Published:Updated:

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

ரமா சுப்ரமணியன்

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

ரமா சுப்ரமணியன்

Published:Updated:
காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

ந்தப் புண்ணிய பூமியில் அவதரித்த மகான்களின் சாந்நித்தியம் அளவிட இயலாதது. அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இப்பிறவியில் மட்டுமல்ல நம் பூர்வ ஜன்மாந்திரக் கணக்குகளையும் வினைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள் மகான்கள். இத்தகு மகிமைகள் மிக்க மகான்களில் ஒருவரது அவதாரம் 13-ம் நூற்றாண்டில் ஆந்திர பூமியில் நிகழ்ந்தது.

அந்தப் புண்ணிய அவதாரம், உலகின் அறம் செழிக்க அருளியது; இப்பூவுலகின் எதிர்காலத்தையும் எடுத்துச் சொன்னது. செவிமடுப்போரின் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்யும் அந்த தீர்க்கதரிசனத்தைப் பற்றி அறியுமுன், அந்த அவதார புருஷர் நிகழ்த்திய - கற்பனைக்கும் எட்டாத அற்புதங்களில் ஒன்றை இங்கே தரிசிப்போம்.

அதுவோர் அழகிய கிராமம். ரவ்வாலாகொண்டா எனும் அந்தப் பகுதியின் நதிக்கரையில், தான் ஓட்டிவந்திருந்த பசுக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குழுமியிருக்க உத்தரவிட்டான் அந்த பாலகன். என்ன ஆச்சர்யம், அவன் சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்டன பசுக்கள்.

தொடர்ந்து தன் கைத்தடியைக் கொண்டு மண்ணில், அந்தப் பசுக்கூட்டத்தைச் சுற்றிலும் வட்டம் வரைந்தான் அவன். அடுத்து அந்தத் தடியை அவன் விண்ணை நோக்கி எறிய, அது மண் வட்டத்துக்கு நேர் மேலே விண்ணில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

பின்னர் பனை மரம் ஒன்றை நோக்கிச் சென்றான் பாலகன். அது அவனுக்காகவே காத்திருந்தது போல் ஆடி அசைந்து ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. மட்டுமன்றி அவன் அருகில் வந்ததும், தலை தாழ்த்தி வணங்குவதுபோல் அவன் உத்தரவுக்காக வளைந்து தாழ்ந்தது. பாலகன் அதன் ஓலைகளைச் சேகரித்ததும் மீண்டும் நிமிர்ந்து பழைய நிலையை அடைந்தது பனை மரம். தொடர்ந்து அருகிலிருந்த புதரில் குல்சாரி என்ற செடியின் நீளமான தண்டு போன்ற முன்பகுதியைப் பறித்துக்கொண்டான்.

இந்த இரண்டு காரியங்களும் நிறைவேறியதும் சற்றுத் தொலைவில் இருந்த எவ்வாலாகொண்டா மலைப்பகுதியில் அமைந்திருந்த குகையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஹா... அந்தக் குகையே இந்த உலகுக்குக் கிடைத்த `காலக் ஞானம்’ எனும் பொக்கிஷத்தின் பிறப்பிடமாக அல்லவா இருக்கப் போகிறது! நாள்கள் நகர்ந்தன... நிகழ்வுகள் தொடர்ந்தன...

ஒருநாள் ரவ்வாலாகொண்டா ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்தக் குகை இருக்கும் இடத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர். அந்த இடத்தில் பசுக்கள் கூட்டமாய் ஆதரவின்றி நிற்பதைக் கண்டனர்.

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

``இந்தப் பசுக்களை மேய்ப்பவன் எங்கே சென்றான். இவை ஏன் இந்த பயங்கரமான குகைக்கு அருகில் நிற்கின்றன’’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், அவை அச்சம்மா என்ற பெண்ணுக்குச் சொந்தமான பசுக்கள் என்பதையும் அறிந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவன் ``அச்சம்மா கிராமத்து வாசிகளான நம்மை நம்பாமல், புதிதாக எங்கிருந்தோ வந்த சிறு பாலகனை நம்பித் தன் பசுக்களை ஒப்படைத்துவிட்டாள். அதனால்தான் இவற்றுக்கு இந்த நிலைமை. நாம் இந்தப் பசுக்களை ஓட்டிச் சென்று, அச்சம்மாவிடம் ஒப்படைப்போம். அவள் செய்தது தவறு என்று அவளுக்கு உணர்த்து வோம்’’ என்றான். அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

அதன்படி அவர்கள் அனைவரும் பசுக்களை ஓட்டிச் செல்ல முற்பட்டனர். ஆனால் அந்தப் பசுக்களில் ஒன்றுகூட... பாலகன் கைத் தடியால் வரைந்து வைத்திருந்த வட்டத்தைத் தாண்டி நகரவில்லை. அதைக் கண்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள் பசுக்களை அடித்து விரட்டி, ஓட்டிச் செல்ல முனைந்தனர். அதன் பொருட்டு அவர்கள் பாலகன் வரைந்த வைத்திருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர்.

