Published:Updated:

வேத வியாசரின் விருப்பம்!

வேத வியாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
வேத வியாசர்

பி.ராஜலட்சுமி, சென்னை-61, ஓவியம்: ம.செ

அந்த வனத்தில் இருந்த பறவைக் குடும்பம் ஒன்று வியாசரை மிகவும் கவர்ந்து விட்டது.

ரம்மியமான அந்தச் சூழல்... குஞ்சு பறவைக்கு உணவூட் டும் தாய்ப் பறவை... அவற்றுக்குக் காவலாக ஆண் பறவை... இந்தக் காட்சியே அவரைப் பரவசப்படுத்தியது.

சிந்தனையில் ஆழ்ந்தார். ‘இந்தப் பறவைகளுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம். பறவைக் குஞ்சு வளர்ந்து, பெற்றோரைக் காப்பாற்றப் போகிறதா... அல்லது கர்மாக்களைத்தான் நிறைவேற்றுமா... எதுவும் இல்லை. எனினும் அந்தப் பறவைகள், குஞ்சு பறவையிடம் எவ்வளவு அன்பு பாராட்டுகின்றன... ஞானியர் விரும்பும் பிரும்மானந்தத்தைவிட பேரானந்தம் தருவது, குழந்தைச் செல்வம்தான் போலும்!’ என்று எண்ணிய வியாசர் ‘குழந்தைச் செல்வம் பெற்றே தீருவது!’ என்று முடிவுடன் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

மாலை வேளை... மீண்டும் சிந்தித்தார் ‘அரணிக்கட்டையும் மத்தும் சேர்ந்தால்தான் அக்னியைப் பெற முடிகிறது... குழந்தைச் செல்வம் பெறுவதற்கு ஆண் மட்டும் போதாதே!’ - வியாசர் சிந்தனையில் ஆழ்ந்த அதே கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வேத வியாசர்
வேத வியாசர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவலோக மங்கையான ஊர்வசி, கிளி ரூபம் கொண்டு, அங்கு வந்தாள். அங்கும் இங்குமாக... வியாசரின் பார்வையில் படும்படி பறந்தாள். அவளைப் பார்த்ததுமே தனது குழந்தை ஆசை நிறைவேறப் போவதாக உணர்ந்தார் வியாசர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவரது சாயல் எதிரில் இருந்த அக்னியில் விழுந்தது. மறுகணம் அக்னியில் இருந்து தேஜோமயமான குழந்தை ஒன்று தோன்றியது. மகிழ்ச்சியில் திளைத்த வியாசர், அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து மார்போடு அணைத்துக்கொண்டார்.

குழந்தையை கங்கையில் நீராட்டினார். சுக (கிளி) ரூபத்தில் இருந்த ஊர்வசியை மனத்திலே எண்ணி பெற்ற புத்திரன் ஆதலால் குழந்தைக்கு ‘சுகர்’ என்று திருநாமம் சூட்டினார். அப்போது வானில் இருந்து பூமாரி பொழிந்தது. நாரதர் உட்பட முனிவர்கள் யாவரும் குழந்தையை ஆசீர்வதித்தனர்.

ஆகாயத்தில் இருந்து தண்டம், கமண்டலம் ஆகியவை வியாசரின் ஆஸ்ரமத்தில் வந்து விழுந்தன. ஆம், பால்ய பருவத்திலேயே பந்தங்களை உதறிய ஶ்ரீசுகர், ஆத்ம அனுபவம் பெற்று, உலகமே போற்றி வணங்கும் சுகப் பிரும்மமானார்! ஶ்ரீசுகரை உலகுக்கு அளிக்கவே வியாசப்பெருமானும் தந்தையானார்.