என் பெயர் பார்த்திபன். தாயார் பெரிய நாச்சியார். அப்பா வேலு. என் மனைவி சுடலை வடிவு, ஆதித்தன், வெற்றிமாறன் என இரு மகன்கள்.

உடன்பிறந்தவர்கள் இரு அக்காக்கள்- சுமதி, முத்துலெட்சுமி. திருச்சியிலுள்ள மத்திய அரசு படைக்கலத் தொழிற்சாலையில் எனக்கு வேலை. பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சிதான். ஆனால், அப்பாவுக்குப் பூர்வீகம் நாகர்கோவில் மாவட்டம் வடக்குத் தாமரைக்குளம். பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்துவிட்டதால் ஊர்த் தொடர்பும் குலதெய்வ வழிபாடும் விட்டுப்போய்விட்டன.

‘கோடிதெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வத்தை வணங்கா விடில் துயரமே’ என்பது வழக்கு. அதை அனுபவபூர்வமாக உணர்ந் தவன் நான். எனக்கு, எங்கள் குலதெய்வம் வாரியூர் ‘நீராவி சுடலை’ என்ற தகவலைத் தவிர, வேறு விவரங்கள் தெரியாது. எங்கள் பகுதியில், பொதுவாகக் குலதெய்வம் குறித்த விவரங்கள் அறியாதவர்கள் சமயபுரத்தாளையும், இருக்கன்குடி அம்மனையும் குலதெய்வமாக வணங்குவர். நாங்களும் அவ்வாறே வணங்கி வந்தோம்.

குலதெய்வம் இன்னதென அறியாதவர்கள் பிரசன்னம் பார்த்து அவர்கள் சொல்லும் திசையில் சென்று, எந்த தெய்வம் தட்டுப்படுகிறதோ அந்தத் தெய்வத்தை ஏற்கெனவே வணங்குபவர்களுடன் ஒப்பந்தமிட்டு, உரிய சமர்ப்பணங்களைச் செய்து, பூசாரிக்கு அருள்வந்ததும் அவரின் ஆசியோடு பிடிமண் எடுத்துவந்து, தனக்கேற்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து வணங்குவர். சில தெய்வங்கள் மனமே இறங்காது. ‘போய் அடுத்த பங்குனி உத்திரத்துக்கு வா!’ என அனுப்பிவிடும். பின் ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் முயல்வர்.

எனக்கோ தெய்வம் எதுவெனத் தெரிந்தும் அந்தத் தெய்வத்தின் இடத்தைத் தேடி போகாமல் இருந்தது வருத்தத்தைத் தந்தது. ஒருவழியாக குடும்பத்தார் அனைவரும் குலதெய்வத்தைத் தேடி (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு) கிளம்பினோம். வாரியூர் சென்றால் அங்கே எல்லாம் மாறியிருந்தன. ஊருக்குத் தெற்கிலுள்ள வாழைத் தோப்பில் இரண்டு கி.மீ உள்ளே நடந்தால் கோயில் இருக்கும் என்றார் தந்தை. ஆனால், புதிதாய் முளைத்த கான்கிரீட் காடுகளும் புதிய சாலையும் தந்தையாரைத் திகைக்கச் செய்தன. அதுமட்டுமல்லாமல் ஊரெங்கிலும் வாழைத் தோப்பு சூழ்ந்திருந்தது. ஊரினுள் விசாரித்தால் ஒருவருக்கும் தெரியவில்லை. வேறுவழியின்றி தெய்வத்தை தரிசிக்காமலேயே வருத்தத்துடன் திருச்சி நோக்கித் திரும்பினோம். அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து எனக்குத் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்துக்கு முன்பு குலதெய்வத்திடம் குறிகேட்க வேண்டுமெனத் தீர்மானித்து, சமூக வலைதளங்களின் உதவியால் அந்த ஊரிலுள்ள உறவினர் ஒருவரைத் தேடிப்பிடிக்க, அவருக்கு எங்கள் குலதெய்வம் பற்றித் தெரிந்திருந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

பின்னர் நண்பன் ஒருவனை உடனழைத்துச் சென்றேன். மனத்தில் இனம்புரியாத பரவசம்.விடியற்காலையில் நாகர்கோவில் வந்து அங்கே குளித்துவிட்டுக் கிளம்பினோம் செல்லும் வழியிலேயே மஞ்சனப் பொருள்கள், பூமாலை, தேங்காய் பழம், கட்டுவார்துணி வாங்கிக்கொண்டு வாரியூர் வந்தடைந்தோம். அங்கே உறவினர் சுரேஷ் வரவேற்றார்.

`வாடா... என்னைப் பார்க்க வர உனக்கு இவ்ளோ வருஷங்கள் ஆச்சாடா' என்று கேட்டு சுடலைமாடன் எக்காளச் சிரிப்பு சிரிப்பதாய்த் தோன்றியது எனக்கு!

ஊரெங்கும் தென்னை மரமும், வாழை மரமும் என நாஞ்சில் நாடு செழுமையாய் இருந்தது. ஏழெட்டு தெருக்களைத் தாண்டி, வயல்வெளியினை அடைந்தோம். நீராவி சுடலையென்றால், நீரினை ஆவியாக்காமல் காவல் காக்கும் சுடலையென்பது மக்களின் நம்பிக்கை. அதற்கேற்றாற்போல் இரண்டு வாய்க்கால்களில் இறங்கி மேலேறித்தான் அவரை அடைய முடிந்தது. அங்கே ஒரு சிறுகுளம் இருந்தது. அதில் தண்ணீர் எப்போதும் வற்றியதே இல்லையாம். அடர்ந்த வயல்களின் நடுவே ஓர் இடம் மட்டுமே ஏதும் பயிரிடாது மேடாய் இருந்தது. தூரத்தில் உருமாகட்டிய கோலத்தில் எங்கள் குலவிளக்கு.

வயல்களைத் தாண்டி, சிறிய ஓடை ஒன்றைக் கடந்து நேருக்கு நேர் அவரைப் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு ஏதும் பேச தோன்றவில்லை. `ஏன்டா! என்னைப் பாக்க உனக்கு 29 வருஷங்கள் ஆச்சாடா!' என எக்காளச் சிரிப்பு சிரிப்பதாய்த் தோன்றியது. உருவமில்லை உயர்த்திக் கட்டப்பட்ட ஒரு மாடம், லிங்கம் போல சுதையினால் பூசப்பட்ட ஓர் உருவம். எளிமையான இடம். ஆனால் அந்த இடம் தந்த பாதுகாப்பு உணர்வை, நிம்மதியை எங்கும் உணர்ந்ததில்லை.

பூசாரி இல்லை. ஆறு கால பூஜையில்லை. எப்போதோ இடப்பட்ட மாலை காய்ந்து உதிர்ந்து நார்மட்டும் எஞ்சியிருந்தது. உருமாதுணியும் எப்போது மாற்றியதோ... எனினும் ஒரு கம்பீரம் இருந்தது. காலணியைக் கழற்றிவிட்டு மார்க்கண்டேயன் லிங்கத்தைத் தழுவியதைப் போல, ஆசைதீரக் கட்டியணைத் தேன். ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன்பின் அருகேயிருந்த ஓடையி லிருந்து நீர்கொண்டுவந்து சுடலை மாடனைக் குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, கொண்டு வந்த மஞ்சனப்பொடியை மேலே அப்பி உருமா கட்டி சூடம் காட்டி அலங்கரித்து, சந்தனம் பூசி, சில நறுமணங் களால் வாசனை பரவச் செய்தோம். பின் அருள்கேட்க பூப்போட்டுப் பார்த்தோம், நான் மனத்தில் நினைத்த பூ முதல் நினைப்பிலேயே வந்தது. மரமொன்றிலிருந்து கவுளியும் கத்தியது. மகிழ்ச்சியுடன் என் தெய்வத்திட மிருந்து விடைபெற்றோம். அதன்பின் என் திருமணம் இனிதே நடந்தேறியது. தொடர்ந்து எங்கள் குலதெய்வத்தைச் சிக்கென பிடித்துக்கொண்டோம்.

