ஆவணி மாதத்தில் பகவான் நாராயணனின் இரண்டு அவதாரங்கள் நிகழ்ந்தன. அவை கிருஷ்ணாவதாரமும் வாமன அவதாரமும் ஆகும்.
மாவலியிடம் மூன்றடி யாசித்து, ஈரடியால் மூவுலகங்களையும் அளந்து தேவர்களுக்கு நன்மை ஏற்படச் செய்தது, சுவேத வராஹ கல்பத்தில் எடுத்த அவதாரத்தில். ஆனால், மற்றுமொரு வாமன அவதாரத்தையும் வேதம் பேசுகிறது. அந்த அவதாரத்தில் மாவலியும் இல்லை; மூவடியும் இல்லை. எப்படி என்பதைப் பார்ப்போம்.
சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராஹ்மணத்தில், முதற் காண்டம் - மூன்றாவது பிராஹ்மணத்தில், இந்த வாமன அவதாரம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
காச்யப பிரஜாபதியிடமிருந்து தோன்றிய தேவர்களும் அசுரர்களும் பங்காளிக் காய்ச்சலினால் ஒருவருக்கொருவர் சண்டை யிட்டுக் கொண்டிருந்தனர். அப்படி ஒருமுறை சண்டை ஏற்பட்டபோது தேவர்களின் வலிமை குன்றிவிட, அசுரர்கள் வலிமை மேலோங்கி இருந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த நிலையில் ஆதிக்கவெறி கொண்ட அசுரர்கள், ‘இவ்வுலகம் முழுவதும் தங்களுடையதே’ என்று நினைத்து, அவர்கள் அனைவரும் பூமியைப் பங்கு போட்டுக்கொண்டு, அவரவருக்கு உரிய பாகத்தை அனுபவித்துக்கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, பூமியை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அளந்து தங்களுக்குள் பங்கு போடச் சென்றார்கள்.

அசுரர்களின் நடவடிக்கையைக் கண்ட தேவர்கள், தாங்களும் அந்த இடத்துக்குச் சென்று பங்கு கேட்கலாம் என்று நினைத்தனர். ஆனால் அவர்களில் சிலர், அங்கு போயும் பங்கு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று எண்ணினார்கள். வேறு சிலர், ‘`இந்தப் பூமியில் நமக்குப் பங்கு கிடைக்காவிட்டால்தான் என்ன, நாம் இப்போது இருக்கும் நிலையைவிட தாழ்ந்துவிடவா போகிறோம். இருந்தாலும் போய் கேட்டுப் பார்ப்போம்...’’ என்று கூறினர்.
அந்தத் தேவர்கள், வாமனரை முன்னிட்டுக் கொண்டு - வேள்வி ஸ்வரூபனான விஷ்ணுவை வாமனக் கோலத்தில் தலைவனாக ஏற்றுக் கொண்டு அசுரர்களிடம் சென்றனர்.
அசுரர்களிடம், ‘`இந்தப் பூமியைப் பிரித்துக் கொள்வதில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்களுக்கும் பூமியில் ஒரு பாகம் இருக்கட்டுமே’’ என்றனர்.
துஷ்டர்களான அசுரர்களோ பொறாமையும் வஞ்சகமும் கொண்டவர் களாக, ‘`இந்தக் குள்ளனான விஷ்ணு படுத்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக்கொள்கிறானோ, அவ்வளவு இடத்தை உங்களுக்குத் தருகிறோம்’’ என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் என்றால், பகவான் விஷ்ணு குள்ளமான உருவில் வந்திருந்த காரணத்தினால்தான். அதனால் விஷ்ணுவால் அடைத்துக்கொள்ளப்படும் இடம் மிகக் குறைவாகத்தானே இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டனர். தேவர்களும் அவர்கள் கூறிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தரப்பில், `அசுரர்கள், யக்ஞ புருஷனான விஷ்ணுவின் அளவுள்ள பூமியை அல்லவா தரச் சம்மதித்திருக்கிறார்கள். எனவே, அசுரர்கள் மிகப் பெரியதொரு இடத்தையே இந்தப் பூமியில் நமக்குத் தந்திருக்கின்றனர்’ என்ற எண்ணத்தோடு நிபந்தனையை ஒப்புக்கொண்டனர்.

விஷ்ணு சர்வவியாபி ஆவார். அவர் அடைத்துக்கொள்ளும் இடத்தை அசுரர்கள் தருவதன் மூலம் அவர்கள் பங்கு போட்டுக்கொள்ள நினைத்த இந்தப் பூமி முழுவதையும் நமக்குத் தந்தவர்கள் ஆகிவிடுவார்கள் என்று தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விஷ்ணுவும் சயனித்த கோலத்தில் விம்மிப் பருத்து அண்ட சராசரங் களையும் அடைத்துக் கொண்டார். அதன் மூலம் பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களும் தேவர்கள் வசமாயின.
தன்னுடைய அளப்பரிய தாயன்பினால், தன்னுடைய சிருஷ்டியை தானே ஆரத் தழுவத் திருவுள்ளம் கொண்ட பகவான் நாராயணன், தேவர்களை முன்னிட்டு இந்த வாமன அவதாரத்தை எடுத்தார் என்று ஆன்றோர் கூறுவர்.
சர்வவியாபியான விஷ்ணுவும் சயனித்த கோலத்தில் விம்மிப் பருத்து அண்ட சராசரங்களையும் அடைத்துக் கொண்டார். அதன் மூலம் பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களும் தேவர்கள் வசமாயின.
ஓவியங்கள்: ம.செ