Published:Updated:

ஶ்ரீதியாகராஜர் கேட்ட கீர்த்தனை...

ஶ்ரீதியாகராஜர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீதியாகராஜர்

இசையில் மூன்று வகைமைகளைச் சான்றோர் வகுத்திருக்கிறார்கள்.

ஶ்ரீதியாகராஜர் கேட்ட கீர்த்தனை...

இசையில் மூன்று வகைமைகளைச் சான்றோர் வகுத்திருக்கிறார்கள்.

Published:Updated:
ஶ்ரீதியாகராஜர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீதியாகராஜர்
மகான்கள் உண்மையான திறமையைக் காணும் போது அதை மனம் மகிழ ஏற்றுப் போற்றுவர்.

சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் ஶ்ரீதியாகராஜர். அவர் பிற மேதைகளை மதிக்கும் மாண்பு கொண்டவர். அப்படி அவரால் ஆசீர்வாதம் பெற்றவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் கனம் கிருஷ்ணய்யர்.

இசையில் மூன்று வகைமைகளைச் சான்றோர் வகுத்திருக்கிறார்கள். அவை கனம், நயம், தேசிகம் என்பன. இதில் கனம் கடும்பயிற்சியைக் கோருவது. மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரைக்கும் ஊடுருவி நிற்கும் தொனியோடு பாடுவது அந்த மார்க்கம். தமிழ் இசைமரபில் கூறப்படும் உள்ளாளப் பாட்டு இதுவே என்பர். பாடகர் பாடும்போது சிங்கத்தின் கர்ஜனையும் யானையின் பிளிறலும் நினைவுக்கு வரும் அளவிற்குப் பாடல் கம்பீரமாய் ஒலிக்கும். ஆனால் இதைப் பாடுகிற பாடகரின் உடலில் அசைவுகள் ஏதும் இராது. இதில் தேர்ச்சி பெற்றவர் கனம் கிருஷ்ணய்யர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருமுறை கிருஷ்ணய்யர், தியாகராஜரைச் சந்திக்கும் பொருட்டு அவர் இல்லத்துக்குச் சென்று காத்திருந்தார். ராம பக்தியிலும் பஜனையிலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீதியாகராஜர் அப்போது வீட்டில் இல்லை.

ஶ்ரீதியாகராஜர்
ஶ்ரீதியாகராஜர்

வழக்கத்தைவிட அதிகமான நேரம் பஜனையில் ஈடுபட்டுக் காலம் கடந்து வீடு வந்தார். அவரோடு அவர் சீடர்களும் வந்தனர். அப்போது தியாகராஜர் அடானா ராகத்தில் இயற்றிய `ஏபாபமு’ என்னும் கீர்த்தனையைக் காமரஸ்வல்லி நாணுவையர் மற்றும் தில்லைஸ்தானம் ராமையங்கார் ஆகியோர் பாடிக்காட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் ஶ்ரீதியாகராஜர், கிருஷ்ணய்யரை ‘நீங்களே இயற்றிய ஒரு கீர்த்தனத்தைப் பாடவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணய்யர் `சும்மா சும்மா வருகுமா சுகம்’ என்ற கீர்த்தனையின் பல்லவியை இயற்றிப் பாடினார். கிருஷ்ணய்யரின் கனப் பிரயோகத்தின் கம்பீரம் ஶ்ரீதியாகராஜரை மகிழ்வில் ஆழ்த்தியது. அவ்விசையில் அவர் மனம் மகிழ்ந்து தம்மிடமிருந்த சால்வை ஒன்றை அவருக்குப் போர்த்தி ஆசீர்வதித்தார்.

மனம் உருகிய கிருஷ்ணய்யர், ‘ஸ்தா ஈஸ்வர சேவை செய்து கொண்டு வரும் உங்களுடைய பெருமையே பெருமை’ என்று தியாகய்யரின் பாதங்களைப் பணிந்துகொண்டார். எந்தரோ மகானுபாவுலு என்று பாடியவர் அல்லவா அந்த மகான்.

அற்புதமான இந்தச் சந்திப்பைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா தன் சங்கீத மும்மணிகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism