Published:Updated:

`ஆலின் இலையாய் அருளேலோ...’

தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

பிரீமியம் ஸ்டோரி

மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் அருள்கிறார் கிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள்; அந்த நாளின் அதிகாலைப் பொழுது ... மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து, ‘திருப்பாவை நோன்பு’ ஏற்றாள். ஆண்டாளின் அவதாரத் தலமான வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் விழா வைபவங்கள் மிகவும் அற்புதமானவை.

மார்கழி மாதம் 23-ம் தேதி இரவு தொடங்கும் ஆண்டாள் நீராட்ட உற்ஸவம். இந்த உற்ஸவம், தை மாதப்பிறப்பு வரை கொண்டாடப்படும்.

`ஆலின் இலையாய் அருளேலோ...’

நீராட்ட உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும், தங்கப் பல்லக்கில் வடபெருங்கோயிலின் ராஜகோபுர வாசலில் ஆண்டாள் எழுந்தருள, ‘நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். (அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.)

இதில் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஆண்டாளே சொல்வதாக ஐதிகம். இந்தப் பாடல், ‘ஆலின் இலையாய் அருளேலோ எம்பாவாய்’ என்று முடிவுறும். சம்ஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள். ஆக... ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள் போலும்!

விருட்சிக ஏகாதசி!

கேரள மாநிலத்தில் வைகுண்ட ஏகாதசியை, ‘விருட்சிக ஏகாதசி’ என்கிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விழாவைப் பதினெட்டு நாட்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி தீப ஸ்தம்பங் களில் விளக்குகள் ஏற்றப்படுவதால், கோயில் சொர்க்கலோகமாகக் காட்சி அளிக்கும்.

ஏகாதசி அன்று அதிகாலை 3 மணி முதல் மறு நள் - துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும். விருட்சிக ஏகாதசியையொட்டி அதிகாலை வேளையில் குருவாயூரப்பனை தரிசிப்பது, ‘சொர்க்க வாசல் வைபவ’த்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

- எஸ்.கண்ணன், சென்னை-54

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு