Published:Updated:

மஹாதன்வந்திரி ஹோமம் : வாட்டி வதைக்கும் எல்லா நோய்களில் இருந்தும் விடுபட நீங்களும் சங்கல்பியுங்கள்!

மஹாதன்வந்திரி ஹோமம்

மஹாதன்வந்திரி ஹோமம்: ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் பல்வேறு நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் எல்லோரும் நிச்சயம் பலன் பெறுவர்

மஹாதன்வந்திரி ஹோமம் : வாட்டி வதைக்கும் எல்லா நோய்களில் இருந்தும் விடுபட நீங்களும் சங்கல்பியுங்கள்!

மஹாதன்வந்திரி ஹோமம்: ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் பல்வேறு நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் எல்லோரும் நிச்சயம் பலன் பெறுவர்

Published:Updated:
மஹாதன்வந்திரி ஹோமம்

வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.

மஹாதன்வந்திரி ஹோமம்
மஹாதன்வந்திரி ஹோமம்

ஒரு ஹோம வழிபாடானது பல்லாயிரக்கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரக்கூடியது என்கின்றன ஞான நூல்கள். அதிலும் தனிப்பட்ட முறையில் வீடுகளில் ஹோமம் செய்வதை விட, சத்சங்கமாக, அன்பர்கள் அனைவரும் கூடி கூட்டு வழிபாடாக ஹோம வழிபாட்டை செய்வதே உத்தமமானது. ஹோமம் என்றால் அக்னி ரூபத்தில் தெய்வங்களை வழிபடுதல் என்று பொருள். ஹோமத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை சுவாஹா தேவி பெற்று, அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம். அக்னி பகவானின் பத்தினியே ஸ்ரீசுவாஹா தேவி. அக்னி இல்லாமல் நம் வழிபாடுகளே இல்லை எனலாம்.

பண்டைய காலங்களில் 400-க்கும் மேற்பட்ட ஹோமங்கள் உலக நன்மைக்காக இயற்றப்பட்டன. இன்றும் சில வகை ஹோமங்கள் நம் நலனுக்காக அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமானது ஸ்ரீதன்வந்திரி ஹோமம். உடல் ஆரோக்கியத்தை விரும்பாதவர் இருக்கவே முடியாது. கல்வி, செல்வம், வீரம் என சகல செல்வங்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையேல் இது எதையும் அனுபவிக்க முடியாது என்பதே உண்மை. மாறி இருக்கும் இன்றைய உலகில் எந்த வியாதி வருகிறது, எதனால் வருகிறது என்பது தெரியாமலேயே நம்மை அச்சுறுத்தி வருகின்றன. பூமி, நீர், காற்று, ஆகாயம் என நால்வகை பூதங்களாலும் இன்று நோய்கள் பெருகி மருத்துவமனைகளும் பெருகி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்
சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்

அச்சுறுத்தும் நோய்களுக்கு மருந்துகள் மட்டுமல்ல, பிரார்த்தனைகளும் தீர்வாகும் என்பதே நம் நம்பிக்கை. அதிலும் மருத்துவக் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருள் இருந்தால் எந்த நோயில் இருந்தும் மீண்டு விடலாம், எந்த நோயும் அணுகாமலும் காத்துக் கொள்ளலாம் என்பது நம் தொன்றுதொட்ட நம்பிக்கை. அந்த வகையில் சேலம் மாவட்டம், சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் ரோடில் ஜாகீர் அம்மாபாளையம் அருகே ஸ்ரீவீரமாதுருபுரியில் அமைந்துள்ள ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான் சந்நிதியில் மஹாதன்வந்திரி ஹோமத்தை நடத்த இருக்கிறோம்.

ஸ்ரீமஹாலட்சுமி
ஸ்ரீமஹாலட்சுமி

சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இல்லாத தெய்வ சந்நிதிகளே இல்லை எனும் அளவுக்கு ஸ்ரீகாவடி பழனியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீதீர்த்த பிள்ளையார், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீதன்வந்திரி பகவான், ஸ்ரீசரபேஸ்வரர், 18 ஐம்பொன் சித்தர்கள், சீரடி சாய்பாபா என எண்ணற்ற சந்நிதிகள் இங்கு வெகு சாந்நியத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மட்டுமே 108 திருமகள் வடிவங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீமஹாலட்சுமி தொடங்கி ஸ்ரீதேவிலட்சுமி வரை பலரும் அறியாத லட்சுமி வடிவங்கள் இங்கே அருள்பாலிக்கின்றன. ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு பரிகார பலன்கள் என இந்த ஆலயம் விளங்குவதால் இது செல்வவளம் வழங்கும் குபேரனின் அளகாபுரி பட்டினம் என்றும் போற்றப்படுகிறது. மேலும் செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொண்டு இருப்பதால் தினம்தோறும் விழாக்களும் ஹோம வைபவங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பதும் சிறப்பு.

ஸ்ரீதன்வந்திரி பகவான்
ஸ்ரீதன்வந்திரி பகவான்

இங்குள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் தனிச்சிறப்பு கொண்டவர் என்கிறார்கள். சித்தர்கள் ஆசியினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீதன்வந்திரி பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் இங்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகள் பலிக்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து தீராத வியாதிகளையும் தீர்த்துக்கொண்ட அன்பர்கள் ஏராளம் என்கிறார்கள் இந்த ஆலய நிர்வாகிகள். மேலும் பழங்கால முறைப்படி ரிஷிகள், யோகிகள் வகுத்தவாறே அபூர்வ மூலிகைகள் கொண்டு நியமப்படி இங்கு இந்த ஹோமம் நடைபெறுகின்றது என்பதும் விசேஷம். வில்வம், துளசி, அத்தி, நாயுருவி, பலாமரம், அரசம், வன்னி, அருகம்புல், தாமரை, மாதுளை அத்தி, எருக்கன், கருங்காலி, புரசங் குச்சி, நொச்சி உள்ளிட்ட பல மூலிகைகளோடு பல அபூர்வ சமித்துக்களும் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் ஆரோக்கியத்துக்காகவும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் பல்வேறு நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் எல்லோரும் நிச்சயம் பலன் பெறுவர். உடல் குறைபாடுகள் நீங்கி நோய் அச்சமின்றி பூரண ஆயுளை அடைவர் எனப்படுகிறது. தீராத வியாதிகளை உடையோர், வியாதி குறித்த பயம் கொண்டோர், பூரண ஆரோக்கியம் வேண்டுவோர், நீண்ட ஆயுள் வேண்டுவோர் என அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது நல்லது என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சூழ இந்த இனிய வைபவத்தில் கலந்து கொள்வோம்!

ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்
ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+ ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.