மறுகணம் அவர்களின் கண்கள் இருண்டன; அனைவருக்கும் பார்வை பறிபோனது. அரண்டுபோனார்கள் இளைஞர்கள். செய்வதறியாது திகைத்தவர்கள், தங்களையும் அறியாமல் சிதறி ஓடினார்கள். என்ன ஆச்சர்யம்... ஓடிய வேகத்தில் அவர்கள் வட்டத்தைக் கடந்ததும் மீண்டும் பார்வை வந்தது. எல்லோருக்கும் வியப்பு - அச்சம் கலந்த உணர்வு! `இது ஏதோ பிசாசின் வேலையாக இருக்கும்’ என்று பயந்து போனவர்கள், ஊருக்குள் ஓடோடிச் சென்று, அச்சம்மாவின் இல்லத்தை அடைந்து அவளிடம் நடந்ததை விவரித்தனர். அவள் அவர்களை நம்பவில்லை. அந்தப் பாலகனை அவனின் தெய்விகத் தன்மையை நன்கு அறிந்தவளாயிற்றே அவள். எனவே, தானே நேரில் சென்று நிலைமையைப் பார்த்து வருவது எனத் தீர்மானித்தாள்.

அதன்படி, மறு நாள் பாலகனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.

பாலகன் குகைப் பகுதியை அடைந்ததும் வழக்கம்போல் பசுக்களைச் சுற்றிலும் தரையில் வட்டம் வரைந்துவிட்டு, கைத்தடியை விண்ணில் எறிந்தான். அது அந்தரத்தில் வட்டமடிக்கத் தொடங்க, தலை தாழ்த்திய பனை மரத்தின் ஓலைகளைப் பறித்துக்கொண்டு குகைக்குள் நுழைந்துவிட்டான்.

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்

அந்தத் தருணத்தில், வனத்திலிருந்து வந்த சிறுத்தை ஒன்று பசுக்களைக் கண்டு அவற்றை வேட்டையாட வேகமாகப் பாய்ந்து வந்தது. ஆனால், பாலகனின் கைத்தடி சிறுத்தையை அடித்துத் துரத்தியது. மறைவில் நின்று இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அச்சம்மாள் திகைத்தாள். `என்ன விந்தை இது... பனை வளைந்து கொடுக்கிறது... கைத்தடி பசுக்களைக் காவல் காக்கிறதே...’ என்று எண்ணி வியந்த அச்சம்மாள், குகைக்குள் சென்ற பாலகன் உள்ளே என்ன செய்கிறான் என்பதை அறிய விரும்பினாள்.

ஆகவே, மெள்ள குகையை அணுகினாள். அச்சத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தாள். வாயிலின் நுழைவுப் பகுதியில் இருளைக் காட்டிய குகை, உட்புறத்தில் பெரும் பிரகாசத் தைக் காட்டியது. பேரொளியின் வெளிச்சம் அவளின் கண்களைக் கூசச் செய்தது. ஒளிப் பிழம்பின் நடுவில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் பாலகன். இல்லையில்லை... எம்பெருமான் நாராயணன். ஆம்... அவளின் கண்களுக்கு அந்தப் பாலகன் ஸ்ரீமந் நாராயணரா கவே காட்சி தந்தான். அச்சம்மாளுக்குத் தலை சுற்றியது. சந்தடியின்று அங்கிருந்து நகர்ந்தவள் விரைந்து வீட்டை அடைந்தாள்.

பாலகனான சுவாமியின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அவரின் மகிமை குறித்து அறியாமல், பசுக்களை மேய்க்கும் வேலையைக் கொடுத்ததற்காக, தன்னை மன்னிக்க வேண்டினாள். அத்துடன் தனக்கு உபதேசம் அருளி, பாவங்களிலிருந்து முக்தி அளிக்கும்படி இறைஞ்சினாள்.

