Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: கேட்டதும் கொடுப்பாள் பாலாம்பிகை!

ஸ்ரீவாலாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீவாலாம்பிகை

ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள்.

`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். அந்தத் தெய்வமே குழந்தையாக இருந்துவிட்டால், அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இருக்காது.

முருகனை பாலமுருகன் என்றும், கிருஷ்ணனை பாலகிருஷ்ணன் என்றும் குழந்தையாக பாவித்து வழிபடுவதைப் போலவே, அம்பிகையையும் பாலாம்பிகையாக வழிபடுவது மிகவும் விசேஷம்.

ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள். மேலும் சித்தர்கள் வாலையை மனோன்மணி என்றும் அழைக்கின்றனர்.

எங்கள் ஆன்மிகம்: கேட்டதும் கொடுப்பாள் பாலாம்பிகை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் காட்சி அருளும் பாலாம்பிகையை, அபிராமிபட்டர் தம்முடைய அபிராமி அந்தாதி ஐந்தாவது பாடலில், ஞான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மனோன்மணி என்று போற்றிப் பாடியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அழகு ஆபரணத்தில் தோன்றியவள்

ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை மற்றும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் பாலாம்பிகை. நிகரற்ற அழகுடன் குழந்தையாகக் காட்சி தந்தாலும், தைரியம் மற்றும் வீரத்தின் உருவமாகவும் போற்றப்படுகிறாள். போர் புரிவதில் அசாத்திய ஆற்றல் பெற்றவள் பாலாம்பிகை. பாலாம்பிகையின் அவதாரமே ஒரு போரின் நிமித்தமாக ஏற்பட்டதுதான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றியவன் பண்டாசுரன். தன் தவத்தின் பலனாக வரங்கள் பல பெற்றவன். மேலும், பெண்ணின் கருவில் இருந்து தோன்றாத ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்த பண்டாசுரன், அதன் காரணமாக யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந்தான்.

அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போகவும், தேவர்கள் அனைவரும் ஸ்ரீலலிதாம்பிகையைச் சரணடைந்தனர்.

ஸ்ரீவாலாம்பிகை கொம்மடிக்கோட்டை

எங்கள் ஆன்மிகம்: கேட்டதும் கொடுப்பாள் பாலாம்பிகை!

பண்டாசுரனின் கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட அம்பிகை, தன்னுடைய ஆபரணத்திலிருந்து ஒன்பது வயதுடைய பெண்ணைத் தோற்றுவித்தாள். அவளே ஸ்ரீபாலாம்பிகை. அவள் ஸ்ரீலலிதாம்பிகையிடம் கவசமும் ஆயுதங் களும் பெற்றுக்கொண்டு, அன்னங்கள் பூட்டிய தேரில் சென்று பண்டாசுரனையும், அவனுடைய முப்பது பிள்ளைகளையும் சம்ஹாரம் செய்து, தேவர்களைக் காப்பாற்றினாள். சிறு பெண்ணான பாலாம்பிகையின் போர்த் திறன் கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்து பலவாறாகப் போற்றித் துதித்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அழகிய உருவினள் பாலா!

நான்கு திருக்கரங்களில் மேலிரு திருக்கரங்களில் சுவடியும் ஜபமாலையும் ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் வர, அபய முத்திரை காட்டி, தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பாலாம் பிகை, பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் அருள்பவள். பாலாம்பிகையின் ஒரு திருக்கரத்தில் இருக்கும் சுவடி, வித்யை மற்றும் ஞானத்தையும், மற்றொரு திருக்கரத்தில் இருக்கும் ஜபமாலை மந்திர ஜபத்தின் ஆற்றலையும் குறிப்பிடும் என்பர். அருள்மிகு பாலாம்பிகையின் இந்தத் திருவடிவை மனத்தில் இருத்தி தியானிப்பது மிகவும் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். பாலாம்பிகையை மனத்தில் தியானித்து வழி பட்டால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது ஞானநூல்களின் வழிகாட்டல்.

பாலாம்பிகை
பாலாம்பிகை

ஸ்ரீபாலாம்பிகை மந்திரம்

`ஓம் ஐம் க்லீம் சௌம்:’ - இதுவே அருள்மிகு பாலாம்பிகையைத் தியானித்து வழிபடுவதற்கான விசேஷ மந்திரம். இதில், மூன்றாவதான `சௌம்’ என்பதை `சௌஹூம்’ என்று உச்சரிக்க வேண்டும்.

இந்த மூன்று அட்சரங்களில் வாக் பீஜமாகிய `ஐம்’ என்பது பிரம்மா, சரஸ்வதி ஆகியோரின் அம்சமாக நல்ல கல்வி, வாக்கு வன்மை, ஞானம் ஆகியவற்றை அருளும்.

காமராஜ பீஜமாகிய `க்லீம்’ என்பது மகாவிஷ்ணு, மகாலட்சுமி, காளி, மன்மதன் ஆகியோரின் அம்சமாக சகலவிதமான செல்வங்கள், செல்வாக்கு, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, உடல் மற்றும் மனநலம், வசீகரத் தன்மை ஆகியவற்றை அருளவல்லது.

சிவசக்தியருடன் முருகனின் அம்சமான `சௌஹூம்’ என்பது இம்மையில் சகல சௌபாக்கியங்களையும் மறுமையில் முக்தியையும் அருளக்கூடியது.

ஆக அதியற்புதமான இந்த மந்திரத்தை உச்சரித்து, மன ஒருமுகப்பாட்டுடன் அன்னை பாலாம்பிகையை வழிபட்டால், மேற்சொன்ன தெய்வங்கள் அனைவரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

வீட்டில் பாலாம்பிகையை எப்படி வழிபடுவது?

வெள்ளி, பௌர்ணமி ஆகிய நாள்கள் பாலாம்பிகை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

அன்றைய தினம் காலையில் வீட்டுப் பூஜையறையில் ஒரு மனைப்பலகை வைத்து, அதன் மீது வெண்பட்டு வஸ்திரம் அல்லது வெண்ணிற வஸ்திரம் விரிக்கவும்.

பாலாம்பிகை படத்தையோ அல்லது ஒரு கலசத்தில் பாலாம்பிகையை ஆவாஹணம் செய்தோ மனைப்பலகைமீது வைத்து, மல்லிகை மலர்ச் சரத்தை சாத்தவும்.

பாலாம்பிகை
பாலாம்பிகை

பின்னர் தூப தீபம் காட்டி, பால் பாயசம் அல்லது கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்த பிறகு, ரோஜா மலர்களால் பாலாம்பிகைக்கு அஷ்டோத்திர அர்ச்சனை செய்து நிறைவில் தீபாராதனை செய்யவும். பின்னர் பாலாம்பிகையை தியானித்தபடி மூல மந்திரத்தை 1008 முறை ஜபிக்கவும். அன்று மாலையும் இதேபோல் செய்யவும்.

பூஜை மற்றும் ஜபங்கள் முடிந்த பிறகு பாலாம்பிகை தசகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, அம்பிகையின் அருள் வேண்டி பிரார்த்தித்துக்கொண்டு அன்றைய பூஜையை நிறைவு செய்யலாம். இதேபோல் தொடர்ந்து ஆறு வெள்ளி அல்லது ஆறு பௌர்ணமி தினங்களில் செய்து வந்தால், பாலாம்பிகையின் அருளால் வேண்டிய வரங்கள் யாவும் வேண்டியபடியே கிடைக்கும்.

வாய்ப்பு இருந்தால் ஒருமுறை திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று, காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் அருளும் அன்னை பாலாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

மங்கல பலன்கள் அருளும் பாலாம்பிகை துதிப்பாடல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அருளும் பாலாம்பிகையைப் போற்றும் அற்புத ஸ்தோத்திரம் ஸ்ரீபாலாம்பிகாஷ்டகம். இந்தத் துதிப்பாடலைக் கருத்துணர்ந்து, வெள்ளிக் கிழமை மற்றும் பெளர்ணமி தினங்களில் படித்து வழிபடுவது விசேஷம்.

இதனால், சகலவிதமான மங்கல பலன்களும் கிடைக்கும். தடைகள் நீங்கி திருமணம் முதலான சுபகாரியங்கள் விரைவில் கூடிவரும். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். தீவினைகளும் தரித்திரமும் நீங்கி வீட்டில் செல்வ சுபிட்சம் உண்டாகும்.

மகிமைமிகு பாலாம்பிகாஷ்டகம் துதியிலிருந்து ஒரு பாடல் இங்கே உங்களுக்காக...

கஜ்ஜாஸனாதி மணிமஞ்ஜு கிரீடகோடி

ப்ரத்யுப்த ரத்னருசிரஞ்சிதபாதபத்மே

மஞ்ஜீரமஞ்ஜுளவினிர்ஜித ஹம்ஸநாதே

பாலாம்பிகே மயிநிதேஹி க்ருபாகடாக்ஷம்

கருத்து: பிரம்மா முதலான தேவர்களின் கிரீடத்திலுள்ள ரத்னங்களின் ஒளியால் விளங்குகிற பாதக்கமலங்களை உடையவளும், கால் கொலுசுகளின் சத்தத்தால் ஜயிக்கப்பெற்ற ஹம்ஸத்வனியை உடையவளுமான பாலாம்பிகையே வணங்குகிறேன். அன்னையே நீ என்னிடத்தில் கருணையோடுகூடிய கடைக்கண்ணை வைக்க வேண்டும்.