Published:Updated:

குகை நரசிம்மர்!

குகை நரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
குகை நரசிம்மர்

அதிசயங்கள் நிறைந்த ஆலயம்!

குகை நரசிம்மர்!

அதிசயங்கள் நிறைந்த ஆலயம்!

Published:Updated:
குகை நரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
குகை நரசிம்மர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது நெருப்பூர். உலகின் தீமைகளை எல்லாம் சுட்டெரிக்கும் ஆற்றலோடு தோன்றிய நரசிம்மர், தவம் புரிந்த இடம் ஆதாலால், இவ்வூர் நெருப்பூர் என்று பெயர் பெற்றதாம். நெருப்பூரிலிருந்து இடப் பக்கமாகப் பிரியும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது.

நரசிம்மர்
நரசிம்மர்
குகை நரசிம்மர் ஆலயம்
குகை நரசிம்மர் ஆலயம்
முத்தையன் சாமி
முத்தையன் சாமி
தெப்பக் குளம்
தெப்பக் குளம்
தல விருட்சம்
தல விருட்சம்


நுழைவாயிலின் இருபுறமும் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கும் காவலாளிகளின் சிலைகள் உள்ளன. சிலைகளுக்கு அருகில் வலப்புறம் விநாயகரும் இடப்புறத்தில் ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டுள்ளனர். விநாயகர் சந்நிதிக்கு முன்னே நூற்றுக்கணக்கில் நாகர் சிலைகள் உள்ளன. வேண்டுதல் நிமித்தம் வைக்கப் பட்ட சிலைகள் அவை என்கிறார் பக்தர் ஒருவர்.

இவைற்றை தரிசித்தபடி மேலும் நடந்தால், அழகிய தெப்பக்குளத்தைக் காணலாம். குளம் ததும்ப காட்சி தரும் நீர், குளத்தைத் தாண்டியும் வடிந்தோடுகிறது. வறட்சி மிகுந்த அந்தப் பகுதியில், இப்படி எப்போதும் நீர் நிறைந்திருக்கும் ஒரு குளம் இருப்பது இயற்கையின் அதிசயமே என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

பாறைகளும், அரசமரத்தின் வேர்களும் ஒன்றிணைந்து காணப்படும் இருண்ட குகையே முத்தத்திராயரின் மூலஸ்தானம். இந்தக் குகையில்தான் நரசிம்மர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரையே முத்தத்திராயர், முத்தையன் சாமி என்ற பெயர்களில் வணங்கி வழிபடுகிறார்கள். பஞ்சம் மற்றும் கொடிய மிருகங்களால் இப்பகுதி மக்கள் துன்புற்ற காலத்தில் எல்லோரையும் காக்கும் தெய்வமாக வந்தவராம் இந்த சுவாமி.

சுமார் 20 அடி அகலம்; 6 அடி நீளத்துடன் திகழும் இந்த குகைக்குள் ஒரேநேரத்தில் ஆறுபேர் மட்டுமே சென்று வழிபட முடியும். குகைக்குள் குனிந்தபடியே சென்று பூஜை செய்து வருகிறார் அர்ச்சகர். உள்ளே நீரூற்றும் உள்ளது. அதிலிருந்து பெருகி ஓடும் நீர், ஒரு கால்வாய் மூலம் தெப்பக் குளத்தில் சென்று சேர்கிறது. இந்த நீரைத் தீர்த்தமாக பாவிக்கும் பக்தர்கள், இதில் நீராடுவதாலும் பருகு வதாலும் பிணிகள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.

குகையின் மேற்புறச் சுவரில் நிறைய வெளவால் களைக் காணமுடிகிறது. விழா காலங்களில் அதிர் வேட்டுகள் வெடிக்கப்படும்போதும், மேள-தாளங்கள் அதீத ஓசை எழுப்பும்போதும்கூட இந்த வெளவால்கள் குகையைவிட்டு வெளியேறுவது இல்லையாம். அதேநேரம் பக்தர்களுக்கும் தொந்தர வாக இருப்பது இல்லை என்கிறார்கள்.

``இவற்றையும் தெய்வ வடிவாகவே பார்க்கிறோம். மூதாதையரே இவ்வாறு வெளவால்களின் உருவில் இங்கு வந்து, நரசிம்மரை தியானித்து தவம் இருப்ப தாக நம்பிக்கை'' என்கிறார் அர்ச்சகர். குழந்தைப் பாக்கியம் கிட்டாத தம்பதியர் இங்கு வந்து மனதார வணங்கி வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்.

ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை தினத்தில் சுவாமி திருவீதியுலா காண்கிறார். அப்போது சுவாமி வரும் பாதையில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தரையில் நெடுஞ் சாண் கிடையாக படுத்துக்கொள்கின்றனர்.

சுவாமியைச் சுமந்து வரும் கோயில் பூசாரி, அவர்களை தாண்டிச்சென்று ஆசி வழங்குகிறார். இதனால் துன்பங்கள், பிரச்னைகள் அனைத்தும் விலகி நன்மைகள் சேரும்; நோய்நொடிகள் நீங்கும்; திருமணம் ஆகாதவர்களுக்குத் தடைகள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism