Published:Updated:

மகாளய பட்சம் : முக்கிய தினங்கள்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன?

மகாளய பட்சம்

இந்த ஆண்டு மகாளய பட்ச நாள்களில் முக்கிய திதிகள் எவை? செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

மகாளய பட்சம் : முக்கிய தினங்கள்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன?

இந்த ஆண்டு மகாளய பட்ச நாள்களில் முக்கிய திதிகள் எவை? செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Published:Updated:
மகாளய பட்சம்
பட்சம் என்றால் 15 நாள்கள் கொண்ட கால அளவைக் குறிக்கும். 'மஹாளய பட்சம்' என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும். இந்தப் பதினைந்து நாள்களும், முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகம் வந்து நம்மிடையே தங்கும் புண்ணிய தினங்களாகக் கருதப்படுகின்றன. எனவே இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுதான் பிரதானம்.

இந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர் வழிபாடே பிரதானம். எல்லா நாள்களும் முன்னோர்களை வழிபட்ட பிறகே வழக்கமான பூஜைகளைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்தபிறகே வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிப் பிற பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு மகாளய பட்ச நாள்களில் முக்கிய திதிகள் எவை? செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

மகாளய அமாவாசை
மகாளய அமாவாசை

மறந்து போனவர்களை மாகாளயத்தில் சேர்

15 நாள்களும் முன்னோர்களை வழிபட பல்வேறு புண்ணிய பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் ஒரு பலன் உண்டு. மனமார நாம் பிரார்த்தனை செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் செல்வம், புத்திர பாக்கியம், சத்ரு ஜயம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியன கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

தந்தையில்லாதவர்கள் ஒவ்வொரு மாத அமாவாசையின் போதும் குடும்பத்தின் மூன்று தலைமுறை ஆண், பெண்களுக்கே தர்ப்பணம் செய்வது வழக்கம். சிராத்த காரியங்களும் அவ்வாறே நடைபெறும். ஆனால் மஹாளய பட்சத்தின் போது யாருக்காக வேண்டுமானாலும் நாம் தர்ப்பண காரியங்களைச் செய்ய இயலும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாய்வழி, தந்தை வழி உறவினர்கள், உடன்பிறந்தவர்கள், மகன் அல்லது மகள் அவர்களின் உறவினர்கள், குரு, நெருங்கிய நண்பன் என இறந்த அனைவருக்கும் தர்ப்பணம் செய்து அவர்களுக்கும் நற்கதி ஏற்பட வழிசெய்யலாம். இவ்வாறு செய்யும் கர்த்தாவுக்கு சகல ஆசிகளையும் பித்ருக்கள் வழங்குவார்கள் என்பது ஐதிகம்.

இந்தப் பதினைந்து நாள்களும் சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படும். வீடுகளில் இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுகளை முடித்த பின்னே கோலமிடுதல் விளக்கேற்றுதல் போன்ற வழக்கமான கடமைகளைச் செய்யவேண்டும்.

இந்தப் பதினைந்து நாள்களும் உணவில் சாத்வீகத் தன்மை உள்ள உணவுகளையே உண்ண வேண்டும். கேளிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் நாம ஜபங்களைச் செய்துவர வேண்டும்.

மகாளய பட்சம் 2021
மகாளய பட்சம் 2021

தவறவிடக் கூடாத மகாபரணி, மத்யாஷ்டமி, துவாதசி

மகாபரணி மற்றும் மத்யாஷ்டமி தினங்கள் மிகவும் முக்கியமானவை. திதிகள் எதுவென்று அறியாதவர்கள் இந்த நாள்களில் பித்ரு காரியங்களைச் செய்யலாம். இதன் மூலம் உரிய ஆத்மாக்களுக்கு இதன் பலன் சென்றடையும். இந்த ஆண்டு மகாபரணி திதி 14.9.22 அன்றும் மத்யாஷ்டமி 18.9.22 அன்றும் வருகின்றன. எனவே இந்த நாள்களில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

துவாதசி 22.9.22

குடும்பத்தில் யாரேனும் சந்நியாசம் பெற்று இறந்திருந்தால் அவர்களுக்குத் தர்ப்பணம் முதலிய கர்ம காரியங்களைச் செய்யும் நாள் துவாதசி. இதன்மூலம் செய்யும் கர்த்தாவுக்குப் புண்ணியபலன்கள் கூடி சகல செல்வங்களும் ஸித்திக்கும்

மகாளய அமாவாசை - 25.9.22

இந்த நாள் மிகவும் முக்கியமானது. ஆண்டு முழுவதும் மாதம்தோறும் அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டாலும் மகாளய அமாவாசை நாளில் வழிபடுவது மிகவும் விசேஷம் என்பார்கள். ஓர் ஆண்டில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் முக்கியமானவை. இவற்றில் மையமாக இருக்கும் புரட்டாசி அமாவாசை முன்னோர்கள் நம்மோடு பூலோகத்தில் தங்கியிருக்கும் தினம். எனவே அந்த நாளில் தவறாமல் அவர்களை நினைத்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் நீர் நிலைகளுக்கு அருகில் சென்று முறைப்படித் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர்கள் வீட்டிலேயே படையல் போட்டு வழிபட வேண்டும். மகாளய அமாவாசை அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் அமாவாசையில் வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாளய பட்சம்
மகாளய பட்சம்

மகத்தான மகாளய தானம்

'மகாளய தானம் மகத்தான தானம்' என்பார்கள். இந்நாளில் வஸ்திர தானம்ம் அன்னதானம், குடை, காலணி, போர்வை ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் நம் இல்லத்தில் இல்லாமை நீங்கி செல்வ வளம் சேரும். மேலும் கோதானம் செய்வது, பசுக்களுக்கு உணவு வழங்க உதவுவது ஆகியன நம் தீராத பிரச்னைகளுக்குத் தீர்வாக மாறும். நம் முன்னோர்கள் நாம் செய்யும் தானங்களைப் பார்த்து நம் சந்ததியினர் நல்ல வழியில் வாழ்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை. எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களைச் செய்து வழிபடுவோம்.