞையாக சொன்னார் மகாபெரியவா. தொடர்ந்து ஒரு புன்னகை.

எங்களுக்குப் பரம திருப்தி; பரமனையே தரிசித்த மகிழ்ச்சி! மெள்ள நகர ஆரம்பித்தோம். அப்போது பாலு எங்களைஅழைத்து, “உங்க ளைப் பலகாரம் சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்கிறார் பெரியவா” என்றவர் தொடர்ந்து கூறினார்... “அங்கே இருந்தால் பால் பழம் என்று கொடுத்து உபசாரம் செய்கிறார்கள். ஆகவேதான் இங்கே வந்து தனியாக இருக்கிறார், பெரியவா. எதிர்ப் பக்கம் ஒரு வீட்டில் பலகார பந்தி நடக்குது. சாப்பிட்டுப் போங்க” என்று சொன்னார்.

`பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற திருவாசகம் நினைவுக்கு வந்தது. மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து அந்தத் தெய்வத்தை உள்ளத்தில் நிரப்பிக்கொண்டு வந்தோம். அவரின் அனுக்ரஹத்தால் என் மகள் திருமணம் சீரும் சிறப்பாக நடைபெற்றது.

எங்களின் ஆராதனைக்குரிய அந்தத் தெய்வம் கடந்த மார்ச் 8-ம் தேதியும் ஒரு திருவிளையாடலை நடத்தி மெய்சிலிர்க்க வைத்தது. ஆம், விகடன் குழுமம் நடத்திய `பொன்னியின் செல்வன்' யாத்திரையில் நானும் என் மகளும் கலந்துகொண்டோம்.

இரண்டாம் நாள் யாத்திரை முடித்து இரவு கும்பகோணம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு சுவர் மட்டும் பழைமையாகக் காட்சியளித்தது. `ஏன் இப்படி பராமரிக்காமல் விட்டிருக்கிறார்கள்' என்ற எண்ணத்தில், நாங்கள் அந்த அறையை மாற்றிக் கொடுக்கச் சொல்லி விடுதி ஊழியரிடம் கேட்டுக்கொண்டோம். அவர் அங்கு யாரோ ஒரு மகான் வந்து தங்கியதாகவும் அவர் நினைவாகவே அந்தச் சுவர் அப்படியே பராமரிக்கப்படுவதாகவும் சொன்னார்.

`யார் அவர்?' என்று கேட்டதற்கு, வெளியே இருந்த போட்டோவைக் காட்டினார். அதில் மகா பெரியவா புன்னகையோடு அருள்பாலித் துக்கொண்டிருந்தார்.
.மகா பெரியவா - 46.
`ஆஹா... இது மகா பெரியவா தங்கிய இடமா...' என்று பரவசத்தில் ஆழ்ந்துபோனோம். அந்த மனித தெய்வம் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அங்கு அப்படியே இருந்தன. அந்த விடுதிக்கு வரும் முன்புதான் அவரை மனத்தில் எண்ணி தியானித்தபடியே இருந்தேன். உடனே என்னை ஆட்கொள்ள வந்துவிட்டாரே என்று எண்ணி நெகிழ்ந்து அந்த அறையில் விழுந்து நமஸ்கரித்தோம்.

இரவு முழுக்க மகானின் பெருமையைப் பேசியபடியே தூங்காமல் இருந்தோம். சுமார் 30 பேர் கொண்ட குழுவில் எங்களுக்கு மட்டும் அந்த அறையை ஒதுக்கவைத்து அனுக்ரஹித்த மகா பெரியவாவின் கருணை கடலைப்போன்றதல்லவா!