Published:Updated:

தகடூர் நடுகல் கூறும் `துரோகமும் விஸ்வாசமும்' - ஆச்சர்யமூட்டும் நம்பிக்கைக் கதை!

தகடூர் நடுகல்

நடுகல் பற்றிய தொடரில் இந்த வாரம், சுவாரஸ்யமான ஒரு சதிகல் பற்றியும், தனது மன்னருக்காக போரில் வெற்றி கொண்ட ஒரு தளபதியின் விசுவாசம் பற்றியும் காண்போம்.

தகடூர் நடுகல் கூறும் `துரோகமும் விஸ்வாசமும்' - ஆச்சர்யமூட்டும் நம்பிக்கைக் கதை!

நடுகல் பற்றிய தொடரில் இந்த வாரம், சுவாரஸ்யமான ஒரு சதிகல் பற்றியும், தனது மன்னருக்காக போரில் வெற்றி கொண்ட ஒரு தளபதியின் விசுவாசம் பற்றியும் காண்போம்.

Published:Updated:
தகடூர் நடுகல்
சங்கரக்குட்டியார் மீண்டும் படையினை திரட்டி அந்த நுளம்பனை போரில் வெற்றி பெற்று நாட்டைக் கைப்பற்றுகிறார். அப்போரில் பெருவீரம் காட்டிய நாகந்தை சிறுகுட்டி என்பவர் மார்பில் அம்புதரித்து இறக்கிறார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.
தகடூர் நடுகல்
தகடூர் நடுகல்

தமிழகம் எங்கும் ஆச்சர்யமான சுவாரஸ்யமான பல நடுகற்கள் கிடைத்துள்ளன. கிடைத்தும் வருகின்றன. கற்பொறி என்று சிறப்பிக்கப்படும் நடுகற்கள் புலிக்குத்தி நாடுகற்கள், ஆநிரைகளை மீட்டெடுத்த வீரரின் நடுகற்கள், சதி கற்கள், தன்னையே பலி கொடுத்த அரிகண்டம், நவகண்டம் என பலவகைப்படுகின்றன. நாடுகற்களில் சிறப்பானது ஒன்று உள்ளது. கரம்பை முக்கன் என்ற வீரன் தன்னுடைய ஊரின் ஆநிரைகளை அணியன் என்பவன் கவர்ந்து செல்ல, அவற்றை மீட்பதற்காக நடைபெற்ற போரில் இறந்துவிடுகிறான். அவன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி 853-ம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் விஜயாலயச் சோழர் காலம் என்றும் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட அரிதாரிமங்கலம் வீரன் ஒருவனின் நடுகல் செய்தியும் வித்தியாசமானது. அது முதலாம் பராந்தகன் காலத்து 'பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்து' என்று 940-ம் ஆண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இதில் உள்ள வீரன் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் வைத்திக்கொண்டு போருக்குச் செல்லும் தயார் நிலையில் இருக்கிறான். இப்படி பல சுவாரஸ்யமான நடுகற்கள் பல இடங்களில் பார்த்து வருகிறோம்.

நடுகல் பற்றிய தொடரில் இந்த வாரம், சுவாரஸ்யமான ஒரு சதிகல் பற்றியும், தனது மன்னருக்காக போரில் வெற்றி கொண்ட ஒரு தளபதியின் விசுவாசம் பற்றியும் காண்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுகல்
நடுகல்

மல்யுத்தமும் சதியும்:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ளது பெலத்தூரு கிராமம். ராஜராஜன் காலத்திலேயே இப்பகுதி சோழர் வசமானது. கன்னடப் பகுதி குறுநில மன்னர்கள், சோழர்களின் மேலாண்மையை ஏற்று, அவர்களுக்காக பலபோர்களில் கலந்து வெற்றியை பெற்று தந்தும், இறந்தும் உள்ளனர். அதேபோன்ற ஒரு குறுநில மன்னன்தான் "நவிலி" நாட்டை ஆண்ட எச்சா என்பவர், இவர் "நுக" நாட்டை ஆண்ட ரவிகா என்பவரின் மகளான தொகப்பை என்பவரை மணமுடித்தார். பெர்வய்யல் எச்சா மிகச்சிறந்த வீரர், மல்யுத்தத்திலே மிகுந்த பயிற்சியுடையவர். ஒருமுறை மல்யுத்தபோட்டியிலே அரசகுமாரன் ஒருவனை வீழ்த்திவிடுகிறார். அந்த அரசகுமாரன் எவர் என தெரியவில்லை, எந்த அரசகுலம் என்ற தகவலும் இல்லை. தவறுதலாய் அந்த அரசகுமாரன் இறந்துவிடுகிறார். உடனே அவருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டு, கொன்றும் விடுகின்றனர். இதைகேள்விபட்ட அவன் மனைவி "தொகப்பை" சுற்றத்தார் தடுத்தும் கேளாமல், சதியேறத் தயாராகிறார். தான் இறக்கும் முன்பு தனது உடைமைகள் அனைத்தும் தானமளித்து தன் கணவன் உடலின் மீது சதியேறி மாண்டு விடுகிறார். இந்த வீர தம்பதியர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லே இது.

"தமது தேகமதை தீயிற்களித்த தேகப்பை" என்பதே இக்கல்வெட்டின் முக்கிய வாசகம். இரண்டாம் ராஜேந்திரசோழன் கால நடுகல் இது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துரோகமும் நம்பிக்கையும்:

இந்த நடுகல் 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது. இக்காலகட்டத்தில் தமிழகம் ஓர் குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. பல்லவரின் மேலாண்மையிலிருந்து விலகி தனியாட்சி அமைக்க சோழர்கள் போராடிக் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தனியே பாதி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். இந்நடுகல் கிடைத்த தகடூர் நாடு (தர்மபுரி பகுதி) அன்றைய தமிழகத்தின் எல்லைப்பகுதியாய் இருந்தது. ஆகவே பிற நாட்டினர் இப்பகுதியை அடிக்கடி தாக்குவதுண்டு. எனவே இவர்களுக்கு பெரும்பாலும் போரிட்டு தம் குடிகளைக் காப்பதிலேயே பொழுது கழிந்திருக்கும். இந்நடுகல் மதிகோன்பாளையம் எனும் ஊரில் கிடைத்தது. தற்போது தர்மபுரி அகழ்வைப்பகத்தில் உள்ளது. நடுகல்லில் கிடைத்த சிறு இடைவெளியில் மிகவும் சுருக்கமாகவும், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் கல்லில் செதுக்கியுள்ளனர். துரோகமும், விஸ்வாசமும் நிறைந்த கதை இது.

வாணர் குலத்தைச் சேர்ந்த அரிமிதைய வாணராயன் எனும் அரசன் தகடூரைச் சுற்றியுள்ள கங்கநாடு, புறமலைநாடு, தாயனூர்நாடு, கோயினூர்நாடு எனும் பகுதிகளை ஆண்டு, அப்பகுதியில் ஒரு அதிகாரம் செலுத்தக்கூடிய மன்னராய் விளங்கினார். மற்றொரு எல்லைப்பகுதியை ஆண்ட நுளம்பர்குல மன்னர் ஒருவன், இவரது உறவினராய் இருக்கக்கூடும். அந்த நுளம்பன் இவரை உறவினர்போல் வஞ்சித்து துரோகமிழைத்து கொன்றுவிட்டு அவரது நாட்டையும் அபகரித்து விடுகிறார். அச்சமயம் அரிமிதையனின் மனைவி கர்ப்பமாய் வேறு இருந்திருக்கிறார். அரிமிதையரின் நம்பிக்கைக்குரிய சங்கரக்குட்டியார் என்பவர், தன் மன்னனின் மனைவியை காப்பாற்றி அவர் ஆண்பிள்ளை பெறும்வரை காவல்காத்து நின்றார். அதன்பின் மீண்டும் படையினை திரட்டி அந்த நுளம்பனை போரில் வெற்றி பெற்று நாட்டைக் கைப்பற்றுகிறார். அப்போரில் பெருவீரம் காட்டிய நாகந்தை சிறுகுட்டி என்பவர் மார்பில் அம்புதரித்து இறக்கிறார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.

நடுகற்கள், கல்வெட்டுகள் போன்றவை வரலாற்றுத் தகவல்களை மட்டுமல்ல, இது போன்ற நெகிழ்ச்சியூட்டும் கதைகளையும் சொல்லத்தான் செய்கின்றன.

தொடரும்...