Published:Updated:

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

பிள்ளையார்
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளையார்

விநாயகரே மூவருக்கும் முக்கோடி தேவர் களுக்கும் முதன்மையானவர்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

விநாயகரே மூவருக்கும் முக்கோடி தேவர் களுக்கும் முதன்மையானவர்.

Published:Updated:
பிள்ளையார்
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளையார்

னக்குமேல் ஒரு தலைவன் இல்லாத மகிமை கொண்டவர் பிள்ளையார். ஆகவேதான் அவருக்கு விநாயகர் என்று திருப்பெயர். அவர் அவதரித்த - ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திருநாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.

விநாயகரே மூவருக்கும் முக்கோடி தேவர் களுக்கும் முதன்மையானவர். ‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ எனப் போற்றுகிறார் அருணகிரிநாதர்.

ஆம், தெய்வங்களில் மகிமை நிறைந்தவர் பிள்ளையார். அவரை மகிமை நிறைந்த தீப வழிபாட்டால் ஆராதிப்பது விசேஷம்! அவ்வகையில், சக்தி விகடனும் தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவன மான காளீஸ்வரி ரீஃபைனரியும் இணைந்து

வழங்கும், `தீபங்கள் ஒளிரக் கொண்டாடுவோம் பிள்ளையாரை’ சிறப்புப் பரிசுப்போட்டி அறிவிப்பு வெளியானது. எண்ணற்ற வாசகர்கள் வெகு ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 500 வாசகர்களில், மிகச்சிறந்த 30 வாசகர்களின் படைப்புகள் இந்த இணைப்பிதழில்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

வெற்றிபெற்ற மற்ற வாசகர்களுக்குச் சிறப்புப் பரிசு குறித்த விவரம், விரைவில் குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தப்படும். ரூ.1,000 மதிப்பிலான சிறப்புப் பரிசு 21.10.19-ம் தேதிக்குள் உங்கள் வீடு தேடி வரும். வாழ்த்துகள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நர்த்திகாஸ்ரீ, ஆம்பூர்

லர், அணிகலன்களோடு மணம் வீசும் பஞ்ச தீப எண்ணெய்கொண்டு தீபமேற்றி விநாயகரைக் கொண்டாடி னோம். வேழ முகத்தானின் அருள் வீடெங்கும் பிரகாசமாய் ஒளிர, வளரும் தலைமுறையும் வணங்கி நின்றது. தலை முறையாய் தொடரட்டும் இந்த `தீபம்' உறவு.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்ரீதேவி, சென்னை

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட ஆணை முகத்தானை பஞ்ச தீப எண்ணெய்கொண்டு அலங்கரித் தோம். ஐவகை எண்ணெய் கலந்த தீபம் விளக்கேற்றும் எண்ணெயைக்கொண்டு தீபமேற்றி வழிபட்டால், சகல தீமைகளும் விலகி வளமும் நலமும் பெருகும்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

பரிமளா, சென்னை

`கருணை வள்ளல் கணபதியைத் தொழு’ என்றும் ‘சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்றும் பெரியோர்கள் சொல்லித் தந்ததுண்டு. அந்தப் பாடல்களோடும் தீபம் ஆராதனையோடும் சிறப்பாகக் கொண்டாடினோம், பிள்ளையாரை!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

தேன்மொழி, வேலூர்

முக்கண் முதல்வனே முதற் கடவுள். எங்கள் வீட்டுப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார். நிறைவான அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை, தீபங்களால் அலங்காரம் என அவர் ஜொலி ஜொலிக்க... நானும் கணவரும் மகள்களும் மெய்சிலிர்த்தோம்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

சுக்லாம் பரதரம்

விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்நோப சாந்தயே

வர்ஷிகா, சென்னை

பிள்ளைகள் விரும்பும் தெய்வம் பிள்ளையார். தீபங் களின் ஒளியில் வண்ண அலங்காரத்தில் அசத்திய எங்கள் வீட்டுப் பிள்ளையாரை மகள் வணங்கி நின்றபோது, ‘தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று சிறு வயதில் வழிபட்ட நினைவுகள் மலர்ந்தன!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விலம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

சுதா, சென்னை

தீபங்கள் ஏற்றினோம், நறுமலர்கள் சூட்டினோம், ‘நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்று துதித்தோம். அசைந்தாடிய தீபச்சுடர்கள், ஆனைமுகன் அருள் நல்கியதைச் சொல்லாமல் சொல்லின!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

சம்யுக்தா, சென்னை

ல்லவை வேண்டும் எனக் கேட்டால், இல்லை எனச் சொல்லாமல் தந்தருளும் நாயகர் பிள்ளையார். அவருக்குப் பிடித்த அவல் - பொரி கடலையுடன், தீபம் எண்ணெய் நிரம்பிய அகல்களாலும் செய்த ஆராதனை சிறப்பானது ஆனைமுகனுக்கு!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

எள்ளுப்பொரியும் இடித்தஅவலும்

வள்ளிக்கிழங்கும் வாழைப்பழமும்

அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்

உள்ளம் மகிழ அருள் தருவாய்!

கார்த்திகேயன், சென்னை

ரும்பென இனிக்கும் வாழ்வைத் தரட்டும் கணபதி. இருளில்லா இன்பத்தை நல்கட்டும் ஈசனின் மைந்தன். தீபங்களின் ஒளியென இல்லமெங்கும் நிறையட்டும் மங்கல சுபிட்சம்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே!

சுகன்யா, நாகை

தீபங்கள் பேசும் அற்புத அலங்காரம். ஒளிர்ந்தது தீபச் சுடர்களா, ஆனைமுகனின் அருளொளியா! திகைக்க வைக்கும் அருள்கோலம். எப்போதுமே விசேஷமாய்த் திகழும் விநாயகர் சதுர்த்தியை, தீப அலங்காரம் மேலும் சிறப்பாக்கிவிட்டது.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து.

அம்பிகா, சென்னை

னைமுகக் கடவுளுக்கு அருள்விளக்கு ஆராதனை அற்புதமாய் அமைந்தது. `தீபம்' ஐவகை எண்ணெய் நிரப்பி அகல்களை ஏற்றிவைத்ததும், பிள்ளையார் நேரிலேயே வந்தமர்ந்துவிட்ட திருப்தி; அவ்வளவு சாந்நித்தியம்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு

தும்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

பாலகிருஷ்ணா, கோவை

கத்தின் அழகு முகத்தில். முகத்தின் மலர்ச்சி பிள்ளையாரின் திருவருளால். திருவருளின் ஆரம்பம் அகல்களின் தீபங்களில். அனைத்துக்கும் ஆதாரம் கணபதியின் கருணையே!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நான்கும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா.

உமா, சென்னை

தீபம் ஏற்றி வழிபட்டால் தீவினைகள் விலகுமாம். விக்னங்கள் நீங்கவும் வினைகள் பொசுங்கவும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றினோம்; கணபதியைப் போற்றினோம்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (அருள்க)

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

ரித்துவர்ஷிணி, சென்னை

ந்தனுக்கும் அருளிய கணபதி எல்லோருக்கும் அருளணும், வேண்டுதல் பலிக்கணும், வேண்டியதெல்லாம் கிடைக்கணும்... பிரார்த்தனையோடு விளக்கேற்றினோம்; பிள்ளையார் மகிழ்ந்திருப்பார்; சீக்கிரமே மனம் கனிவார்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

சக்தி தொழிலே அனைத்து மெனிற்

சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்

வித்தைக்கிறைவா கணநாதா

மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

சிவரஞ்சனி, கும்பகோணம்

ங்கோலி கோலமும் அகர்வத்தி மணமும் போதுமா என்ன... நம் அலங்கார நாயகனின் அகமகிழ அகல் விளக்கொளியும் அலங்காரம் சேர்க்கட்டும். அவரருளால் ஆனந்தம் சேரட்டும்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைவாய்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

சங்கீதா, கோவை

பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நான்கோடும் ஐவகை எண்ணெய் தீப அலங்காரமும் ஆராதனையும் சமர்ப்பித்து ஆனைமுகனை வணங்கினோம். வரம்வாரி வழங்கட்டும், வலம்புரி விநாயகர்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

வேழமுகத்து விநாயகனைத் தொழ

வாழ்வு மிகுத்து வரும்

வெற்றி முகத்து வேலவனைத் தொழ

புத்தி மிகுத்து வரும்.

சாந்தி, சென்னை

ங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் திருநாள் விநாயகர் சதுர்த்தி. அன்று அறுகம்புல்லோடு, முக்கனியும் முக்கண் தேங்காயும், கொழுக்கட்டை நைவேத்தியமும் படைப்பதுடன் தீபத்தாலும் வழிபட்டால், நன்மைகள் பெருகுமாம். அப்படியே வழிபட்டோம்; வரம் கிடைக்கும்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

முன்னவனே யானை முகத்தவனே முக்தி நலம்

சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே

சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின்தாள் சரண்.

