Published:Updated:

யாருக்கெல்லாம் கிடைக்கும் மோட்சம்? - குருவின் மகிமையைச் சொல்லும் திருக்கதை! - தினந்தோறும் திருவருள்

தினந்தோறும் திருவருள்
தினந்தோறும் திருவருள்

யாருக்கெல்லாம் கிடைக்கும் மோட்சம்? குருவின் மகிமையைச் சொல்லும் திருக்கதை! - தினந்தோறும் திருவருள்

குரு’ என்றால் 'கனமானது’, 'பெரிது’ என்று அர்த்தம். அதாவது, பெருமை உடையவர், மகிமை பொருந்தியவர் என்று அர்த்தம். 'கு’ என்பது இருட்டு; 'ரு’ என்றால் போக்குவது. ரொம்பவும் இருட்டாக இருப்பதை கும்மிருட்டு என்போம். இதில் உள்ள 'கு’ இருட்டைக் குறிப்பதுதான். ஆக, இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே 'குரு’வுக்கான அர்த்தமாகிறது. ஒரு மஹானை குரு என்று ஒருவன் நாடிப்போய் அவரின் சிஷ்யனாகிவிட்டானேயானால், அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார்!’

திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள்

குருவின் தரிசனமே நம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும் என்பது நம்பிக்கை

`மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச்

சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்று சொல்வார் தாயுமானசுவாமிகள்.

அதாவது, சில கோயில்களில் மூர்த்தி விசேஷம். அதேபோன்று தலமும் விசேஷமாக விளங்கும். அங்கு தீர்த்தமும் விசேஷமாக அமைந்துவிட்டால் அதன் மகிமை சொல்லர்க்கு அறியது. அப்படி மூன்று விசேஷமாக விளங்கும் தலத்துக்குச் சென்று இறைவனை முறையாக வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல் வார்த்தைகளைச் சொல்லி வழிநடத்தும் குரு வாய்ப்பார் என்கிறது இந்த வரிகள்.

இறைதரிசனமே செய்துவிட்டபின்பும் ஒருவருக்கு குரு தேவையா? தேவை என்று தான் சொல்கின்றன நம் ஞான மரபு. குருவே நமக்கு சரியான பாதையைக் காட்டுபவர். அவரே அக்காலமும் நமக்குள் அஞ்ஞானம் நேராமல் பார்த்துக்கொள்பவர். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இறைவனின் திருவடிப்பேறு வாய்க்கும் என்கின்றன ஞான நூல்கள். இதை விளக்கும் நிகழ்வுகள் அநேகம் நம் ஆன்மிகத்தில் உள்ளன. அப்படியான ஒரு நிகழ்வை நமக்காக இன்றைய தினந்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கிறார் சுமதிஸ்ரீ.

அடுத்த கட்டுரைக்கு