கோயிலும் கொடை விழாவும்

நீராவிசுடலை கோயில் கொடை மிகவும் விசேஷம். நீராவி சுடலையைச் சுற்றிச் சிறியதாய் ஐந்து கற்களை நட்டுவைத்து அவற்றுக்கு விளக்கேற்றி வணங்குவோம். அந்த ஐந்து கற்களும் பேச்சியம்மன், பிரம்மசக்தி, உச்சிமாகாளி, ஐயா (அப்பகுதியில் அனைத்து மக்களும் இவரை வணங்குவர்), சப்பாணி ஆகிய ஐந்து தெய்வங்களாகும். நீராவி சுடலையின் அலங்காரப்பெட்டி, அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் வசிக்கும் கல்லுவீட்டு ஆறுமுகம் என்பவர் வீட்டில் இருக்கும். கோயில்கொடை நடக்கும்போது, அவர் வீட்டிலிருந்து தலையில் அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மேளதாளங்கள் முழங்க வருவார். அதனுள் சாமியின் உடை, வளரி, மணி, குத்துவாள் போன்றவை இருக்கும்.

சுடலையை அருகேயுள்ள குளத்து நீரினைக் கொண்டு அபிஷேகித்து, பெட்டியிலுள்ள பொருள்களைக் கொண்டு சாமியை அலங்கரிப்போம். அதன்பின் பொங்கல் வைத்து கிடா, கோழியினை பலியிடுவோம். சாமியாடிக்கு அருள்வரும். பங்காளிகள் வரிசையாய் நின்று உத்தரவுக் குறி கேட்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து படையல் இட்டு அங்கேயே உண்போம். அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதிகம். இரவு சாமக்கொடை நடைபெறும். பெண்கள், குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட எல்லைவரை வருவார்கள். அதற்கு மேல் அனுமதி கிடையாது. சாமியாடி, சுடலை வேடமணிந்து மேளம், கொட்டு முழங்க, ஒருகையில் வல்லயம், மறுகையில் தீப்பந்தம் ஏந்தி ஆடியபடியே வேட்டைக்குச் செல்வார்.

மயானத்தில் சில சடங்குகள் நடைபெறும். வேட்டை முடிந்ததும் சுடலையின் எல்லைப் பகுதியில் சாமியாடியின் தலையைச்சுற்றி முட்டை வீசப்படும். அதிலிருந்து கோயில்வரை முட்டிகாலிட்டுத் தலைகுனிந்தே சாமியாடி வருவார். உடுக்கை முழங்க ஒருகணம் பேச்சியம்மன் சாமியாடியின் மேல் வருவார். இதனை கணியன் உடுக்கை அடிப்பவரிடம் கூறுவார். அப்போது அவர்மேல் புடவை சார்த்தப்படும். தொடர்ந்து, சாமக்கொடைக்கு நேர்ந்தவர்கள் கிடாவை பலியிடுவர். அதன்பின் படையல் உணவு சாப்பிட்டு சாய்ந்ததும். விழா நிறைவு பெறும்.

இதுவே எங்கள் குலதெய்வ வழிபாட்டுமுறை, வருடந்தோறும் தவறாது நான் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருகிறேன். எத்துணை கோயிலுக்குச் சென்றாலும் அது நம் குலதெய்வக் கோயிலுக்கு ஈடு ஆகாது என்பது சத்தியமான உண்மை.

சூரிய பூஜை!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் - நாகலாபுரத்தில் உள்ள ஶ்ரீவேதநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மூன்று நாள்கள் சூரிய பூஜை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் மாலையில் மூலவரின் திருப்பாதங்களிலும் இரண்டாம் நாளன்று வயிற்றுப் பகுதியிலும் மூன்றாம் நாளன்று சிரசிலும் சூரியக் கதிர் விழுகிறது. ராஜகோபுர வாயிலிலிருந்து சுமார் 630 அடி தூரத்திலுள்ள மூலவர்மீது கதிரவன் தன் கதிர்களைப் பாய்ச்சி வழிபடுவது, கண்கொள்ளா காட்சியாகும்.

- ஆர்.ராஜலட்சுமி, கரூர்