நளினி, பாண்டிச்சேரி

ட்டுத் திக்கும் ஒளிவீசும் தீபம். எல்லா திசைகளிலும் அருளைச் செலுத்துபவன் இறைவன். இல்லத்தில் தீபவொளி நிறைந்தால் உள்ளத்தில் இறையருள் பெருகும். அதற்கு தீப வழிபாடு உதவும். முதல்வனை முப்பொழுதும் தீபமேற்றி வழிபடுவோம்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

செல்வ விநாயகன் சேவடி போற்றி

அல்லல் நீக்கி அருள்வான் போற்றி

நல்லன யாவும் நல்குவான் போற்றி

வல்லப கணேசன் மலர்த்தாள் போற்றி.

செல்வராணி, கும்பகோணம்

தெய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். வழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. சத்தியமான வரிகள் இவை. முதல்வனுக்கு, முதன்மையான தீப வழிபாடு சமர்ப்பணம்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல

குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்

கணபதியைக் கைதொழுதக் கால்.

ரத்னவேல்ரஞ்சித், திருச்சி

யானை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும்... பிள்ளைகளின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் திருவடிவினன் பிள்ளையார். அதிலும் தீபவொளியில் அவர் திருமுகம் கண்டால், அற்புதம்தான்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்

கருணை பூக்கவும் தீமையைப் போக்கவும்

பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்

பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்

சாதனா, திருவள்ளூர்

குடை சாத்தி, மலர்சூடி, இலை விரித்து, கொழுக்கட்டை- மோதகம், சுண்டல், அவல் - பொரிகடலை... அத்தனையும் படைத்து, விளக்கேற்றி வழிபட்டோம். பிள்ளையாரப்பா அருள் தருவாயப்பா!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்

பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க

ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்

ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.

மாயா, சென்னை

ற்புதம் நிறைந்த கற்பகக் களிரே... சுடர்முகம் அனைத்திலும் உன் காட்சிதான். தீபவொளியால் நிறைந்தது இல்லம்; கணபதியின் அனுக்கிரகத்தால் மகிழ்ந்தது உள்ளம். கணபதியே சரணம்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும்

பக்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங் - கொத்தி

அரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த

கரிமுகனைக் கைதொழுதக் கால்.

விஜய சாந்தி, கன்னியாகுமரி

ங்கார ஒலியே ஓர் உருக்கொண்டு திரண்டால் அதுவே பிள்ளையார். பிரணவத் தத்துவம் அவர். ஒளி அவரின் சாந்நித்தியம். ஐவகை எண்ணெய்கொண்டு விளக்கேற்றி ஐங்கரனை வழிபட்டால், உள்ளொளி பெருகும்; வாழ்க்கை வரமாகும். வழிபட்டோம் - வரம்பெற்றோம்!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

ஓம் எனும் பொருளா உள்ளோய் போற்றி

பூமனும் பொருள்தோறும் பொலிவாய் போற்றி

அகரம் முதலென ஆனாய் போற்றி

அகர உகர ஆதி போற்றி!

கிருஷ்ணமணி, தென்காசி

ங்கரனின் மகன் ஐங்கரனை வணங்கினால் அல்லல்கள் நீங்கும். அதேபோல், ஐந்துவகை எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால், சகல சம்பத்துகளும் வாய்க்கும். சதுர்த்தியில் ஐங்கரனின் அருளால் அல்லல்கள் நீங்கிட, சம்பத்துகள் சேர்ந்திட தீபமேற்றி வழிபட்டோம்.

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்

ஒளியானைப் பாரோர்க்கு உதவும் அளியானைக்

கண்ணுவதுங் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்றாள்

நண்ணுவதும் நல்லோர் கடன்.

பானுரேகா, சென்னை

செல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், கணபதியை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக் குக் கைகூடுமாம். உள்ளம் எனும் அகலில் அன்பெனும் நெய் ஊற்றி விளக்கேற்றினோம்; இன்ப ஒளி நிறைந்தது!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

கற்பகமே தேனுவே காமருசிந் தாமணியே

அற்பகமார் ஐங்கையுடை ஆரமுதே - சிற்பமுறு

தந்தா வளமுகத்துத் தற்பரனே சாலவும்உ

வந்தாள நாயேன்முன் வா.

லாவண்யா, சென்னை

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்! சின்ன வயதிலிருந்தே அழகான குட்டிப் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து, மாலை சாத்தி பூஜை செய்வது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! இந்தமுறை விளக்கு வைத்து அலங்கரித்ததில் பூரண மகிழ்ச்சி!

‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை!

கற்பக விநாயகக் கடவுளே போற்றி

சிற்பர மோனத் தேவன் வாழ்க

வாரண முகத்தான் மலர்த்தோள் வெல்க

ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க.