அவளின் பக்தி வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்தார், உருவில் பாலகனான அந்த சுவாமி. ``நல்லது. நாளை நாம் யாகந்தி எனும் கிராமத்துகுச் செல்லப் போகிறோம். அங்கே ஞான உபதேசம் கிடைக்கும்’’ என்றார்.

அதன்படியே மறுநாள் பொழுதுபுலர்ந்ததும் இருவரும் யாகந்தி கிராமத்தை அடைந்தனர். சுவாமியை வணங்கிய அச்சம்மாள், ``உலகின் தந்தையே! ரவ்வாலாகொண்டா குகைக்குள் ஓலைகளில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தீர்களே... அது என்ன? அடியேன் அறிந்து கொள்ளலாமா’’ என்று பணிவுடன் வேண்டினாள்.

புன்னகைத்த சுவாமி, ``தாயே! நான் வரப் போகும் காலங்களில் நிகழவிருக்கும் அனைத் தையும், `பவிஷ்ய கிரந்தம்’ என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்நூலில் இடம்பெற்ற அனைத்தும் தெய்விக ரகசியங்கள். பிரம்ம ஞானிகளால் மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள இயலும். ஆனாலும் நீங்கள் அந்தத் தகுதியை அடைந்துவிட்டீர்கள். உங்களுக்கு எடுத்துரைப்பேன்’’ என்று கூறி, அச்சம்மாளுக்கு சில முக்கியக் குறிப்புகளை எடுத்துக் கூறினார். அதுவே `காலக்ஞானம்' எனும் அற்புதப் பொக்கிஷம். அதை அருளிய அந்தப் பாலகனே, ஞான உலகம் போற்றும் காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்!

கலியுகம் 4808 வருடம்வரை மட்டுமே நீடித்திருக்கும். அக்காலம் முடிவடைந்ததும், அதர்மம் தலைதூக்கும். தர்ம தேவதை தனக்கென்று ஒரு சில இடங்களை மட்டுமே தேர்வு செய்து அமர்ந்துகொள்வாள். அந்த இடங்கள் மட்டுமே புனிதத்துவம் நிறைந்த ஸ்தலங்களாக நிலைப்பெறும். மற்ற இடங்களில் பாவங்கள் பெருகியிருக்கும்.

மனிதர்கள் அளவுக்கதிகமான உணவை உண்டு எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் விழித்திருக்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்.

விலங்குகளும் ஒரு நிலையின்றிக் காணப் படும். சமூகத்தில் அமைதி இருக்காது.அமைதியான சுபாவம் கொண்ட மனிதர்களும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள்.

மனிதர்கள் தாம் செய்யும் தவறான செயல் களுக்கான தண்டனையை உடனுக்குடன் பெறுவார்கள்.

தாய் தந்தையை தெய்வமாக மதித்து வணங்க வேண்டிய புத்திரர்கள், மாறாக விரோதம் வளர்ப்பார்கள்.

- இப்படி நீள்கிறது, காலக்ஞானம் சொல்லும் தீர்க்கதரிசன விளக்கங்கள். அவற்றில் நம்மை வியக்கவைப்பது, தற்போதைய பெருந்தொற்று பாதிப்பு குறித்த கூற்று என்கிறார்கள், சுவாமியின் பக்தர்கள். `ஈசான்ய திக்லோ விஷகாலி புட்டேனு...’ எனத் தொடங்கும் 114-வது செய்யுள், `தேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்த ஒரு நாட்டிலிருந்து புறப்படும் விஷக்கிருமிகள் உலக நாடுகளைப் பாதிக்கும்’ என்று குறிப்பிடுகிறது.

5000 வருடங்கள்வரை இப்பூவுலகில் என்னவெல்லாம் நிகழும் என்பதைத் துல்லிய மாகக் கணக்கிட்டுக் கூறுகிறது காலக்ஞானம் என்கிறார்கள், சுவாமியின் பக்தர்கள். இந்நூலில் 14,000 வாக்குகளை அருளியுள்ளாராம் ஸ்ரீவீரபிரம்மேந்திர சுவாமிகள்.

நம் தீய வினைகளை யும் கருணையோடு மன்னித்து, நமக்கு நல் வழியைக் காட்டி, இறையருளைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் களாக நம்மை மாற்றும் அருளாளர்கள் மகான்கள். அவ்வகையில் அருள் சாந்நித்தியம் நிறைந்த மகான் ஸ்ரீவீரபிரம்மேந்திர சுவாமி களின் பாதம் பணிவோம்; அவரின் திருவருளைப் பெறுவோம்.

காலக்ஞானி ஸ்ரீவீரபிரம்மேந்திரர்