பொன்னையும் பொருளையும் ஏராளமாக அடைந்து விடலாம். ஆனால், வியாதி இல்லாத உடலைப் பெற முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால், ராகவேந்திரரது திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபித்தால், நிச்சயம் வியாதி இல்லாமல் வாழலாம். ஏன், செத்தவரே பிழைத்த அதிசயமும் ராகவேந்திர நாம மகிமையால் நடந்ததுண்டு. ‘எழுநூறு ஆண்டு காலம், என்னை மனதார நினைக்கும் மனிதர்களிடம் நான் வருவேன்!’ என்று சொன்னவர் ராகவேந்திரர்.

அன்வாரி மாதவராவ் என்பவர், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் எம்.பி.! நேருவின் காலத்தில் வாழ்ந்த இவர், எந்நேரமும் ராகவேந்திரரையே நினைப்பவர்.

ஒரு நாள் அமெரிக்கா சென்ற தூதுக் குழுவில் அன்வாரி மாதவராவும் இடம் பெற்றிருந்தார். போன இடத்தில் திடீரென்று மாதவராவுக்கு மாரடைப்பு ஏற்படவே, மருத்துவமனையில் அவரை சேர்த்தார்கள், அவருடன் வந்த மற்ற எம்.பி.க்கள். ஆனால், அவர் மரணம் அடைந்து விட்டதாகக் கூறி, அவரது உடலை மார்ச்சுவரிக்குக் கொண்டு சேர்த்தனர் மருத்துவர்கள். மறுநாள் காலையில் அவரது உடலைக் கொண்டு செல்லுமாறு கூறிவிட்டார்கள்.

அன்றிரவு பிணவறையில் இருந்த மாதவராவுக்கு திடீரென நாடித்துடிப்பு ஏற்பட... கண் விழித்துப் பார்த்தார். பக்கத்தில் பிணங்களைப் பார்த்ததும் அவருக்கு, ‘என்ன நேர்ந்தது?’ என்பது புரிந்தது. ‘’ராகவேந்த்ரா, எனக்கா இந்த நிலைமை...’’ என்று அவர் கண்ணீர் வடித்த அடுத்த நொடியில்- அவர் எதிரே நின்றிருந்தார் ராகவேந்திர ஸ்வாமிகள்.

‘’மாதவா... பயப்படாதே... உனக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை. நீ இந்தியா செல்லும் வரை உன் கூடவே நானும் வருவேன்... படுத்துக் கொள்’’ என்று சொல்லி ஸ்வாமிகள், அவருடைய நெஞ்சை இதமாக வருடிக் கொடுத்தார். மாதவராவ் உடனே உறங்கி விட்டார்.

மறுநாள் காலை எம்.பி.க்களிடம் உடலைக் கொடுக்க வந்த டாக்டர்கள், ராவின் உடல் அசைவதைக் கண்டு அதிசயித்தனர். பின்னர் கண்களில் நீர் மல்க மாதவராவ் கூறியதைக் கேட்ட டாக்டர்கள் பிரமித்தனர். மாதவராவின் மருத்துவ அறிக்கையில் இந்த அற்புதத்தை எழுதி வைத்தனர் மருத்துவர்கள்.

- பா.சி. ராமச்சந்திரன், சென்னை-19