Published:Updated:

மனதால் விளைவதே மகிழ்ச்சி!

மகிழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
மகிழ்ச்சி

பிரம்மா குமாரி முத்துமணி

மனதால் விளைவதே மகிழ்ச்சி!

பிரம்மா குமாரி முத்துமணி

Published:Updated:
மகிழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
மகிழ்ச்சி

வாழ்வே வரம் என்பது எவ்வளவு உன்னதமான விஷயம்! அதுவும் இறைவனின் வரம் என்றால் கேட்கவும் வேண்டுமா... அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது என்றால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். நினைத்துப் பார்க்கவே மனம் இனிக்கிறது. அதை அடைந்துவிட்டால்... முடியுமா, அப்படி ஒரு வாய்ப்பை அடைவது... கிடைக்குமா, அப்படி ஒரு பாக்கியம்... மனம் ஏக்கத்துடன் நினைக்கிறது அல்லவா!

ஏன் கிடைக்காது. அப்படி ஒன்று இருக்கும் என்றால், அதை அடைவ தற்கான வழியும் இருக்கும் அல்லவா. இருட்டறையில் எதையாவது தேடும்போது தடுமாற்றமும் ஏமாற்றமும்தான் மிஞ்சும். ஆனால், ஒரு விளக்கை ஏற்றிவைத்துவிட்டால், வேலை எவ்வளவு எளிதாகிவிடுகிறது, இதுவும் அப்படித்தான்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி

வரம் என்றால் மகிழ்ச்சி. வரம் என்றால் அதிர்ஷ்டம். வரம் என்றால் முன்னேற்றம், எழுச்சி, வளர்ச்சி, செழிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக, வரம் என்றால் உரிமை; அதுவும் தடைகளற்ற உரிமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரங்கள் நிறைந்த வாழ்வை அடைவதே நம் ஒவ்வொருவரின் கனவாக உள்ளது.

` சரி, வரங்களில் பலவகை உண்டு. அவற்றில் உடனடி யாகத் தேவைப்படும் வரம் என்ன’ என யாரிடம் கேட்டாலும், ஏழை – பணக்காரர், படித்தவர் – படிக்காதவர், ஆண் - பெண், சாதி – மதம், மொழி - கலாசாரம் பேதமின்றி வரும் பதில், ‘மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை’ என்பதாகத்தான் இருக்கிறது.

மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையதாக உள்ளன. அதுமட்டுமல்ல; இவை மற்ற அனைத்து வரங்களையும் தக்க தருணத்தில் நம் வாழ்வில் வரவழைத்துத் தரவல்லவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மகிழ்ச்சி, நிம்மதி என்னும் வரங்களை நம் வாழ்வில் எவ்வாறு அடைவது? மகிழ்ச்சி என்பது என்ன, அது யாரிடமிருந்து, எப்படி, எப்போது, எங்கே, எந்த அளவுக்குக் கிடைக்கும்?

ஒரு மான் குட்டி தன் தாகத்தைத் தீர்க்க அங்கும் இங்கும் தண்ணீர் தேடி அலைந்ததாம். சற்று தூரத்தில் சாலை முழுவதும் ஒரு பெரிய குளம் போல் தண்ணீர் நிறைந்து இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாகத் துள்ளிக்குதித்து அதைப் பருக ஓடியதாம்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி

அந்த இடத்துக்குச் சென்றதும் இன்னும் ஒரு 10 அடி துள்ளினால் அதை அடைய முடியும் என்பது போல் அந்தக் குளம் இடம்பெயர்ந்து வேறோர் இடத்தில் அமர்ந்துகொண்டதாம்.

தாகத்துடன் இருக்கும் மானுக்கு 10 அடி ஒருபொருட்டே அல்ல. அது மறுபடியும் துள்ளிக் குதிக்க... அதே கதை மீண்டும் மீண்டும் தொடர்கிறது. நாளின் இறுதியில் தண்ணீரே கிடைக்காமல் திரிந்ததுதான் மிச்சமாகியது,

நாம் ஒவ்வொருவரும் கானல்நீரைக் கண்ட மான் குட்டியைப்போல்தான் வாழ்கிறோம். மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் எத்தனை, எத்தனை?

