Published:Updated:

சிந்தை மகிழ... சிவ புராணம்!

சிவ புராணம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ புராணம்

யுகம்தோறும் அண்டசராசரங்கள் தோன்று வதும் அழிவதும் இயல்பு.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

யுகம்தோறும் அண்டசராசரங்கள் தோன்று வதும் அழிவதும் இயல்பு.

Published:Updated:
சிவ புராணம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ புராணம்

சிவ பக்தர்களுக்கு - அடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், மாணிக்கவாசகப் பெருமானால் சொல்லப்பட்டு, ஈசனால் எழுதப்பட்ட பெருமை உடையது.

51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டது திருவாசகம். ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என்ற முழுமையான நிலைகளைக் கொண்ட துதிப் பாடல்களின் அற்புதக் களஞ்சியம் இது.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

மனிதன் தெய்வத்துக்குச் சொன்ன வேதம் என்பதால் பெருமைபெற்ற திருவாசகம், ஞானத்தின் வடிவமாக, சிவத்தின் அம்சமாகத் தோன்றிய மாணிக்கவாசகரால் உருகி உணர்ந்து எழுதப்பட்டது. அதனாலேயே அயல் நாட்டவரும் உள்ளம் உருகி, மொழிப் பெயர்ப்பு செய்துள்ளனர் இந்த ஞானநூலை.

அற்புத புராணம்!

யுகம்தோறும் அண்டசராசரங்கள் தோன்று வதும் அழிவதும் இயல்பு. சகலமும் ஈசனுள் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் ஈசன் மகிழ, கேட்டு ரசிக்க உருவானதே திருவாசகம். இதற்குச் சான்றாக விளங்குவது, திருவண்டப் பகுதி. கேட்பவரை உருகவைத்து உள்ளார்ந்த ஞானத்தால் சிவத்தை உணரவைக்கும் திருவாசகத்தின் சிறப்புப் பகுதி என்றால், அது சிவபுராணம் எனலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்தை மகிழ... சிவ புராணம்!

திருவாசகத்தின் ஒட்டுமொத்த சாரமும்...ஏன் சைவ சித்தாந்தத்தின் கருத்துக்கள் மொத் தமும் சிவபுராணத்தில் அடங்கி விடுகின்றன என்றே சொல்லலாம். 95 வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் ‘புராணம்’ என்ற சிறப்பைப் பெற்றதன் காரணமே அதனுள் ஆழ்ந்து கிடக்கும் அற்புதமான அனுபங்களால்தான்!

`இதன் 95 வரிகளை விரித்துச் சொல்வது என்பது மிக மிகக் கடினமான விஷயம்' என்றே கற்றறிந்த சைவப் பெருமக்கள் சொல்வது உண்டு. கலிவெண்பா வடிவில் அமைந்த சிவபுராணம் மாணிக்கவாசகரால் திருப்பெருந்துறையில் முதன்முதலாக எழுதப் பட்ட பாடல் எனப்படுகிறது.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

சிவப்பரம்பொருள் தென்முகக் கடவுளாக வந்து, ‘தென்னவன் பிரம்மராயன்’ எனும் வாதவூரரை ஆட்கொண்ட கணத்தில், வாதவூரராம் மாணிக்கவாசகர் உள்ளம் கசிந்து ஈசனை வியந்து பாடிய பாடல் இது. அதனால் இன்றும் இதை படிப்பவர்கள் உள்ளம் கசிந்து அழவே செய்வார்கள் என்பது கண்கூடு.

‘நமசிவாய வாழ்க’ என்று தொடங் கும் பாடலில் `வாழ்க' எனும் வார்த்தையின் எண்ணிக்கை - 6; அடுத்து 5 முறை `வெல்க' வரும். அதையடுத்த வரிகளில் `போற்றி' 8 முறை வரும். ஆக, இதன் மூலம் திருவாசகத்தின் மொத்த வரிகளும் 658 என்பதை முதல் பாடலிலேயே உணர்த்தினாரோ அந்த ஞானகுரு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமா, தான் இந்தச் சிவ புராணத்தை இயற்றியது ஏன் என்பதை 19 மற்றும் 20-ம் வரிகளில் அழகாக கூறிவிடுகிறார் பாருங்கள்.

“சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும்

ஓய உரைப்பன் யான்” என்கிறார்.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

அதிலும் குறிப்பாக, தான் எழுதியது ஈசனின் அருளால் என்பதை ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று குறிப்பிடுகிறார்.

சிவபுராணத்தின் `நமசிவாய' எனும் முதல் வார்த்தையே, ஒரு நூல் அளவுக்கு விவரித்துக் கூறும் பெருமையை உடையது என்பர்.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

`நமஸ்' என்றால் வணங்குதல் - வணங்குகிறேன் எனப் பொருள். சிவனை வணங்குகிறேன் என்பதே நமசிவாய. ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்ற இரண்டாவது வரி, ஆழ்ந்த அன்பை அடிப்படையாகக் கொண் டது. `ஈசனைப் பற்றிக் கொண்டோம், அவனை விடமாட்டோம்' என்று சொல்வது சாதாரணரின் இயல்பு. ஆனால் மாணிக்கவாசகர் `இமைப் பொழுதளவுகூட என்னை விட்டு நீங்காமல் நெஞ்சில் உறைந்திருக்கும் ஈசன் வாழ்க' என்று உரைத்தார்.

அவரின் இந்த நெகிழ்ச்சிதான் ஜி.யு.போப் எனும் கனடா நாட்டுச் சமயப் பிரசங்கியை உலுக்க வைத்தது. அவரைத் தமிழ் மாணவனாக்கி திருவாசகத் தேனை பருக வைத்து, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் வைத்தது.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

நான்காவது வரியில் ‘ஏகன் அநேகன்’ என்ற வாசகம், ஒருவனாகவும் பல வடிவினாகவும் இருக்கும் இறைவனின் தன்மையை விளக்கு கிறது. இன்னும் குறிப்பாக, தன் வாழ்க்கை வரலாற்றையும் சிவபுராணத்தில் நுட்பமாக உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

22-ம் வரியில் ‘எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி’ என்கிறார். இந்த வரியை வியக்கும் சிவ அன்பர்கள், `22-ம் வயதில், தன்னை ஈசன் திருப்பாதங்கள் காட்டி ஆட்கொண்டு விட்டார் என்பதைக் கூறுகிறார்' என்பர். 32-வது வரியில் ‘மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்’ என்கிறார். ஆம் மாணிக்கவாசகர் தமது 32-வது வயதில் தில்லைக் கூத்தனாம் ஈசனோடு கலந்துவிட்டதையும் கூறிவிடுகிறார். மாணிக்கவாசகரின் பெரும் தீர்க்கதரிசனம் இது என்பார்கள் பெரியோர்கள்.

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி...’ என்ற வரிகளால் உலக உயிர்களின் பரிணாம தத்துவத்தை சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே உணர்த்தியவர் வாதவூர் வள்ளல்.

‘இத் தாவர சங்கமத்துள்’ என்ற வரி ஒன்றும் உண்டு சிவபுராணத்தில். உயிர்கள் இரண்டு வகை. அவை - தாவர, சங்கமம் என்கிறார். தாவரம் என்றால் ஒரே இடத்தில் நிலைத் திருக்கும் புல், பூண்டு போன்றவை. சங்கமம் என்றால் அசையக்கூடியவை என்று உணர்த்தி விடுகிறார். நவீன விஞ்ஞான வல்லுநர்களும் வியக்கும் அரும்பெரும் வாக்கியம் இது.

சிந்தை மகிழ... சிவ புராணம்!

மேலும் பல இடங்களில் சிவத்தின் வடிவம், தன்மை, அருள் திறம், கருணை... ‘ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்கு வாய்...’ என்று ஈசனின் ஐந்தொழிகள், பதி-பசு- பாசம் எனும் தத்துவம்.. என ஒவ்வொன் றையும் பட்டியலிட்டு வியக்கிறார்.

‘சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே...' என்ற வரிகள் எல்லாம் கற்பனை யால் எழுந்தவையாக இருக்கவே முடியாது. ஈசனை நேரடியாக தரிசித்தவர் மட்டுமே உரைக்கவல்ல அனுபவச் சத்தியம்!

சிவபுராணத்தின் பயனாக மாணிக்கவாசகர் உரைப்பது, பிறவித் தளை அறுபடும் என்பது தான். ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்’ என போற்று பவர், ‘கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே’ என்று இறையைத் தொழுகிறார். ஆம், மோட்சமும் ஞானமும் அமைதியும் விரும்புவோருக்குச் சிவபுராணமே சிறந்த மருந்து. நாமும் சிந்தையில் சிவபுராணம் ஏற்று வோம்; பிறவித் துன்பமில்லா நிலையை வரமாகப் பெறுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism