குற்றாலம்- செங்கோட்டை பாதையில் சித்தேஸ்வரி பீடம் என்ற மௌனசாமி மடம் உள்ளது. இதை நிறுவியவர், சித்த புருஷரான ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள். இவர் ஸித்தி அடைந்த சமாதியும் அங்கு உள்ளது. தனது ஸித்து மகிமையால், மக்களின் துயரங்களைப் போக்கியவர் இந்த சுவாமிகள்.

இந்த மடத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு நாடிப்பிள்ளையார் சந்நிதி. ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள் காலத்தில்தான் இந்த ஸித்தி விநாயகரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கற்பூர ஆரத்தி செய்யும்போது இந்தச் சிலை அசையுமாம். இந்த விநாயகர் சிலையின் தொடையில் ஜீவநாடி துடிக்கிறது என்பர். ‘மருத்துவர்கள் தங்களது ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துப் பார்த்தனர். முடிவில், விநாயகருக்கு நாடி துடிப்பது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்’ என்பதாக ஒரு தகவல் உண்டு.

இந்தத் துடிப்பு நான்கு நாட்கள் தொடர்ந்து நீடித்ததாம். அதன் பிறகு இந்த விக்கிரகத்தின் பகுதிகளைச் சோதித்த சில நிபுணர்களும், இந்த அதிசயத் தன்மை கண்டு அதிசயித்தனர்.

வெள்ளைக்கார ஆட்சியின்போது ஆளுநராக இருந்த ஆர்ச்பால் துரையும் அவர் மனைவியும் இந்த மடத்துக்கு வந்து நாடிப் பிள்ளையாரைக் கண்டு வியந்தனராம். இந்தத் தகவல், வெங்கடசுப்பிரமணிய ஐயர் எழுதிய ‘ஸ்ரீமௌன சுவாமிகளின் வரலாறு’ நூலில் இடம் பெற்றுள்ளது.

- கே.சங்கரன், திருநெல்வேலி