Published:Updated:

தாராபுரம்: இடிந்த நிலையில் இசை பாடும் எழில் மிக்க தூண்கள்... அரசு கவனிக்குமா? ஆதங்கத்தில் மக்கள்!

இசை பாடும் தூண்கள்

தமிழரின் கலையையும், பாரம்பர்யத்தையும், சிறப்பையும் எடுத்துக்கூறும் இதுபோன்ற வரலாற்றுச் சுவடுகளை தமிழக அரசு பராமரித்து பாதுகாக்குமா? இடிந்து கொண்டிருப்பது ஒரு மண்டபமோ தூண்களோ இல்லை, நம் கலை கலாசாரத்தின் உயர்ந்த ஓர் அடையாளம்!

தாராபுரம்: இடிந்த நிலையில் இசை பாடும் எழில் மிக்க தூண்கள்... அரசு கவனிக்குமா? ஆதங்கத்தில் மக்கள்!

தமிழரின் கலையையும், பாரம்பர்யத்தையும், சிறப்பையும் எடுத்துக்கூறும் இதுபோன்ற வரலாற்றுச் சுவடுகளை தமிழக அரசு பராமரித்து பாதுகாக்குமா? இடிந்து கொண்டிருப்பது ஒரு மண்டபமோ தூண்களோ இல்லை, நம் கலை கலாசாரத்தின் உயர்ந்த ஓர் அடையாளம்!

Published:Updated:
இசை பாடும் தூண்கள்

தமிழகத்தில் எங்கு நோக்கினாலும் அழகிய கோயில்கள், சிற்ப அழகு மிக்க மண்டபங்கள், குடவரை ஆலயங்கள், தொன்மையான கல்வெட்டுக்கள் எனக் காணப்படுகின்றன. மலிந்து கிடப்பதாலேயே அதன் பெருமைகள் தெரிவதில்லையோ என்னமோ, பல அபூர்வ கலைப் பொக்கிஷங்கள் கூட கவனிப்பாரின்றி சிதைந்து வருகின்றன. அப்படிச் சமீபத்தில் நாங்கள் கண்டு அதிர்ந்து போன விஷயம் இசை பாடும் தூண்கள். அது எங்கே உள்ளது, என்ன நிலையில் உள்ளது என்று பார்ப்போம்.

இசை பாடும் தூண்கள்
இசை பாடும் தூண்கள்

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தாராபுரம். அமராவதி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்த ஊர் பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்ததால் அனைத்து விதமான ஆன்மிகக் கலைகளும் வளர்ந்த இடமாக இருந்துள்ளது. சங்க காலத்திலேயே பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்ற நகரமாகத் திகழ்ந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், திப்பு சுல்தானும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களிம் ஆளுமைக்கு உட்பட்டு இந்தப் பகுதி இருந்துள்ளது. விடாரபுரம் என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட தாராபுரம் நகரை இராமாயண காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் காட்டு ஆஞ்சநேயர் கோயில், அகத்திய முனிவரால் பாடப்பட்ட அகத்தீஸ்வரர் கோயில் என்று பல புராண சுவடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசை மண்டபம்
இசை மண்டபம்

அருள்மிகு அகத்தீஸ்வரர், தில்லாபுரி அம்மன் கோயில், உத்தரவீரராகவ பெருமாள் கோயில் அருகே 13 ஆம் நூற்றாண்டில் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இசை மண்டபம் உள்ளது. இந்தப் பகுதியில் கிடைத்த பல்வேறு வகையான கற்களில் இருந்து இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 16 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணையும் தட்டும் பொழுது விதவிதமான இசை எழும்புகின்றன. இனிய ஸ்வரங்களை தன்னுள் தாங்கியவாறு அமைந்திருக்கும் இந்த அபூர்வத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை கற்களால் ஆனது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சப்த ஸ்வரங்களையும் வெளியிடும் இந்த இசை மண்டபம், தமிழர்களின் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆன்மிகத்தின் சிறப்புகளை பறைசாற்றும் பல்வேறு அரிய சிற்பங்களுடன் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூண்களின் கீழ் பகுதியில் பாம்பு, மீன், சிவலிங்கம், உள்ளிட்ட உருவங்களும் உள்ளன. மேலும் பண்டைய ஐரோப்பிய நாகரிகத்துடன் தொடர்புடைய ஆனைமலை, மதுரைவீர நாராயண வணிக பெருவழிப் பாதையில் தாராபுரம் அமைந்துள்ளதால் பல்வேறு வணிக தொடர்புகளை விளக்கும் சிற்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

அரிய சிற்பங்கள்
அரிய சிற்பங்கள்

ஆனால் இந்தத் தூண்கள் தற்பொழுது சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் இருந்து ஆய்வு செய்ய சிலர் இந்தத் தூண்களின் கற்களை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் தற்சமயம் தூண்களின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு சில தூண்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. மண்டப விடாரத்தின் மீது பல்வேறு செடி, கொடிகள், படர்ந்து காணப்படுகின்றன. கூரை கற்பலகைகள் கீழே விழும் அதன் வழியாக மழைநீர் மண்டபத்தின் உள்ளே புகுந்து தூண்களை பலமிழக்கச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாராபுரம் இசை மண்டபம்
தாராபுரம் இசை மண்டபம்

ஆன்மிகம் மற்றும் சிற்பக்கலையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்த மண்டபத்தை தொல்லியல் துறையினர் சீரமைத்து கம்பி வேலியிட்டு சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தூண் பலம் இழந்து கீழே விழுந்துவிட்டது. அதன் பின்னர் தற்பொழுது மண்டபத்தைச் சுற்றி கம்பி வேலியிட்டுள்ளனர். தமிழரின் கலையையும், பாரம்பர்யத்தையும், சிறப்பையும் எடுத்துக்கூறும் இதுபோன்ற வரலாற்றுச் சுவடுகளை தமிழக அரசு பராமரித்து பாதுகாக்குமா? இடிந்து கொண்டிருப்பது ஒரு மண்டபமோ தூண்களோ இல்லை, நம் கலை கலாசாரத்தின் உயர்ந்த ஓர் அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism