முதியவர் ஒருவர் திருமலையில் ஏறமுடியாமல் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நா வறண்டது.

“திருமலையானின் தரிசனம் கண்டபின்பு மரணம் எய்தினாலும் பரவாயில்லை என்று அவர் எண்ணினார். ஆனால், தாகத்திலேயே உயிர்போய்விடும்போல் இருக்கிறதே, வேங்கடேசா... இது என்ன கொடுமை?” என்று வாய்விட்டுப் புலம்பினார். அப்போது அழகும் இளமையும் கூடிய ஓர் இளைஞன் எதிர்பட்டான்.

“சுவாமிகளே, இந்த வயதான காலத்தில் இந்த வனத்தில் எங்கு அலைகிறீர்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த முதியவர், “இந்த வயதில் எனக்கு என்ன தேவைப்படப்போகிறது... அந்த ஏழுமலையான் தரிசனத்தைத் தவிர” என்று கூறினார்.

அந்த இளைஞனோ விடாமல் “அப்படி ஏழுமலையானை தரிசித்து என்ன வேண்டப்போகிறீர்கள்... துள்ளும் இளமையையா, இல்லை வீடுபேறு என்னும் மோட்ச லோகமா..?”

இதைக்கேட்ட முதியவர் ஒரு கணம் கோபம் கொண்டாலும், அடுத்த கணம் புன்னகையோடு, “எனக்கு இனிப் புற இன்பங்களில் விருப்பமில்லை. உண்மையான பேரின்பமாகிய அக இன்பத்தையே அடைய விரும்புகிறேன். அதை எனக்குத் தருவது வேங்கடவனின் திருவடிதானே...”

இதைக் கேட்டதும் அந்த இளைஞனின் முகம் மலர்ந்தது.

“ஐயா, இங்கே அருகே ஒரு தீர்த்தம் உள்ளது. அந்தத் தீர்த்ததில் ஒருமுறை நீராடுங்கள். மனிதர்களின் பாவங்கள் எல்லாம் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம் அது. வாருங்கள் அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி வழிகாட்டித் தீர்த்தக்கரைக்கு அழைத்துச் சென்றார்.

முதியவரும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே தீர்த்தத்தில் இறங்கி மூழ்கி எழுந்தார். என்ன அதிசயம், முதியவரின் தள்ளாடும் முதுமை மறைந்து இளமை உண்டாகிவிட்டது. தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. தனக்கு இந்த அற்புதத் தீர்த்தத்தை அடையாளம் காட்டிய அந்த இளைஞன் எங்கே என்று வேகமாக வெளியேறித் தேடினார். ஆனால், அந்த இளைஞன் மாயமாய் மறைந்திருந்தான். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது, தன்னை வழிநடத்திய இளைஞன் அந்த வேங்கடவனே என்று. அப்போது அசரீரியாக ஒரு வாக்கு கேட்டது.

`இந்தத் தீர்த்தத்தின் பெயர் குமார தாரிகை. ஒருவர் இதில் மூன்று மாதங்கள் தொடர்ந்து நீராடினால் சகல பாவங்களும் தீரும். உடலும் மனமும் தூய்மையாகும்' என்று ஒலித்தது.

அன்று முதல் திருமலையின் புண்ணியத் தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தமாகக் குமார தாரிகையும் விளங்குகிறது.