Published:Updated:

`அள்ளிக்கொடுப்பாள் என்னைப்பெற்ற தாயார்!’

லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி

‘திரு’வாகிய லட்சுமி தவம் செய்த இடம் ஆதலால் இந்தத் தலம், ‘திருநின்றவூர்’ ஆனது.

`அள்ளிக்கொடுப்பாள் என்னைப்பெற்ற தாயார்!’

‘திரு’வாகிய லட்சுமி தவம் செய்த இடம் ஆதலால் இந்தத் தலம், ‘திருநின்றவூர்’ ஆனது.

Published:Updated:
லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி

திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட அற்புத க்ஷேத்திரம் திருநின்றவூர்; திவ்விய தேசங்களில் 58-வது தலம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

‘திரு’வாகிய லட்சுமி தவம் செய்த இடம் ஆதலால் இந்தத் தலம், ‘திருநின்றவூர்’ ஆனது. வழக்குச் சொல்லில் திண்ணனூர் என்கிறார்கள்.

`அள்ளிக்கொடுப்பாள்
என்னைப்பெற்ற தாயார்!’

சீனிவாச விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக கிழக்குப் பார்த்து சேவை சாதிக்கிறார் ஸ்ரீபக்தவத்சல பெருமாள். ‘குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை’ என்று திருமங்கையாழ்வார் போற்றும் திருமால்! இவரை நாள் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு! மூலவரின் திரு முன் உற்ஸவர் ஸ்ரீபக்தராவி பெருமாள். பக்தர்களை உயிராகக் கருதிப் போற்றுபவர் என்பதால், இந்தப் பெயராம். தாயாரின் திருநாமம் ஸூதாவல்லி. சமுத்திரராஜன் ‘என்னைப் பெற்ற தாயே’ என்று அழைத்ததால், ‘என்னைப் பெற்ற தாயார்’ என்ற திருநாமமே இங்கு பிரசித்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருநின்றவூரின் சிறப்பையும், என்னை பெற்ற தாயாரின் மகிமையையும் அறிந்த குபேரன் இங்கே வந்து, தவம் செய்து தாயாரின் திருவருளால், பத்ம நிதியும் தனது தேசமும் திரும்பக் கிடைக்கப் பெற்றானாம். இன்றும் தன்னை வணங்கும் அடியவர்களுக்கு குபேர சம்பத்துகளை அருள்கிறாள் என்னைப் பெற்ற தாயார். தாயார் சந்நிதியில் குபேர யந்திரம் வாங்கி வந்து, அதில் 9 கட்டங்களில் இருக்கும் எண்களின் மீது... கட்டத்துக்கு ஒன்றாக 9 நாணயங்களை வைத்து, மனமுருகி தாயாரை தியானித்து வழிபடவேண்டும். பௌர்ணமி அல்லது வெள்ளிக் கிழமையில் துவங்கி தொடர்ந்து 9 நாள்கள் (ஒவ்வொரு நாளும் புதிதாக 9 நாணயங்கள் வைத்து) பூஜித்து, கடைசி நாளன்று அந்த (மொத்தம் 81) நாணயங்களை தாயார் சந்நிதியில் இருக்கும் உண்டியலில் சேர்த்து, தாயாரை தரிசித்துச் சென்றால் நினைத்தது நிறைவேறுமாம்.

`அள்ளிக்கொடுப்பாள்
என்னைப்பெற்ற தாயார்!’

தவிர, 9 நாள்கள் தொடர்ந்து இங்கே வந்து, தாயார் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து, 9 முறை வலம் வந்து வழிபட வேண்டும். கடைசி நாளன்று அர்ச்சனை செய்து, 9 சுமங்கலிகளுக்கு வெற்றிலை- பாக்கு, மஞ்சள்- குங்குமம், பூ மற்றும் பழம் வழங்கி, தாயாரை தரிசித்துச் சென்றால், பிள்ளைப்பேறு கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; சகல செல்வங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism