Published:Updated:

கோபத்தை வென்ற கோமகன்!

ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்

உ.வே.அனந்த பத்மநாப சுவாமி, ஓவியங்கள்: ம.செ

கோபத்தை வென்ற கோமகன்!

உ.வே.அனந்த பத்மநாப சுவாமி, ஓவியங்கள்: ம.செ

Published:Updated:
ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்
ஶ்ரீவைகுண்டத்தில் பெருமாள் பர ரூபம் என்னும் நிலையில் அருள்பாலிக்கிறார்.

அங்கு பெருமாளுக்குத் தன்னுடைய அனைத்து குணங்களையும் வெளியிடும் சந்தர்ப்பம் மிகவும் குறைவுதான்!

கோபத்தை வென்ற கோமகன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறப்பு, கல்வி, செல்வம், அழகு பாராமல் கலந்து பழகி, தாழ்ந்தவனைத் தாழ்ந்தவனாக நினைக்காத குணமான சௌசீல்யம்; அடியவர்களுக்காக இறங்கி வந்து எளிமையாகப் பழகும் குணமான சௌலப்பயம்; அடியார்களின் குற்றத்தை மறக்கும் குணமான வாத்ஸல்யம் போன்ற குணங்களை வெளியிடத் தக்க சூழ்நிலை ஶ்ரீவைகுண்டத்தில் இல்லை. இதே குணங்கள் அவன் அவதாரம் எடுத்து இந்தப் பூவுலகிற்கு வரும் காலங்களில் நன்கு வெளியாகின்றன. இங்கு ராமனாக, கிருஷ்ணனாக, `தான் இனியவன், பழகுவதற்கு மிகவும் எளியவன், கருணைமிக்கவன்' என்று நன்கு உணர்த்துகிறான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜ ஸ்தவத்தில், `குணங்கள் வரதனிடத்தில் இருப்பதால் வரதனுக்குப் பெருமை இல்லை. அவை வரதனிடத்தில் இருப்பதனால்தான் அந்தக் குணங்களுக்கு நற்குண ஸித்தியும் பெருமையும் ஏற்படுகின்றன' என்று போற்றுகிறார்.

ராமாயணத்தின் தொடக்கத்தில், வால்மீகி நாரதரிடம் 16 குணங்களைப் பட்டியலிட்டு, `இந்த குணங்கள் அனைத்தையும் உடையவன் யார்' என்று வினவுகிறார். நாரதரும் `எல்லா காலத்திலும், எல்லா லோகத்திலும்... பட்டியலிட்ட அனைத்து குணங்களையும் கொண்டவன் ஶ்ரீராமபிரான் ஒருவனே' என விடையளித்து, ராமனின் திவ்ய சரித்திரத்தை வால்மீகிக்கு உபதேசம் செய்கிறார். நாரதர் வால்மீகிக்குச் செய்த இந்த உபதேசமே ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் முதல் சர்க்கத்தில் `ராமாயணச் சுருக்கம்' என வழங்கப்படுகிறது.

ஶ்ரீராமன்
ஶ்ரீராமன்

இவ்வாறு 16 குணங்களைப் பட்டியலிடும் இடத்தில்... `யார் ஜிதக்ரோதன்?' என்றும் `யார் ஜாதரோஷன்?' என்றும் வால்மீகி கேட்கிறார்.

`ஜிதக்ரோதன்' என்றால் `கோபத்தை வென்றவன்' என்று அர்த்தம்; `ஜாதரோஷன்' என்றால் `யாருக்குக் கோபம் வந்தால் தேவர்களும் நடுங்குவார்களோ அவன்' என்று அர்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமன் கோபத்தைத் தன் வசமும் படுத்து வார், தானும் கோபத்தின் வசமாவார் என்பதைப் பல இடங்களில் ராமாயணத்தில் பார்க்கலாம். ராமன் கோபம் அடைபவன் (ஜாதரோஷன்), கோபத்தை வென்றவன் (ஜிதக்ரோதன்) எனக் கூறுவது முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம்.

ராவணனால் அடிபட்ட அனுமனின் நிலை கண்டு, ராமன் தன் கோபத்தை வரவழைத்துக் கொண்டான். அதே ராமன், `இன்று போய் நாளை வா' என்று கோபமின்றி மற்றொரு வாய்ப்பை ராவணனுக்குத் தந்தான்.

ராமன் ராவணனை முதன்முறையே கொன்றிருந்தால், நாம் ராமனின் வீரத்தை மட்டும்தான் போற்றியிருப்போம். ஆனால், ராமனை `கருணா காகுஸ்தன்' என்று புகழும்படி செய்தது, அவன் தனது கோபத்தை அடக்கி, தவறு செய்தவனுக்கும் பொது மன்னிப்பு கேட்கும் வாய்ப்பைக் கொடுத்ததுதானே.

ராவணன், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, ஆயுதம் விடுத்துச் சரணடைந்தால் குற்றத்துக்குத் தண்டனை கிடையாது என்பதை ராமன் இங்கு உணர்த்துகிறான். இப்படியான பொது மன்னிப்பு கேட்பதே நாம் செய்ய வேண்டிய சரணாகதியாகும். எங்கு கோபத்தை அடக்க வேண்டுமோ அங்கு அடக்கி. செயலில் வெற்றி புரிபவனே ஜிதக்ரோதன் ஆவான்.

ஶ்ரீராமன்
ஶ்ரீராமன்

மற்றொரு சுவாரஸ்யமும் உண்டு. தன் பக்தனான அனுமனை அடித்த ராவணன் விஷயத்தில் ராமனுக்குக் கோபம் உண்டானது. சீதையை அபகரித்து, தனக்குத் தீங்கிழைத்த ராவணன் விஷயத்தில் கோபம் அடங்கியது. இதனால் ராமன் `பக்த பரதந்திரன்' என்பதை நன்கு அறியலாம். தான் துன்பப்பட்டபோது பொறுமையாக இருந்த ராமன், தன் பக்தன் துன்பம் அடைந்தபோது கோபம் கொண்டான்.

சீதையும் கோபத்தை அடக்கி வெற்றி பெறுவதைக் காணலாம். ராவணன் சொல்படி நடக்காத சீதையை, ராட்சசிகள் துன்புறுத் தினர். சீதை அந்த ராட்சசிகளிடம் கோபம் கொள்ளாமல், அவர்களின் சரணாகதியை ஏற்று, அபய ப்ரதானம் செய்து உதவினாள். ராவணனின் மேல் இருந்த கோபத்தை அடக்கி, பொறுமையாக ராமனின் வருகைக்காகக் காத்திருந்தாள், சிறையிருந்த சீதை.

நம் எல்லோரையும் கோபம் என்னும் குணம் படுத்தும் பாட்டினை நன்கு அறிவோம். எங்கு கோபப்பட வேண்டுமோ, யாரிடத்தில் கோபப்பட வேண்டுமோ அங்கு கோபப்படுவது நல்லதே. கோபம் வந்தால்தான் காரியம் நடக்கும் என்றால் அங்கு கோபப்படாமல் பொறுமை காப்பதும் துர்குணம்தான்.

உதாரணம் - சமுத்திர ராஜன், ராமன் செய்த சரணாகதியை ஏற்கவில்லை. பொறுமையாக இருந்த ராமன், வேறு வழியின்றி சமுத்திர ராஜன் மேல் கோபம்கொண்டது சரியே.

ராமன் காட்டுக்குக் கிளம்பும்போது சீதை தானும் காட்டுக்கு வருவதாக ராமனிடம் கூறினாள். ராமன் பல காரணங்கள் கூறி சீதையை நாட்டில் இருக்கும்படி கூறினான். சீதை கேட்டபாடில்லை. மேலும், “ஆண் வேஷத்தில் இருக்கும் பெண்ணுக்கு, என் தந்தை என்னைக் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார்” என்று கடும் சொற்களினால் ராமனிடம் பதில் அளித்தாள்.

எதையும் கேட்கும் மன நிலையில் சீதை இல்லை என்பதை அறிந்த ராமன், பதில் எதுவும் பேசாமல், வாதம் செய்யாமல், சீதையைத் தன்னுடன் காட்டுக்கு அழைத்துச் சென்றான். அவள்மீது தன் கோபத்தைக் காட்டவில்லை. அவள் சொன்ன வார்த்தைகளுக்கு எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை.

13 ஆண்டுகள் சென்ற பின், ஜனஸ்தானத்தில் அகம்பணன் மற்றும் ஒரு ராட்சசனைத் தவிர ஏனைய 13,998 ராட்சசர்களை ராமன் தனி ஒருவனாகக் கொன்றான். லட்சுமணன் துணையையும் வேண்டாம் என்று மறுத்து, தான் ஒருவனே அனைத்து ராட்சசர்களையும்அழித்தான்.

சீதை ஓடி வந்து வெற்றி பற்ற ராமனை, தன் வீர மணாளனைத் தழுவிக்கொண்டாள். பிராட்டி அணைத்ததால், பெருமாளுக்கு ஏற்பட்ட ரணங்கள் ஆறின. தான் ஒரு வீர புருஷன் என்பதை ராமன் சீதைக்குத் தன் செயல் மூலம் புரியவைத்தான்.

இவ்வாறு ஶ்ரீராமன் கோபத்தை அடக்க வேண்டிய இடத்தில் அடக்கி, செயலினால் தன் ஆற்றலை வெளிப்படுத்தியதையும் கோபத்தையே குணமாகக் கொண்டதையும், ராமாயணம் பல இடங்களில் போற்றுகிறது.

ஆம், `ஜிதக்ரோதன்' மற்றும் `ஜாதரோஷன்' எனும் சிறப்போடு திகழ்பவன் ஶ்ரீராமன் ஒருவனே!

ஶ்ரீராமனும் புனர்பூசமும்!

ருபத்தேழு நட்சத்திரங்களில் பரணி, பூரம், பூராடம், புனர்பூசம், சுவாதி, உத்திரட்டாதி இந்த ஆறு நட்சத்திரங்களுக்கு என்றைக்கும் மரண யோகம் கிடையாது. எனவே, மரண யோகம் இல்லாத இந்த நட்சத்திரங்களில் புனர்பூசத்தில் அவதரித்தார் ஶ்ரீராமன்.

மற்றொரு காரணம்: பகவானின் வாமன அவதாரத்தில் அவரின் அன்னை பெயர் அதிதீ. புனர்பூச நட்சத்திரத்துக்கு அதிதீதான் தெய்வம். ஆக, தன் தாயாரைத் தெய்வமாகக் கொண்ட புனர்பூசத்தில் ஶ்ரீராமன் அவதரித்தான்.

கோபத்தை வென்ற கோமகன்!

மேலும், விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 1000 நாமாவளிகளில் புனர்வசு என்பதுவும் ஒன்று. எனவே, தன் திருநாமத்தைக் கொண்ட புனர்வசு அதாவது புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீராமன் பிறந்தார் என்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.

தசாவதாரத்தில் ராமாவதாரம் ஏழாவது. நட்சத்திரங்களில் புனர்பூசம் ஏழாவது. இதுவும் கூடுதல் சிறப்பென்று சொல்லலாம்.

(உபன்யாசத்தில் கேட்டது...)

- தட்சிணாமூர்த்தி, திருவாரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism