திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

திருப்பாவை எனும் ஆத்ம யாகம்!

திருப்பாவை எனும் ஆத்ம யாகம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பாவை எனும் ஆத்ம யாகம்

படம்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

பூமாதேவியின் விருப்பப்படி வராக அவதாரம் எடுத்து பூவுலகைக் காத்து தீயவர்களை அழித்து அருள் செய்தார் திருமால்.

அப்போது பூதேவியானவள், திருமாலிடம் `‘உங்கள் பக்தர்கள் உய்யவும் உங்களை அடையவும் ஒரு வழி உரைக்கவேண்டும் நாராயணா!” என்று கோரிக்கை வைத்தாள். அதற்கு `இறை திருநாமத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும். இறைவனின் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். இறையின் விருப்பப்படியே வாழ்ந்து இறுதியில் அவரது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.இதுவே வழி' எனும் பதில் கிடைத்தது.

உடனே மகிழ்ந்துபோன பூமிபிராட்டி தானே அந்த கடமைகளைச் செய்யவேண்டும் என்று ஆவல் கொண்டாள். அதை எப்போதும் மறக்கக் கூடாது என்று தன் சேலை முந்தானையில் 3 முடிச்சுக்களா கவும் முடிந்து வைத்துக் கொண்டாள்.

திருப்பாவை எனும் ஆத்ம யாகம்!

ஆனால் பாருங்கள் பகவானை அடைய உதவும் இந்தக் கடமைகளை ஆற்றும் நேரம் வாய்க்கவே இல்லை பூமி தாயாருக்கு. கலியுகம் தோன்றியது. பூமியில் அக்கிரமங்கள் நடந்தன. “கீதையைச் சொன்னது, தர்மத்தின் படி நாமே வாழ்ந்தது எல்லாம் வீண் தானோ!” என்று திருமால் வருந்தினார்.

கலியுகத்தில் மீண்டும் பிறந்து தர்மங்களையும், கீதையையும் உபதேசிக்க திருமகளை அனுப்ப முடிவு செய்தார். திருமகளோ திருமாலின்றி பூமிக்கு செல்ல மறுக்கிறாள். இந்த நேரத்துக்காகவே காத்திருந்த பூதேவி, தானே பூமியில் அவதரிக்கவும் மக்களுக்கு நன்மைகளை எடுத்துச் சொல்லவும் பிறப்பெடுத்தாள்.

ஆடி மாத பூர நட்சத்திரத்தில், வில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள். திருமாலையே அடைய வேண்டும் எனும் நோக்கில் வாழ்ந்து, தன் 3 கடமைகளையும் செவ்வனே செய்து, அதன்வழியே மற்றவருக்கும் உபதேசித்து வாழ்ந்தாள். அரங்கனோடு கலக்கும் தருணத்தில், தான் எப்போதும் முடிந்து வைத்திருந்த முடிச்சையும் அவிழ்த்தாள். திருப்பாவை வெறும் பாடல் அல்ல, அது ஆண்டாளின் ஆத்ம யாகம் என்றே சொல்லலாம்!

- சி.ராஜேஸ்வரி, சென்னை-44