காலையில் நேரத்துக்கு எழுந்தால் ஒரு மகிழ்ச்சி, உடலில் எந்த ஒரு வலியும் இல்லாமல் எழுந்தால் ஒரு மகிழ்ச்சி, தன் கடமைகளை எந்த ஒரு தடையுமின்றி நிறைவேற்றினால் அதில் ஒரு மகிழ்ச்சி, தன்னைச் சார்ந்தோர் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு மகிழ்ச்சி, நாம் விரும்பியதை அடைந்தால் அதில் ஒரு மகிழ்ச்சி… இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்கிறோம், தாகம் கொண்ட மான் குட்டியைப் போல. கடைசியில் அதன் தாகம் அதிகமானதுடன் மட்டும் அல்லாமல், அது தன் சக்தியையும் இழந்துவிட்டதே!

நம்மில் யார்தான், தான் அடைந்த அற்ப கால மகிழ்ச்சியைக் குறைந்த பட்சம் ஒரு நாளாவது தக்கவைத்துக் கொள்கிறார்கள்?

நாளின் முடிவில் படுக்கை யில் சாயும்போது, நிம்மதியாக உறங்குகிறோமா... இந்நாளைப் போல் எந்நாளும் இருக்க வரம் கேட்கிறோமா... அவ்வாறு நம் நாள் அமைகிறதா... அப்படியென்றால் மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் பணம் போல், ஒவ்வொரு நேரமும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதே!

கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் துக்கம். அடைந்தால் நிம்மதி, அடையாவிட்டால் துயரம். நடந்தால் சந்தோஷம், நடக்காவிட்டால் வலி. செய்தால் திருப்தி, செய்யாவிட்டால் வேதனை… உடம்பில் உயிர் இருப்பது போல வாழ்வில் வலி, வேதனை, மன அழுத்தம் இருப்பதும்கூட இயற்கையே என்று நாம் வாழத் தொடங்கிவிட்டோம். நம்மில் பலர், `வாழ்வில் சிறிதளவாவது மன அழுத்தம் அவசியம்' என்றும் நினைப்பது உண்டு!

இவ்வாறு எதிர்பார்த்து எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்த மனம், பின்னர் மற்றவர்களையும் பார்த்துவிட்டு ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்பது போல் அனைவரும் பிரச்னைகளோடுதான் அலைகின்றனர் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு, சங்கடங்களை சகஜமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகிறது.

மகிழ்ச்சி என்றால் என்னவென்று அறியாத வரையிலும் அதை நிரந்தரமாக அடையவே முடியாது. நம் தாத்தா - பாட்டிக்கு எளிதில் கிடைத்த மகிழ்ச்சி, இன்று நமக்கு எட்டாக்கனியாகி விட்டது. காரணம் என்ன?

அப்போது மனிதர்கள் அதிக மன சக்தியுடன் இருந்தார்கள். இப்போது மனித மன சக்தி குறைந்துவிட்டது. அதனால் அதிகமாக உழைத்து, அதிகம் செலவு செய்து, அதிக நேரம் செலுத்தி, அதிகம் கவனம்கொடுத்து, மின்னல் வேகத்தில் நம் வாழ்வில் வந்துபோகும் மகிழ்வை நாம் தேடித்தேடி, அலைந்து களைத்துவிட்டோம்.

இவ்வளவு முயற்சி செய்தும் ஒரு வெறுமை, தனிமை, இனம்புரியாத ஓர் ஏக்கம், பயம், பாதுகாப்பற்ற தன்மை... என ஏதோவொன்று நமக்குள் இருந்துகொண்டு நம்மை முழு மகிழ்ச்சி யுடன் வாழ விடாமல் தடுக்கிறது.

மகிழ்ச்சியடைவதும் அதை அனுபவிப்பதும் மிக எளிதானது. இருந்த இடத்திலேயே அதை அனுபவிக்கலாம். அதற்குப் பணம் தேவையில்லை. நேரம் தேவையில்லை. உங்கள் மனம் மட்டும் போதும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism